Latest Updates
-
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது..
தினமும் இத்தனை தடவ நீங்க நடந்தீங்கனா... உங்க உடல் எடை குறைவதோடு இதய நோயும் வராதாம்...!
கூடுதல் கிலோவைக் குறைக்க ஒருவர் குறைந்தபட்சம் 15,000 படிகள் நடக்க வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டியுள்ளது. ஆம், நீங்கள் இதை பின்பற்றி வந்தால் உங்க எடை குறையும்.
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால், அது உடல் பருமன்தான். உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வரலாம். ஆனால், ஏதும் உங்களுக்கு பலன் தரவில்லை என்றால், கவலை வேண்டாம். எளிமையான நடைப்பயிற்சியே உங்கள் உடைகள் எடையை ஈஸியாக குறைக்கும் என்கிறது ஆய்வுகள். ஆரோக்கியமாகவும் உடல் வலிமையாகவும் இருக்க ஒரு நாளைக்கு 10,000 படிகள் நடந்து செல்வது போதுமானது என்று நாம் அனைவரும் உணர்கிறோம்.

நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முயற்சிப்பவர்களுக்கு இது போதுமானதாக இருக்கும்போது, உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் நடக்க வேண்டியிருக்கும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், ஒவ்வொரு நாளும் நீங்கள் எத்தனை படிகள் நடக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு இக்கட்டுரையில் சொல்கிறோம்.

எடை இழப்புக்கு நீங்கள் நடக்க வேண்டிய படிகளின் எண்ணிக்கை
கூடுதல் கிலோவைக் குறைக்க ஒருவர் குறைந்தபட்சம் 15,000 படிகள் நடக்க வேண்டும் என்று ஒரு புதிய ஆய்வு காட்டியுள்ளது. ஆம், நீங்கள் இதை பின்பற்றி வந்தால் உங்க எடை குறையும்.

ஆய்வு
ஒரு சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட 2017 ஆம் ஆண்டின் ஆய்வின்படி, உங்கள் உடல்நிலையைப் பராமரிக்கவும் உடல் எடையை குறைக்கவும் ஒவ்வொரு நாளும் நீங்கள் நடக்க வேண்டிய படிகளின் துல்லியமான எண்ணிக்கை 15,000 படிகள் என்று தெரிவித்துள்ளது.

ஆய்வு கூறுவது
உட்கார்ந்த அலுவலக ஊழியர்களின் வாழ்க்கையை தபால்காரங்களின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 15,000 படிகள் நடந்து செல்லும் தபால் ஊழியர்கள் தங்கள் வேலையின் படி, சாதாரண உடல் நிறை குறியீட்டெண், இடுப்பு அளவீடுகள் மற்றும் வளர்சிதை மாற்ற சுயவிவரங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தனர்.

இதய நோய்
இந்த நபர்களுக்கும் இதய நோய்கள் குறைவு. மறுபுறம், நீண்ட நேரம் உட்கார்ந்திருந்த தொழிலாளர்கள் அதிக இடுப்பு மற்றும் எலும்பு பிரச்சனைகள், அதிக பி.எம்.ஐக்கள், மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் கொழுப்பு சுயவிவரங்கள் மற்றும் இதய நோய்களுக்கு அதிக ஆபத்தை கொண்டிருந்தனர்.

போதுமான படிகள் நடப்பதை எவ்வாறு உறுதி செய்வது?
உங்கள் குறைந்தபட்ச இலக்கு ஒவ்வொரு நாளும் 15,000 படிகளுக்கு அருகில் இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இது 2 மணிநேர விறுவிறுப்பான நடைக்கு சமம். நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு மணி நேரம் நடக்க முடியாவிட்டால், உங்கள் நடை 30 நிமிடங்களுக்கு நான்கு பகுதிகளாக பிரித்து நடக்கலாம்.

எப்படி நடக்கலாம்?
நீங்கள் எழுந்ததும், மதிய உணவுக்கு முன், மதிய உணவுக்குப் பிறகு, இரவு உணவிற்குப் பிறகு என ஒவ்வொரு நாளும் நடக்கலாம். அது முடியாவிட்டால், உங்கள் மேசையிலிருந்து அடிக்கடி எழுந்து உங்கள் வீட்டைச் சுற்றி வாருங்கள் அல்லது வேலைக்கு இடையில் இரண்டு மாடி படிக்கட்டுகளில் ஏறி இறங்குங்கள்.

உடல் எடையை பராமரிப்பது
ஒவ்வொரு நாளும் 15,000 படிகள் நடப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்கள் வளர்சிதை மாற்றத்தை ஜம்ப்ஸ்டார்ட் செய்யும். இது இறுதியில் கூடுதல் கிலோவைக் குறைத்து உங்கள் எடையை பராமரிக்க உதவும்.



Click it and Unblock the Notifications