Latest Updates
-
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
தீபாவளி அன்று பளபளன்னு ஜொலிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குளை போடுங்க.. -
இராவணனுக்கு தங்க நகரமான இலங்கை எப்படி கிடைத்தது? அதை இராவணனுக்கு கொடுத்தது யார் தெரியுமா? -
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும் -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க
உங்க உடல் எடையை குறைக்க வெள்ளரிக்காயை எப்ப சாப்பிடணும்? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது.
வெள்ளரிக்காய் போன்ற நீர்சத்து நிறைந்த உணவுகள் கோடைகாலத்தில் சிறந்த உணவுகளாக மட்டுமல்லாமல், உங்கள் எடை குறைப்பு திட்டத்திற்கும் ஒரு சிறந்த கூடுதலாகின்றன. வெள்ளரிகளில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. மேலும், இதில் எடை இழப்புக்கு உதவும் பிற பண்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

நீங்கள் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை செய்து தோல்வி அடைந்துள்ளீர்களா? கவலையை விடுங்க. உங்கள் உடலின் எடையை கணிசமாக குறைக்க வெள்ளரிக்காய் உங்களுக்கு உதவும். நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க முயற்சிக்கும் ஒருவராக இருந்தால், உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை ஏன் சேர்க்க வேண்டும் என்பது குறித்து இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

எடையை குறைக்க எவ்வாறு உதவும்?
எடை இழப்புக்கான எளிய விதி என்னவென்றால், நீங்கள் எரிக்கிறதை விட குறைவான கலோரிகளை உட்கொள்வதன் மூலம் கலோரி பற்றாக்குறையை உருவாக்குகிறது. வெள்ளரி போன்ற உணவுகளில் கலோரிகள் குறைவாக இருப்பதால் கலோரி பற்றாக்குறையை உருவாக்க உதவுகிறது.

வெள்ளரிக்காயில் கலோரிகள்
ஒரு கப் வெட்டப்பட்ட வெள்ளரிக்காயில் 14 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது எடை இழப்பு உணவில் அனுமதிக்கப்பட்ட தினசரி கலோரிகளில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காயில் 24 கலோரிகள் மட்டுமே உள்ளன. இது மிகவும் குறைந்த அடர்த்தி கொண்ட உணவாக இருக்கும். இதுபோன்ற உணவுகளை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்றுவது எடை இழப்புக்கு நன்மை பயக்கும், ஏனெனில் அவை குறைந்த எண்ணிக்கையிலான கலோரிகளை நிரப்புகின்றன.

பிற ஊட்டச்சத்து நன்மைகள்
ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் சாப்பிடுவது வைட்டமின் கே இன் தினசரி மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை உங்களுக்கு வழங்குகிறது. இது இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கால்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி தினசரி மதிப்பில் 7 சதவீதத்தை ஒரு நடுத்தர அளவிலான வெள்ளரிக்காய் உங்களுக்கு வழங்குகிறது. வைட்மைன் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருக்கும் கொலாஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.

ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகிறது
வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன மற்றும் ஒரு நல்ல அளவு ஆண்டிபயாடிக் கொண்டிருக்கின்றன. இந்த ஊட்டச்சத்து அனைத்தும் உற்சாகமடைந்து சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.

வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கான சிறந்த வழி
வெள்ளரிக்காயை சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம். சாலட்களில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது உங்களை அதிக நேரம் முழுமையாக வைத்திருக்கும். இதனால், நீங்கள் அதிக அளவில் சாப்பிடுவதை இது தடுக்கும். ஒரு சுவையான சாலட் தயாரிக்க தக்காளி, வெள்ளரி, முள்ளங்கி, கேரட் ஆகியவற்றை சிறிது வெங்காய சாறு மற்றும் உப்பு சேர்த்து செய்யலாம். கீரை இலைகள் மற்றும் பெல் மிளகு ஆகியவற்றைக் கொண்டு ஒரு வெள்ளரி சாலட் தயாரிக்கவும் முயற்சி செய்யலாம்.

வெள்ளரி பானம்
புத்துணர்ச்சியூட்டும் மற்றும் நிரப்பும் வெள்ளரி பானம் தயாரிக்க, வெள்ளரிக்காயை நறுக்கி, சிறிது எலுமிச்சை சேர்த்து ஒரு நல்ல கலவையாக அறைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அதில், புதினா இலைகள், துளசி இலைகள், சர்க்கரை அல்லது உப்பு மிதமான அளவு சேர்த்து அருந்தலாம். நீங்கள் இன்னும் கீரை, காலே அல்லது செலரி கூட இதில் சேர்க்கலாம்.

வெள்ளரி நூடுல்ஸ் முயற்சித்தீர்களா?
நீங்கள் வெள்ளரிக்காய் நூடுல்ஸை செய்ய முயற்சித்தீர்களா? சீமை சுரைக்காய் போலவே, வெள்ளரி நூடுல்ஸையும் சுழல் கட்டர் உதவியுடன் செய்யலாம். வெள்ளரிக்காய் உங்களுக்கு பாஸ்தாவின் சுவையைத் தராது.ஆனால் இது ஒரு மிருதுவான சுவையை வழங்குகிறது. இது பேஸ்ட் அடிப்படையிலான உணவுகளுக்கு நல்ல வேலை செய்கிறது.

உதவிக்குறிப்பு
வெள்ளரிக்காயில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. எனவே, வெள்ளரிக்காயை உட்கொண்ட உடனேயே தண்ணீரை உட்கொள்ள வேண்டாம். அவ்வாறு செய்வது வயிற்று வலியை ஏற்படுத்துவதோடு, காய்கறியில் உள்ள ஊட்டச்சத்துக்களை நீர்த்துப்போகச் செய்யும். மேலும், உங்கள் படுக்க செல்வதற்கு முன்பு வெள்ளரிக்காயை உட்கொள்ள வேண்டாம். அது வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.



Click it and Unblock the Notifications
