For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் விரும்பும் அளவிற்கு எடையை குறைக்க இந்த யோகர்ட் டயட்டை 7 நாட்கள் செய்தாலே போதும்...!

இந்த யோகர்ட் டயட் உங்களுடைய ஒட்டுமொத்த வயிற்றின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதுடன் உங்களுக்கு எடை குறைப்பிலும் உதவும்.

|

ஆரோக்கியமான வாழ்விற்கு ஆரோக்கியமான உணவுமுறைதான் அடிப்படை ஆகும். நாம் ஆரோக்கியமாக வாழ நமது உடல் எடை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உலகம் முழுவதும் பல டயட்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதில் முக்கியமான ஒரு டயட் யோகர்ட் டயட் ஆகும்.

Yogurt Diet Plan For Weight Loss

இந்த யோகர்ட் டயட் உங்களுடைய ஒட்டுமொத்த வயிற்றின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதுடன் உங்களுக்கு எடை குறைப்பிலும் உதவும். யோகர்டுடன் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் புரோட்டின் உணவுகளை 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அது உங்கள் உடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், எடை குறைப்பிற்கு உதவும். இந்த பதிவில் யோகர்ட் டயட்டை எப்படி பின்பற்ற வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகர்ட்

யோகர்ட்

யோகர்ட் என்பது பாலில் இருந்து சில பாக்டீரியாக்கள் சேர்த்து புளிக்க வைக்கப்பட்டு தயாரிக்கப்படும் பால் சார்ந்த ஒரு பொருளாகும். பொதுவாக யோகர்ட்டை உங்கள் உணவில் சேர்த்து கொள்வது உங்கள் டயட்டின் சிறந்த பகுதியாகும். அதற்கு காரணம் இதிலிருக்கும் ப்ரோபையோட்டிக்ஸ், வைட்டமின்கள் மற்றும் புரோட்டின்கள் ஆகும். ஒரு கப் யோகர்ட்டில் 100 கலோரிகளும், 6 கிராம் கார்போஹைட்ரேட்டும், 17 கிராம் புரோட்டினும் உள்ளது.

யோகர்ட் டயட்

யோகர்ட் டயட்

நீங்கள் யோகர்ட் டயட்டை கடைபிடிக்க விரும்பினால் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது இது மற்ற டயட்டுகளை போல எளிதானதாக இருக்காது. யோகர்ட் டயட் மிகவும் சிறிய அளவை கொண்டதாகும். இதில் அனைத்து நாட்களிலும் நீங்கள் சாப்பிடும் உணவின் அளவு மாறாது. மிதமான அளவில் எடையை குறைக்க இந்த யோகர்ட் டயட் மிகவும் சரியான தேர்வாகும்.

யோகர்ட் டயட் உணவுகள்

யோகர்ட் டயட் உணவுகள்

யோகர்ட் டயட்டில் நீங்கள் முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது தினமும் 500 கிராம் யோகர்ட் சேர்த்து கொள்ள வேண்டும். இதனுடன் வேறுசில ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் உங்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக கிவி பழம், ஆப்பிள், பேரிக்காய், சுட்ட உருளைக்கிழங்கு, சிக்கன் மார்பு, தக்காளி, திராட்சை, கீரை, மாம்பழம் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

MOST READ: நூறு ஆண்டுகள் வாழ ஆசைப்பட்டால் நம் முன்னோர்கள் பின்பற்றிய இந்த எளிய உணவுப்பழக்கங்களை பின்பற்றுங்கள்

முதல் நாள்

முதல் நாள்

டயட்டின் முதல் நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 4 ஸ்பூன் சிக்கனையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

டயட்டின் இரண்டாவது நாள் 6 கப் யோகார்ட்டை எடுத்து கொள்ளுங்கள். மேலும் 4 சுட்ட உருளைக்கிழங்கையும் எடுத்து கொள்ள வேண்டும.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்

டயட்டின் மூன்றாவது நாள் 6 கப் யோகர்ட்டை எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஆப்பிள், 1 கிவிப்பழம் மற்றும் 4 ஸ்பூன் சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

MOST READ: இந்த ராசிகளில் பிறந்தவர்களின் வெற்றிக்கு எப்பொழுதும் அவர்களின் சுயஒழுக்கம்தான் காரணமாக இருக்கும்...!

நான்காம் நாள்

நான்காம் நாள்

டயட்டின் நான்காவது நாள் 6 கப் யோகர்ட், 4 ஸ்பூன் சால்மன் மீன் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும் இதனுடன் 1 மாம்பழத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள்

டயட்டின் ஐந்தாவது நாளில் காய்கறிகள் மற்றும் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுங்கள். குறிப்பாக வாழைப்பழத்தை இதில் சேர்த்துக்கொள்ள கூடாது. இதனுடன் 6 கப் யோகர்ட் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஆறாவது நாள்

ஆறாவது நாள்

ஆறாவது நாள் டயட்டில் வெறும் யோகார்ட்டை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கப் யோகார்ட்டை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

MOST READ: தங்கள் தந்தையின் மரணத்திற்கு காரணமான மாவீரர்கள் இவர்கள்தான்... மறைக்கப்பட்ட வரலாறு...

ஏழாவது நாள்

ஏழாவது நாள்

டயட்டின் இறுதி நாளில் வெறும் யோகார்ட்டும், தண்ணீரும் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். 6 கப் யோகார்ட்டும், 8 முதல் 10 கப் தண்ணீரும் எடுத்து கொள்ளுங்கள். இந்த டயட் நீங்கள் எதிர்பார்க்கும் எடை இழப்பை உங்களுக்கு வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Yogurt Diet Plan For Weight Loss

Going on a yogurt diet is a great way to rebalance your gastrointestinal system and aid in weight loss efforts.
Story first published: Monday, June 17, 2019, 16:52 [IST]
Desktop Bottom Promotion