Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
உங்கள் தொடை பருமனாக அசிங்கமாக இருக்கிறதா? அதை எப்படி ஈஸியா சீக்கிரம் குறைக்கலாம் தெரியுமா?
தடிமனான தொடைகளால் ஏற்படும் பிரச்சினைகள் அது இருப்பவர்களுக்கே தெரியும். தொடையின் கொழுப்பை மட்டும் குறைப்பது என்பது நடக்காத காரியாமாகும்.
தொப்பை கொழுப்பைக் குறைப்பதற்கான பல வழிகளைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் பெண்களுக்கு இருக்கும் மற்றொரு மிகப்பெரிய பிரச்சினை தடிமனான தொடைகள் ஆகும். தடிமனான தொடைகளால் ஏற்படும் பிரச்சினைகள் அது இருப்பவர்களுக்கே தெரியும். தொடையின் கொழுப்பை மட்டும் குறைப்பது என்பது நடக்காத காரியாமாகும்.

எடைக்குறைப்பு என்பது ஒட்டுமொத்தமாக செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான உடற்பயிற்சியானது உங்கள் உடலின் ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்க உதவுமே தவிர குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கொழுப்பை குறைக்காது. ஆனால் ஒட்டுமொத்த எடை இழப்புடன் உங்கள் தொடைகளைசரியான வடிவத்துடன் மாற்ற சில வழிகள் உள்ளது.

உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்
கூடுதல் உப்பு உட்கொள்ளல் உங்கள் உடல் அதிகப்படியான தண்ணீரைத் தக்க வைத்துக் கொள்ளும். இது வீக்கத்தை உண்டாக்கும் மற்றும் உங்கள் தொடைகள் உட்பட உங்கள் உடலின் வடிவத்தை மாற்றும். உப்பைக் குறைப்பது உடனடியாக உங்கள் ஆடைகளின் பொருத்தத்தை மாற்றிவிடும், ஏனெனில் தண்ணீர் உப்பைப் பின்தொடர்கிறது. எனவே குறைந்த உப்பை உட்கொள்வது உடலில் குறைந்த நீரைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.

அதிக எலக்ட்ரோலைட்டுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்
எலக்ட்ரோலைட்டுகள் என்றால் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம். உங்கள் உடலில் எவ்வளவு எலக்ட்ரோலைட் இருக்கிறதோ, அவ்வளவு உப்பு குறைவாகவே இருக்கும். வாழைப்பழங்கள், தயிர் மற்றும் பச்சை இலை காய்கறிகளில் பல்வேறு வகையான எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன.

கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்கவும்
கார்போஹைட்ரேட்ஸ் கிளைகோஜனாக மாற்றப்படுகின்றன, பின்னர் அவை உங்கள் கல்லீரல் மற்றும் தசைகளில் தண்ணீருடன் சேமிக்கப்படும். நீங்கள் எவ்வளவு கார்போஹைட்ரேட்ஸ் சாப்பிடுகிறீர்களோ, அவ்வளவு தண்ணீரை உங்கள் உடல் சேமிக்கிறது. அதனால்தான், குறைந்த கார்ப் உணவைப் பின்பற்றிய பின்னர் உடல் எடையை குறைப்பதாக நிறைய பேர் உணர்கிறார்கள்.

அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து உண்ணுங்கள்
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவு எடை இழப்புக்கு சிறந்ததாகும். புரோட்டீன் மற்றும் ஃபைபர் உங்களை அதிக நேரம் நிறைவாக வைத்திருப்பதற்கு இவை உதவுகிறது, இதனால் அதிக உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது.

சில வலிமை உடற்பயிற்சிகள்
கொழுப்பைக் குறைப்பது சாத்தியமில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட தசையை வலிமையாகவும், சரியான வடிவத்திலும் மாற்றுவது எளிதாக செய்ய முடியும். சில கர்ட்ஸி லன்ஜ்கள், கோபட் ஸ்குவாட் மற்றும் சுமோ ஸ்குவாட் செய்வதன் மூலம் உங்கள் தொடைகளை குறைக்கலாம். உங்கள் உள் தொடைகளில் கவனம் செலுத்த சில பக்கவாட்டு பயிற்சிகளை செய்யுங்கள்.

வித்தியாசமான உடற்பயிற்சிகள்
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான பயிற்சிகளை செய்யாமல் உங்கள் தொடைகளில் தசை மற்றும் வலிமையை உருவாக்க முடியும். நகர்வுகளை மாற்றுவது மிகவும் முக்கியமானது மற்றும் வெவ்வேறு பயிற்சிகளைச் செய்வது உங்களுக்கு அதைச் செய்ய உதவும். நீங்கள் ஒரு நாள் ஸ்குவாட்ஸ் செய்யலாம், மறுநாள் வேறு உடற்பயிற்சி செய்யலாம்.

சில HIIT பயிற்சிகளை முயற்சிக்கவும்
உங்கள் தொடைகளை விரைவாகக் குறைக்க, நீங்கள் HIIT பயிற்சிகளை வலிமை பயிற்சியுடன் இணைக்கலாம். இது அதிக கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்க தேவையான கலோரி பற்றாக்குறையை உருவாக்கவும் உதவும்.



Click it and Unblock the Notifications
