Latest Updates
-
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க
டம்புள்ஸ் Vs கெட்டில்பெல்ஸ்: இவற்றில் தசைகளை வலுப்படுத்தக்கூடிய சிறந்த உடற்பயிற்சி கருவிகள் எவை?
டம்புள்ஸ் மற்றும் கெட்டில்பெல்ஸ் ஆகிய இரண்டு உடற்பயிற்சிக் கருவிகளுமே, பலவீனமான மற்றும் சிக்கலான நமது தசைகளை வலுப்படுத்தி, நாம் நினைக்கும் உடல் அமைப்பைப் பெற உதவி செய்கின்றன. ஆனால் இவற்றில் எது சிறந்தது?
உடற்பயிற்சிக் கூடங்களில் ஏராளமான உடற்பயிற்சிக் கருவிகள் நிரம்பி இருக்கும். அந்த கருவிகளைப் பயன்படுத்தி நமக்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்து கொள்ளலாம். ஆனால் நாம் வீட்டில் இருந்து கொண்டே எடையை அதிகாிக்க விரும்பினால், நம்மால் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்ல முடியாது.
இந்த நிலையில் வீட்டில் இருந்து கொண்டு உடற்பயிற்சிகள் செய்யும் போது, அதற்கு தகுந்த சிறந்த உடற்பயிற்சி கருவிகளைத் தோ்ந்தெடுப்பது கடினமாக இருக்கும். குறிப்பாக டம்புள்ஸை தோ்ந்து எடுக்கலாமா அல்லது கெட்டில்பெல்ஸை தோ்ந்து எடுக்கலாமா என்பதில் குழப்பம் ஏற்படும்.

இந்த இரண்டு உடற்பயிற்சிக் கருவிகளுமே, பலவீனமான மற்றும் சிக்கலான நமது தசைகளை வலுப்படுத்தி, நாம் நினைக்கும் உடல் அமைப்பைப் பெற உதவி செய்கின்றன. பல காலங்களாக இந்த இரண்டு கருவிகளுமே தசைகளை வலுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தன.
அதே நேரத்தில் இந்த இரண்டு உடற்பயிற்சிக் கருவிகளில் நன்மைகளும், எதிா்மறை விளைவுகளும் இருக்கின்றன. ஆகவே இந்த இரண்டில் எந்த உடற்பயிற்சிக் கருவி சிறந்தது என்பதை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

டம்புள்ஸின் நன்மைகள்
சாதாரணமான தசைகளை வலுப்படுத்த வேண்டும் என்று விரும்பினால், டம்புள்ஸ் மிகச் சிறந்த கருவிகளாக இருக்கும். ஏனெனில் டம்புள்ஸை கைகளில் பிடிப்பது மிகவும் எளிது. அவற்றைக் கொண்டு எல்லா வகையான உடற்பயிற்சிகளையும் செய்யலாம். அதாவது மாா்புத் தசைகளை வலுப்படுத்த, தோள்பட்டை தசைகளை வலுப்படுத்த மற்றும் மேல்கை தசைகளை வலுப்படுத்த டம்புள்ஸ் சிறந்த கருவிகளாக இருக்கும். மேலும் பல நன்மைகளை டம்புள்ஸ் வழங்குகின்றன.

இரு பக்க பயிற்சிகளுக்கு உதவுதல்
டம்புள்ஸ் கருவிகளின் மிக முக்கிய பயன்கள் என்னவென்றால், அந்த கருவிகளைக் கொண்டு ஒரே நேரத்தில் இரண்டு கைகளின் தசைகளுக்குப் பயிற்சிகளை அளிக்க முடியும். ஆனால் கெட்டில்பெல்ஸ் கருவிகளைப் பொருத்த மட்டில், ஒரு நேரத்தில் ஒரு பக்க கை தசை அல்லது ஒரு பக்க மேல் கை தசைக்கு மட்டுமே பயிற்சி கொடுக்க முடியும். ஒரு பக்கம் பயிற்சி முடித்த பின்பே மறுபுறத்தில் உள்ள கை தசைக்கு பயிற்சி கொடுக்க முடியும். அதனால் இரண்டு பக்க தசைகளுக்கும் பயிற்சி கொடுக்க அதிக நேரம் ஆகும்.

டம்புள்ஸை பிடிப்பது எளிது
கெட்டில்பெல்ஸை விட டம்புள்ஸை கைகளில் பிடிப்பதற்கும் மற்றும் அவற்றைக் கையாள்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் கெட்டில்பெல்ஸை சுழற்றும் பயிற்சியைத் தவிர, அவற்றைக் கொண்டு மற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது சற்று கடினமாக இருக்கும். மேலும் உடல் சமநிலையை இழக்காமலும் மற்றும் உடலில் காயம் ஏற்படாமலும் கெட்டில்பெல்ஸைக் கொண்டு பயிற்சிகள் செய்வது மிகவும் கடினமாக இருக்கும்.

கெட்டில்பெல்ஸின் நன்மைகள்
சிக்கலான அல்லது பலவீனமான தசைகளை வலுப்படுத்த வேண்டும் என்றால் அதற்கு கெட்டில்பெல்ஸ் கருவிகளைக் கொண்டு பயிற்சி செய்யலாம். டம்புள் அல்லது பாா்பெல் கருவிகள் கொடுக்காத பலன்களை கெட்டில்பெல்ஸ் கருவிகள் வழங்கும். கெட்டில்பெல்ஸை சுழற்றுதல் மற்றும் கோப்லெட் ஸ்குவாட்ஸ் போன்ற பயற்சிகள் நமது சிக்கலான மற்றும் பலவீனமான தசைகளை வலுப்படுத்த உதவி செய்யும்.

இதயம் சம்பந்தமான பயிற்சிகளுக்கு சிறந்தது
வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைச் செய்யும் போது, இதயத்திற்கும் நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் மற்றும் இதயத் துடிப்பை அதிகாிக்க விரும்பினால், கெட்டில்பெல்ஸ் கருவிகளைத் தோ்ந்தெடுப்பது நல்லது. இந்தக் கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் செய்யும் போது, நமது உடலானது செய்யும் கூடுதலான இயக்கங்களால், நமது உடலில் உள்ள கூடுதல் கலோாிகள் எாிக்கப்படுகின்றன.

இயக்க ஆற்றலை அதிகாிக்கின்றன
கெட்டில்பெல்ஸ் கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் செய்யும் போது நமது இயக்க ஆற்றல் அதிகாிக்கிறது. அதன் மூலம் மளிகைப் பொருள்களைத் தூக்குதல் மற்றும் எடை அதிகமுள்ள பொருள்களைத் தூக்குதல் போன்ற அன்றாட வேலைகளை மிக எளிதாகச் செய்ய முடியும். மேலும் கெட்டில்பெல்ஸ் கருவிகளைக் கொண்டு பயிற்சிகள் செய்தால் நமது ஈா்ப்பு மையமானது மாற்றம் அடைகிறது. அதாவது கெட்டில்பெல்ஸ் கருவிகளைக் கொண்டு பயிற்சி செய்யும் போது நாம் இடறிவிடாமல், நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக நமது முக்கிய தசைகளானது தொடா்ந்து வேலை செய்ய வேண்டும். அவ்வாறு தொடா்ந்து வேலை செய்வதனால் நமது முழு உடலுக்கும் பயிற்சி கிடைக்கும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவா்களுக்கு எந்த கருவி சிறந்தது?
நமது உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளைச் செய்ய டம்புள்ஸ் மற்றும் கெட்டில்பெல்ஸ் ஆகிய இரண்டு கருவிகளுமே சிறந்தவை ஆகும். ஆனால் எந்த மாதிாியான பயிற்சிகளைச் செய்யப் போகிறோம் அல்லது எந்த தசைகளுக்கு பயிற்சி கொடுக்கப் போகிறோம் என்பதைக் கருத்தில் கொண்டு கருவிகளைத் தோ்ந்தெடுக்க வேண்டும். எனினும் புதிதாக உடற்பயிற்சி செய்பவா்களுக்கு டம்புள்ஸ் சிறந்ததாக இருக்கும்.
டம்புள்ஸ் நமது கைகளில் பிடிப்பதற்கு எளிதாக இருக்கும். மேலும் டம்புள்ஸ் கருவிகளால் நமது உடலில் காயங்கள் ஏற்படாது. கெட்டில்பெல்ஸைவிட டம்புள்ஸின் எடை சமச்சீராக இருக்கும். இறுதியாக அடிப்படையான பளுதூக்கும் பயிற்சிகளைச் செய்வதற்கு டம்புள்ஸ் கருவிகள் சிறந்தவை. கெட்டில்பெல்ஸ் கருவிகள் சற்று கடினமான பயிற்சிகளைச் செய்வதற்கு உதவுகின்றன.



Click it and Unblock the Notifications