For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த டயட்டை கடினமா பாலோ பண்ணுனதால நடிகையின் உயிரே போயிருச்சாம்... உஷாரா இருங்க...!

துரதிர்ஷ்டவசமாக சில டயட்டுகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது. ஏனெனில் அனைத்து டயட்களும் ஆரோக்கியமானது இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.

|

டயட் என்பது நமது உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து நம் உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக சில டயட்டுகள் நமக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மாறிவிடுகிறது. ஏனெனில் அனைத்து டயட்களும் ஆரோக்கியமானது இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது.

Lesser Known Facts About Keto Diet in tamil

டயட் முறைகள் மீது பயமும், சந்தேகமும் ஏற்படக் காரணம் சமீபத்தில் நேர்ந்த இளம் நடிகையின் மரணமாகும். சிறுநீரக செயலிழப்பு காரணமாக 27 வயதான நடிகை மிஷ்டி முகர்ஜியின் திடீர் மறைவிற்கு காரணம் அவர் நீண்ட நாட்காளாக கடினமாக பின்பற்றிய கீட்டோ டயட்தான் என்று கூறப்படுகிறது. இதனால் உடற்பயிற்சி ஆர்வலர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் கடுமையான குழப்பத்தில் உள்ளனர். கீட்டோ டயட் குறித்து பலரும் அறியாத சில உண்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழப்பை ஏற்படுத்தும்

நீரிழப்பை ஏற்படுத்தும்

நீங்கள் கீட்டோ டயட் முறையைத் தொடங்கும்போது மனித உடலில் நிகழும் பொதுவான நிகழ்வு இது. இது நடக்க காரணம் என்னவெனில் உங்கள் உடல் கார்போஹைட்ரேஸ்க்கு பதிலாக கொழுப்பை எரிக்கிறது மற்றும் கீட்டோன்களை உருவாக்குகிறது, இது அதிகரித்த சிறுநீர் கழித்தல் வழியாக அனுப்பப்பட வேண்டும். இது நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை இழக்க வழிவகுக்கும். உடலில் நீரிழப்பு ஏற்படும்போது அது நேரடியாக சிறுநீரகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.

நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்

நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளை சந்திக்க நேரிடும்

ஆய்வுகளின் படி கீட்டோ உணவில் உங்கள் உடலுக்கு 60% முதல் 80% வரை உணவு உட்கொள்ளல் கொழுப்பாகவும் மற்றும் 10% க்கும் குறைவான கார்போஹைட்ரேட்ஸ் தேவைப்படுகிறது, இது பல பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ணும் பழக்கத்தை நீக்கிவிடும். ஏனெனில் அவற்றில் பல இயற்கையாகவே அதிகளவு கார்போஹைரேட்டைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

MOST READ: உலகையே அழகால் மயக்கிய கிளியோபாட்ராவின் மரணத்தில் இருக்கும் மர்மங்கள்... அதிர்ச்சியளிக்கும் வரலாறு..!

மன ஆரோக்கியத்தை பாதிக்கும்

மன ஆரோக்கியத்தை பாதிக்கும்

ஒழுக்கமான வாழ்க்கை என்பது மிகவும் அவசியமானது, ஆனால் உடலில் அதன் அதிக அழுத்தம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். கீட்டோ டயட் மூலம், மைக்ரோ மேனேஜ்மென்ட்டுக்கு பல கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன. அது உங்களை மனரீதியாக சோர்வடையச் செய்யலாம். கடினமான கார்ப்ஸ் கண்காணிப்பு முதல் சமூக வாழ்க்கையை வேண்டாம் என்று சொல்வது வரை, கீட்டோ டயட் சோர்வாகவும், உணர்ச்சிரீதியாகவும், மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் உங்களை பலவீனமாக உணரவைக்கும்.

கீட்டோ க்ரோட்ச்

கீட்டோ க்ரோட்ச்

கீட்டோ க்ரோட்ச் உணவில் தீவிர மாற்றத்துடன் வரும் பி.எச் அளவின் மாற்றத்தால் நிகழ்கிறது. கீட்டோ க்ரோட்சின் மிகவும் பொதுவான அறிகுறி, இது நிகழும்போது, உடல் சில துர்நாற்றங்களை வெளியிடுகிறது. பெண்களில் இது யோனி pH ஐ மாற்றக்கூடும், இது யோனி வாசனையை மாற்றுகிறது.

MOST READ: நீண்ட காலம் செக்ஸ் இல்லாமல் இருந்தால் உங்கள் மூளையில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா?

கீட்டோ காய்ச்சல்

கீட்டோ காய்ச்சல்

நமது உடல் கார்போஹைட்ரட்ஸ்க்கு மிகவும் பழக்கமாகிவிட்டது, திடீரென்று கொழுப்புக்கு மாறுவது உடலை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது மற்றும் அதிர்ச்சி கீட்டோ காய்ச்சல் வடிவத்தில் வருகிறது. இது பொதுவாக சோர்வு, குமட்டல், தலைவலி மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lesser Known Facts About Keto Diet in tamil

Check out lesser known facts about Keto Diet you need to know.
Desktop Bottom Promotion