வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெற வாக்யூம் உடற்பயிற்சி செய்யுங்க...

எல்லாருக்கும் தொப்பையை குறைப்பது தான் பெரும் பாடாக இருக்கும். ஆனால் இப்போது நாங்கள் கூறும் உடற்பயிற்சி உங்கள் தொப்பையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும்.

எல்லாருக்கும் தொப்பையை குறைப்பது தான் பெரும் பாடாக இருக்கும். நீண்ட தூரம் ஓடி இருப்போம், வித்தியாசம் வித்தியாசமாக உடற்பயிற்சியும் செய்து பார்ப்போம், இதுல டயட் வேற ஆனா தொப்பை என்னவோ குறைந்திருக்காது. இப்படி அப்படி என்று செய்தும் தொப்பையில் என்னவோ வியத்தகு முன்னேற்றம் இருக்காது.

ஆனால் இப்போது நாங்கள் கூறும் உடற்பயிற்சி உங்கள் தொப்பையில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும். தொடர்ந்து செய்யும் போது நீங்களே அசரும் வகையில் தொப்பையில் உள்ள கொழுப்புகள் குறைந்து தட்டையான வயிற்றை பெறுவீர்கள். இந்த உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், நீர்ச்சத்து இவற்றையும் எடுத்துக் கொண்டால் சீக்கிரமே மாற்றத்தை காண்பீர்கள். அப்புறம் என்னங்க எக்ஸ்சைஸ் பண்ண நீங்க ரெடியா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உள் மற்றும் வெளிப்புற அடிவயிற்று பகுதிகள்:

உள் மற்றும் வெளிப்புற அடிவயிற்று பகுதிகள்:

வெளிப்புற வயிறு

நம்முடைய அடிவயிற்று பகுதியில் வெளியேயும், உள்ளேயும் தசைகள் காணப்படுகிறது. வெளிப்புற தசைகள் ரெக்டஸ் அடிவயிறு என்று அழைக்கப்படுகின்றன. நம்முடைய அடிவயிற்று கொழுப்பை கரைக்க க்ரஞ்சஸ் உடற்பயிற்சி ஏற்றது. இதன் மூலம் அடிவயிற்றில் நெகிழ்வுத் தன்மை ஏற்படுகிறது. இது ஒரு எளிமையான உடற்பயிற்சி மட்டுமல்ல. இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செய்யலாம். க்ரஞ்சஸ் செய்யும் போது வயிற்றுப் புற தசைகள் சுருங்கி விரிந்து வேலை செய்கிறது. இதனால் அங்குள்ள கொழுப்புகள் விரைவில் கரைகின்றன. உங்கள் முழங்காலை தூக்கி வயிற்று வரை கொண்டு வருவது உங்க அடிவயிற்று பகுதிக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி.

உட்புற அடிவயிற்று பகுதி

உட்புற அடிவயிற்று பகுதி

நம்முடைய உட்புற வயிற்று தசைகள் டிரான்ஸ்வெர்சஸ் அடிவயிற்று மற்றும் லும்பர் மல்டிஃபிடஸைக் கொண்டுள்ளன. இந்த தசைகள் ரெக்டஸ் அடிவயிற்று மற்றும் வெளிப்புற சாய்வுகளுக்கு கீழே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தசைகள் தான் ஆழமான உடற்பயிற்சி செய்யும் போது சுவாசத்தை கட்டுப்படுத்துகிறது. அடிவயிற்றிற்கு இந்த தசைகள் நல்ல தோரணையை தருகிறது. உட்புற அடிவயிற்று பகுதி உங்களுக்கு பின்பக்க பலமாகவும், குறுக்கு வயிறு உங்களுக்கு நல்ல தோரணையையும் தரக்கூடியது. எனவே உள் வயிற்று சுவர் வலுவாக இருந்தால் நீங்கள் முதுகு வலியை கட்டுப்படுத்த முடியும்.

வாக்யூம் உடற்பயிற்சி எப்படி?

வாக்யூம் உடற்பயிற்சி எப்படி?

க்ரஞ்சஸ் உடற்பயிற்சியால் வெளிப்புற வயிறு மட்டும் தான் அதிகளவில் ஈடுபடும். ஆனால் வாக்யூம் உடற்பயிற்சியில் வெளிப்புற வயிறு, உட்புற வயிறு, உதரவிதானம் இப்படி மூன்றும் ஒன்று சேர்ந்து ஈடுபடுகின்றன. இதனால் உங்கள் வயிற்றை தட்டையாக மாற்றி, நீங்கள் அசத்த முடியும். சரி வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த வாக்யூம் உடற்பயிற்சி ஒரு சூப்பர் உடற்பயிற்சி என்றே கூறலாம். ஏனெனில் இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். இதற்கு என்று எந்த உபகரணமும் தேவையில்லை. அதுமட்டுமல்லாமல் நின்று கொண்டோ, முழங்காலிட்டுக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ இப்படி எந்த நிலையில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். இது டிரான்ஸ்வெர்சஸ் அடிவயிற்றின் ஒரு ஐசோமெட்ரிக் சுருக்கமாகும். ஒரு ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டு வயிற்றை உள்ளே இழுக்க வேண்டும். அது தான் இந்த உடற்பயிற்சியின் நிலை.

செய்யும் முறை:

செய்யும் முறை:

* முதலில் எழுந்து நின்று உங்கள் இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ளுங்கள்.

* ஒரு ஆழ்ந்த சுவாசத்தை இழுத்து நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் இதே நிலையில் நிற்க வேண்டும். பிறகு 60 விநாடிகள் உங்கள் வயிற்றை உள் நோக்கி இழுத்து பிடிக்க வேண்டும். அப்பொழுது சிறிய சுவாசங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதைச் செய்யும் போது உங்கள் வயிற்று தசைகளை தளர்த்த கூடாது.

* மெதுவாக சுவாசித்து கொண்டே உங்க தொப்புள் முதுகெலும்பை தெடுகிற மாதிரி வயிற்றை உள் நோக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். நீங்கள் செய்து வர செய்து வர சரி ஆகி விடும்.

* பிறகு வயிற்று தசைகளை தளர்த்தி பழைய நிலைக்கு வாருங்கள். பிறகு ஒரு ஆழ்ந்த சுவாசத்தை மேற்கொண்டு மறுபடியும் நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி கொள்ளுங்கள். மறுபடியும் வயிற்றை உள்நோக்கி பிடித்து மெதுவாக சுவாசித்துக் கொள்ளுங்கள். இப்படியே பலமுறை செய்து வாருங்கள்.

எத்தனை முறை செய்யலாம்?

எத்தனை முறை செய்யலாம்?

வாக்யூம் உடற்பயிற்சியை ஒரு வாரத்தில் 3 நாளைக்கு 3 தடவை செய்து வந்தால் நல்ல தட்டையான வயிற்றை பெற முடியும்.

வாரம் 1 : 3 தடவை 20 நிமிடங்கள்

வாரம் 2 : 3 தடவை 40 நிமிடங்கள்

வாரம் 3 : 3 தடவை 60 நிமிடங்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக நிமிடங்களை கூட்டி செய்து வாருங்கள். தட்டையான வயிற்றை பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion