For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா? அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..

அனைத்து வகையான பழங்களுமே உடலுக்கு நல்லது. ஆனால் அதை சாப்பிடும் நேரம் மிகவும் முக்கியம். எந்த நேரத்தில் சாப்பிட்டால் பழங்கள் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

|

உணவுகளில் சிறப்பான உணவுகளாக பழங்கள் கருதப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா? ஏனெனில் பழங்களை செரிமானமடையச் செய்வதற்கு உடல் கடுமையாக வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வகையான பழங்களுமே உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால் அதை சாப்பிடும் நேரம் தான் மிகவும் முக்கியம். அதிலும் எந்த நேரத்தில் சாப்பிட்டால் பழங்கள் எளிதில் செரிமானமாகி, உடலுக்கு ஆற்றலை வழங்கும் என்பதை அறிந்து உண்ண வேண்டும்.

Energy Rich Fruits To Stay Away From Diseases

அதுமட்டுமின்றி, பல்வேறு ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பைட்டோநியூட்ரியண்ட்டுகள் நிறைந்த பலவண்ண பழங்களை உண்ண வேண்டும். காலை உணவாக இந்த பழங்களைக் கொண்டு சாலட் தயாரித்து சாப்பிட்டால், அது வாய்க்கு சுவையாக இருப்பதோடு, முழு நன்மைகளையும் வழங்கும். குறிப்பாக காலை உணவாக ஃபுரூட் சாலட் சாப்பிட்டால், வயிற்று பிரச்சனைகள், குடலியக்க பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், முடி பிரச்சனைகள் என பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

MOST READ: ஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப மறக்காம இத படிங்க...

எனவே காலையில் பிரட் டோஸ்ட் சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு பௌல் வண்ணமயமான பழங்களை சாப்பிட்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள். கீழே ஒருசில பழக்கலவைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை தேர்ந்தெடுத்து, அக்கலவையை காலை உணவாக உண்ணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் வலியில் இருந்து விடுபட: செர்ரி, அன்னாசி, ப்ளூபெர்ரி

உடல் வலியில் இருந்து விடுபட: செர்ரி, அன்னாசி, ப்ளூபெர்ரி

அன்னாசியில் வைட்டமின் சி மற்றும் புரோமலைன் என்னும் நொதிகள் அதிகம் உள்ளது. இது குடலில் உள்ள அழற்சியைக் குறைக்கும். மேலும் இது நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, புரோட்டீன் செரிமானத்தை சீராக நடைபெறச் செய்யும். ஆகவே அன்னாசியை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் ஈ அதிகம் உள்ள செர்ரி மற்றும் ப்ளூபெர்ரி பழங்களுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

MOST READ: நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா? கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: கிரேப் ஃபுரூட், கிவி, ஸ்ட்ராபெர்ரி

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க: கிரேப் ஃபுரூட், கிவி, ஸ்ட்ராபெர்ரி

நீங்கள் மிகவும் சோர்வுடன் உணர்ந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும் பழங்களான கிவி, கிரேப் ஃபுரூட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை உண்ணுங்கள். கிவிப் பழத்தில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருந்து, ப்ரீ-ராடிக்கல்களால் உடலில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும். அதுவும் கிவி பழத்துடன், கிரேப் ஃபுரூட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சேர்த்து சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

நோய்களை எதிர்க்க: அத்திப்பழம், சிவப்பு திராட்சை, மாதுளை

நோய்களை எதிர்க்க: அத்திப்பழம், சிவப்பு திராட்சை, மாதுளை

அத்திப்பழம், சிவப்பு திராட்சை மற்றும் மாதுளை போன்ற பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதுடன், நோய்களை எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளதால், இது நோய்த்தாக்குதலில் இருந்து உடலைப் பாதுகாப்பதோடு, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்துக் கொள்ளும். சிவப்பு திராட்சை மற்றும் ரெட் ஒயின் போன்றவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஏஜிங் பண்புகள் அதிகம் உள்ளது. திராட்சையில் உள்ள லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின், கண் பார்வையை மேம்படுத்த உதவுவதோடு, தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கும்.

MOST READ: பச்சை, மஞ்சள் அல்லது ப்ரௌன் நிற வாழைப்பழம்... இவற்றில் எந்த வாழைப்பழம் நல்லது?

உடலை சுத்தம் செய்ய : ஜோஜி பெர்ரி, தர்பூசணி, எலுமிச்சை

உடலை சுத்தம் செய்ய : ஜோஜி பெர்ரி, தர்பூசணி, எலுமிச்சை

உணவுகளின் உதவியின்றி உடலை சுத்தம் செய்வது என்பது முடியாது. ஜோஜி பெர்ரி, தர்பூசணி மற்றும் எலுமிச்சை போன்ற உணவுகள் உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். தர்பூசணியில் 92 சதவீத நர்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள லைகோபைன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை நச்சுக்கள் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவும். ஆகவே அடிக்கடி உடலை சுத்தம் செய்வதற்கு, இந்த வகை சாலட்டை உட்கொள்ளுங்கள்.

MOST READ: குணப்படுத்த முடியாத 'அரிவாள் செல் நோய்' பற்றிய சில முக்கிய தகவல்கள்!

ஆற்றலை அதிகரிக்க: வாழைப்பழம், அவகேடோ, ஆப்பிள்

ஆற்றலை அதிகரிக்க: வாழைப்பழம், அவகேடோ, ஆப்பிள்

உடற்பயிற்சி செய்த பின் மற்றும் முன் உடலில் நல்ல மாற்றங்களைக் காண நினைத்தால், வாழைப்பழம், அவகேடோ மற்றும் ஆப்பிள் போன்ற பழங்களை சாப்பிடுங்கள். அவகேடோ பழம் பல மணிநேரம் உடலில் ஆற்றலை நீடித்து நிலைக்க வைக்கும். மறுபுறம் வாழைப்பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதோடு, உடற்பயிற்சிக்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், போதுமான ஆற்றல் கிடைக்கும். ஆகவே இந்த வகை ஃபுரூட் சாலட்டையும் நீங்கள் சாப்பிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Energy Rich Fruits To Stay Away From Diseases

Do you know that digesting fruits is the easiest thing for your body? Instead of eating toast or egg white in the morning, do something for your health and include these delicious fruits on your plate.
Desktop Bottom Promotion