For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க காலில் இப்படி இருக்கா? அப்படின்னா உடம்புல இது அதிகமா இருக்குன்னு அர்த்தம்...

இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், அது வலிமிக்க கீல்வாதத்தை உண்டாக்கும். எனவே தான் உண்ணும் உணவுகளில் எப்போதுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகின்றனர்.

|

யூரிக் அமிலம் என்பது ஒரு இயற்கையான கழிவுப் பொருளாகும். இது ப்யூரின் நிறைந்த உணவுகள் செரிமானவதைத் தொடர்ந்து உடலில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள். ப்யூரின் என்பது கார்பன் மற்றும் நைட்ரஜன் அணுக்களால் ஆனா ஒரு இரசாயன சேர்மங்கள் ஆகும். இவை உடலால் உடைக்கப்படுகின்றன. நாம் எப்போது ப்யூரின் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோமோ, அப்போது நம் உடல் அதை ஜீரணிக்க தவறக்கூடும். இது உடலில் யூரிக் அமில அளவுகள் அதிகரிக்க வழிவகுக்கும். இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகமாக இருக்கும் நிலையை ஹைப்பர்யூரிசிமியா என்று அழைப்பர்.

Foods to eat and to avoid to maintain uric acid levels in the body

இரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமானால், அது வலிமிக்க கீல்வாதத்தை உண்டாக்கும். எனவே தான் உண்ணும் உணவுகளில் எப்போதுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம் என்று கூறுகின்றனர். ஒருவேளை உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருந்தால், அத்தகையவர்கள் அவர்களது டயட் மற்றும் உணவுப் பழக்கத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அதோடு ப்யூரின் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்ப்பதுடன், அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்யும் திறன் குறையக்கூடும்.

MOST READ: சர்க்கரை நோய் இருக்குன்னு கவலைப்படுறீங்களா? நீண்ட நாள் ஆரோக்கியமா இருக்க இத செய்யுங்க போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைப்பர்யூரிசிமியா ஏன் ஏற்படுகிறது?

ஹைப்பர்யூரிசிமியா ஏன் ஏற்படுகிறது?

உடலில் ப்யூரின் உடைக்கப்படும் போது யூரிக் அமிலம் உருவாகிறது. இத்தகைய ப்யூரின் பின்வரும் உணவுகளில் அதிகமாக உள்ளன. அவை:

* மாட்டிறைச்சி

* உறுப்பு இறைச்சி

* கடல் உணவுகள்

* பீன்ஸ்

பொதுவாக, உடலானது சிறுநீரின் வழியே யூரிக் அமிலத்தை தானாக வெளியேற்றிவிடும். ஆனால் ஹைப்பர்யூரிசிமியாவானது உடலில் அதிகளவிலான யூரிக் அமிலம் உருவாகும் போது அல்லது போதுமான அளவு உடலில் இருந்து வெளியேற்றப்படாமல் இருக்கும் போது ஏற்படுகிறது. சிறுநீரகங்கள் இந்த யூரிக் அமிலங்களை விரைவாக வெளியேற்றப்படால் இருக்கும் போது இது நிகழ்கிறது.

ஹைப்பர்யூரிசிமியா எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

ஹைப்பர்யூரிசிமியா எம்மாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

இரத்தத்தில் யூரிக் அமில அளவு அதிகமானால், அது உடலில் படிகங்கள் உருவாக வழிவகுக்கும். இந்த படிகங்கள் உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் பெரும்பாலும் அவை மூட்டுக்களைச் சுற்றியும், சிறுநீரகங்களிலும் உருவாகும். உடலைப் பாதுகாக்கும் இரத்த வெள்ளையணுக்கள் இந்த படிகங்களைத் தாக்கும் போது, அது வீக்கத்துடன், கடுமையான வலியையும் ஏற்படுத்தும்.

யாருக்கெல்லாம் ஹைப்பர்யூரிசிமியா ஏற்பட வாய்ப்புள்ளது?

யாருக்கெல்லாம் ஹைப்பர்யூரிசிமியா ஏற்பட வாய்ப்புள்ளது?

ஹைப்பர்யூரிசிமியா யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் இது பெண்களை விட ஆண்களிடையே பொதுவானது மற்றும் வயதிற்கு ஏற்ப ஆபத்தும் அதிகமாக உள்ளது. யாருக்கெல்லாம் ஹைப்பர்யூரிசிமியா வருவதற்கு வாய்ப்புள்ளது என்பதைப் பார்ப்போம்.

* மதுப் பழக்கம்

* இதய நோய்க்கு எடுக்கும் சில மருந்துகள்

* ஈய வெளிப்பாடு

* பூச்சிக்கொல்லி வெளிப்பாடு

* சிறுநீரக நோய்

* உயர் இரத்த அழுத்தம்

* உயர் இரத்த சர்க்கரை அளவு

* ஹைப்போ தைராய்டிசம்

* உடல் பருமன்

* தீவிரமான உடற்பயிற்சிகளை செய்வோர்

உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை ஒருசில உணவுகளை உண்பதன் மூலம் குறைக்கலாம். அதோடு ஒருசில உணவுகளைத் தவிர்க்கவும் வேண்டும். இப்போது இவற்றைக் குறித்து காண்போம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

சாப்பிட வேண்டிய உணவுகள்:

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் சிறப்பான உணவுப் பொருள். இதில் உள்ள மாலிக் அமிலம், யூரிக் அமிலத்தை உடைதெறிவதோடு மட்டுமின்றி, உடலில் இருந்து வெளியேற்றவும் செய்யும்.

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்கள்

பெர்ரி பழங்களில் வைட்டமின் சி மட்டுமின்றி, அந்தோசையனின் என்னும் சேர்மம் அதிகமாக உள்ளது. இது உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தால் சந்திக்கும் மூட்டு வலியைக் குறைக்க உதவும். ஆகவே பெர்ரிப் பழங்களை உணவில் அதிகம் சேர்ப்பது மிகவும் நல்லது.

நார்ச்சத்து உணவுகள்

நார்ச்சத்து உணவுகள்

அதிகப்படியான யூரிக் அமிலத்தால் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. முழு தானிய உணவுகள் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவு மட்டுமின்றி, அதில் நார்ச்சத்து மற்ற உணவுகளை விட அதிகமாக உள்ளது. இந்த நார்ச்சத்து இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தை உறிஞ்சி, திறம்பட உடலில் இருந்து வெளியேற்றும்.

எலுமிச்சை

எலுமிச்சை

சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள அதிகளவிலான யூரிக் அமிலத்தைக் கரைத்து வெளியேற்ற உதவும். இத்தகைய சிட்ரிக் அமிலம் எலுமிச்சையில் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே எலுமிச்சையை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

இறைச்சிகள்

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், முதலில் இறைச்சி உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் மாட்டிறைச்சி, கொத்துக்கறி, கடல் உணவுகளான கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் பிற மீன்களையும் தவிர்க்க வேண்டும்.

பருப்புகள்

பருப்புகள்

பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது மற்றும் இது உடலில் அதிகப்படியான ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடியவை. ஆனால் உடலில் யூரிக் அமிலம் அதிகளவில் இருந்தால், இந்த வகை உணவுகளைத் தவிர்த்து தான் ஆக வேண்டும்.

சர்க்கரை நிறைந்த பானங்கள்

சர்க்கரை நிறைந்த பானங்கள்

சர்க்கரை நிறைந்த பானங்களான சோடா, எனர்ஜி பானங்கள் போன்றவற்றை அறவே தொடக்கூடாது. இத்தகைய பானங்கள் ஹைப்பர்யூரிசிமியாவால் கஷ்டப்படுபவர்களுக்கு மிகவும் ஆபத்தான பானங்களாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods To Eat And To Avoid To Maintain Uric Acid Levels In The Body

Uric acid is a natural waste product that is discharged from the body following the digestion of the foods that are rich in purines.
Desktop Bottom Promotion