For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியமான டயட்டைப் பின்பற்றும் போது நினைவில் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!

ஆரோக்கியமான உணவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? புதுமை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கு இடையில் ஆரோக்கியமான உணவு டயட்டைன் கண்டுபிடிப்பது ஒரு கடினமான செயல் தான்.

|

சாப்பிடுவதற்காக வாழ்வது, வாழ்வதற்காக சாப்பிடுவது, இதில் நீங்கள் எந்த வகை? இதற்கான பதில் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மிகுந்த சுய ஒழுக்கத்தோடு , மிகவும் ஸ்ட்ரிக்ட் என்று அறியப்படும் நபர்களும் நாவின் சுவைக்கு அடிமையாவதுண்டு.

Five Tips For A Healthy But Inexpensive Diet

ஆனால் பல சுவை மிகுந்த உணவு வகைகள் ஆரோக்கியத்திற்கு நன்மை விளைவிப்பதில்லை என்பது தான் உண்மை. நாவிற்கு சுவையை அள்ளித் தரும் பிரெஞ்சு ப்ரை , பர்கர் போன்ற உணவு வகைகள் துரதிர்ஷ்டவசமாக தேவையற்ற கலோரிகள் மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவையாக உள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு உண்டாக்குகின்றன.

MOST READ: மாத்திரை எதுவும் போடாமல் குடலை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இத படிங்க...

ஆனால் ஆரோக்கியமான உணவை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? புதுமை மற்றும் விளம்பரம் ஆகியவற்றிற்கு இடையில் ஆரோக்கியமான உணவு டயட்டைன் கண்டுபிடிப்பது ஒரு கடினமான செயல் தான். ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நீங்கள் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பாதையை உங்களுக்கு எளிதாக்க நாங்கள் உங்களுக்கு 5 குறிப்புகளை வழங்க இருக்கிறோம். இது உங்களை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.

MOST READ: இந்த உணவுகளை மறந்தும் ஃப்ரீசர்ல வெச்சுடாதீங்க... இல்ல அது உங்க உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசி நேரத்தில் கடைக்கு செல்ல வேண்டாம்

பசி நேரத்தில் கடைக்கு செல்ல வேண்டாம்

ஆரோக்கியமான மளிகை பொருட்களை வாங்கி வர வேண்டும் என்ற எண்ணத்தில் நீங்கள் கடைக்கு செல்ல ஆயத்தமாவீர்கள். ஆனால் நல்ல பசி இருக்கும் நேரத்தில் கடைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தால், அது உங்கள் குறிக்கோளை பாழாக்கிவிடும். கடைக்கு சென்றவுடன், கலர் கலராக தொங்கும் சிப்ஸ் பாக்கெட்கள் , சாக்லேட் கவர்கள் உங்கள் மனதை சஞ்சலப்படுத்தும். ஆகவே கடைக்கு செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவு ஏதாவது சாப்பிட்டுவிட்டு பிறகு செல்லுங்கள். இதனால் உங்கள் மன சஞ்சலம் சற்று குறையும். நீங்கள் வாங்க நினைத்த ஆரோக்கியமான பொருட்களும் வீடு வந்து சேரும்.

முடிந்த அளவிற்கு பச்சை காய்கறிகளை வாங்குங்கள்

முடிந்த அளவிற்கு பச்சை காய்கறிகளை வாங்குங்கள்

பச்சை இலையுடைய காய்கறிகள் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், ஆரோக்கியமான கண் பார்வையை நிர்வகிக்கவும் உதவுகின்றன. பரட்டைக்கீரை, பசலைக் கீரை போன்றவற்றில் வைட்டமின் சி, ஏ, கே போன்ற சத்துக்கள் உள்ளது. இவற்றை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

கேனில் அடைக்கப்பட்ட உணவிற்கு “நோ” சொல்லுங்கள்

கேனில் அடைக்கப்பட்ட உணவிற்கு “நோ” சொல்லுங்கள்

கேனில் அடைக்கப்பட்ட உணவுகளில் அதிக அளவு சோடியம் மற்றும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். மேலும் இதில் ஊட்டச்சத்துகள் குறைவாக இருக்கும். அதனால் ஒருபோதும் கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக புதிதாக கிடைக்கும் காய்கறி பழங்கள் மீது கவனம் செலுத்தலாம்.

முழு தானியங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்

முழு தானியங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் என்றால், பதப்படுத்தப்பட்ட உணவுகளை புறக்கணியுங்கள். முழு தானியங்கள் பளிச்சென்று அழகாக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் அவற்றில் உள்ள முளை மற்றும் தோலை அகற்றி பதப்படுத்தப்படுகிறது. அதனால் தானியத்தின் முக்கிய ஊட்டச்சத்தான வைட்டமின் பி, வைட்டமின் ஈ , நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடண்ட் மற்றும் புரதம் போன்றவை குறைந்துவிடுகின்றன. முழு தானியங்கள் உட்கொள்வதால் இதய நோய் மற்றும் டைப் 2 நீரிழிவிற்கான அபாயம் குறைகிறது, ஆரோக்கியமான செரிமானம் மேம்படுகிறது. புற்றுநோய்க்கான அபாயம் குறைக்கப்படுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே அவற்றை உங்கள் உணவில் அவசியம் இணைத்துக் கொள்ளுங்கள்.

உணவு உட்கொள்வதற்கான அட்டவணை விதித்துக் கொள்ளுங்கள்

உணவு உட்கொள்வதற்கான அட்டவணை விதித்துக் கொள்ளுங்கள்

சாப்பிடும் போது என்ன சாப்பிடுகிறோம் என்பது முக்கியம். அதே போல் எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். ஆகவே எத்தனை முறை சாப்பிடுகிறோம் என்பது குறித்து ஒரு அட்டவணை பின்பற்றுங்கள். ஒவ்வொரு முறையும் எவ்வளவு கலோரிகள் உட்கொள்கிறீர்கள் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள். இப்படி செய்வதால் எங்கு தவறு செய்கிறீர்கள் என்பதை கண்டறிய முடியும். உங்கள் உணவு பழக்கம் குறித்து அதிக கவனம் தேவை. குறிப்பாக உங்கள் ஆரோக்கியத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் உங்கள் உணவு பழக்கம் மீது அதிக கவனம் தேவை. சுய ஒழுக்கம் இல்லாமல் நாள் முழுவதும் ஏதாவது ஒன்றை கொறித்துக் கொண்டே இருந்தால் நீங்கள் எவ்வளவு உடற்பயிச்சி செய்தாலும் எந்த பலனும் இல்லை என்பதை மனதில் கொண்டு கொறிக்கும் பழக்கத்தை கைவிடவும்.

முடிவுரை

முடிவுரை

ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்றால் உங்களுக்கு தேவையானது எல்லாம் சிறிது அர்ப்பணிப்பு மற்றும் சிறிது ஒழுக்கம். உலகில் மிகவும் விலை மலிவான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவுகள் பல உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் உணவு தேடலை ஆரோக்கியமாக மாற்றி, ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை முற்றிலும் புறக்கணித்து ஆரோக்கியமான உடல் மற்றும் மனதை அடையும் குறிக்கோளை பின்பற்ற வேண்டும் என்பது மட்டுமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For A Healthy But Inexpensive Diet

Here are five tips for a healthy but inexpensive diet. Read on...
Desktop Bottom Promotion