For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சத்தியமா ரெண்டும் ஒரே பொண்ணுதாங்க... 96 கிலோ - 46 கிலோ கொறச்சிருக்கு... எப்படி?

|

சாரா அலி கான், சமூக ஊடகங்களின் கொண்டாட்ட நாயகியாக விளங்குகிறார். பிசிஓஎஸ் என்னும் கருப்பை நீர்க்கட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த சாராவின் உடல் எடை 96 கிலோ ஆக இருந்தது. கடும் உடற்பயிற்சியால் அதை 46 கிலோவாக குறைத்ததால் திரையுலகில் நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளார். சாரா அலி கான் வெளிநாட்டில் படித்து வந்தார்.

ஆகவே, பல ஆண்டுகள் பொதுவெளிக்கு வராமல் இருந்தார். கருப்பை நீர்க்கட்டி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு, இந்தி திரையுலகான பாலிவுட் பற்றிய கனவே எடை குறைப்புக்கான உத்வேகத்தை அளித்தது.

பாலிவுட்டினுள் நுழைவதற்கு எடையை குறைப்பது மட்டுமே வழி என்று நம்பியதால் செயலில் துணிந்து இறங்கி விட்டார். காமிரா வெளிச்சம் தன்மேல் படுவதற்கு முன்னர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தன்னை தயார்படுத்திக் கொள்ள உறுதிபூண்டார். என்னென்ன வழிமுறைகளை கையாண்டார் என்பதை கீழே காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூட் கேம்ப் டிரைனிங்

பூட் கேம்ப் டிரைனிங்

Image Courtesy

முழு உடலையும் உறுதியாக்கக்கூடிய உடற்பயிற்சிகள் குயிக் ஜம்பிங் ஜாக்ஸ் என்னும் வேகமாக தாவி குதித்தல், குனிந்து கைகளை சுற்றும் விண்ட்மில், முட்டியை மடக்கி உயர்த்தும் ஹை நீ, நின்ற இடத்திலேயே ஓடும் பட் கிக்ஸ், குந்தி உட்காருதல் என்னும் ஸ்குவாட், ஒரு காலை முன் வைத்து முட்டியை மடக்கும் லாஞ்ச், தண்டால் போன்ற புஷ்அப் மற்றும் ஸ்பைடர் ஸ்டெப்ஸ் போன்ற பயிற்சிகள் அடங்கிய பூட் கேம்ப் பயிற்சிக்கு சென்று உடலை தயார்படுத்தியுள்ளார்.

இந்தப் பயிற்சிகள் உடலின் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டாபாலிஸத்தை அதிகரிக்கும். ஆகவே, பெருமளவு ஆற்றல் என்னும் கலோரி பயன்படுத்தப்பட்டுவிடும்.

MOST READ: ஒத்தைக்கு ஒத்தை பார்த்துக்கலாம் என்ற கெத்தான 6 ராசிக்காரர்கள் யார்? நீங்களும் இந்த ராசியா?

விளையாட்டு

விளையாட்டு

Image Courtesy

சாரா அலி கான் தன் சகோதரருடனும் தந்தையுடனும் இணைந்து விளையாடினார். விளையாட்டு, உடலின் எடையை குறைத்து, தசைகளை வலுப்படுத்தும். உடலுக்கு கட்டான தோற்றத்தை அளிக்கும். தினமும் டென்னிஸ் மைதானத்திற்குச் சென்று ஆடமுடியாவிட்டாலும் சைக்கிள் ஓட்டுதல், நீந்துதல் அல்லது ஓடுதல் ஆகியவற்றை செய்யலாம்.

பிலேட்ஸ் என்னும் தரை சார்ந்த உடற்பயிற்சிகள்

பிலேட்ஸ் என்னும் தரை சார்ந்த உடற்பயிற்சிகள்

பயிற்சியை ஆரம்பிக்கும் முன்னரே, அதிகப்படியான எடையை குறைக்க வேண்டுமென்று சாரா தீர்மானித்திருந்தார். கரீனா கபூரின் பயிற்சியாளரான நம்ரோதா புரோஹித் உள்ளிட்ட சிறந்த பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற்றார். பிலேட்ஸ் என்னும் தரையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்ததால், முழு உடல் கட்டமைப்பும் மேம்பட்டது.

எடையை குறிக்க வேறு சில குறிப்புகள்

எடையை குறிக்க வேறு சில குறிப்புகள்

உடல் பருமன் போன்ற வளர்சிதை மாற்ற நோய்களால் பாதிக்கப்படுவதை தடுக்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

உடலிலுள்ள கொழுப்பை மது தற்காலிகமாக ஆக்சிஜனேற்றமடைய செய்யும். ஆகவே, தொடர்ந்து மது அருந்தினால் உடல் எடை அதிகரிக்கும்.

புரதச் சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கும்.

MOST READ: முருங்கை விதையை பொடியாக்கி இதுல கலந்து சாப்பிடுங்க... சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரை சரியாகும்...

மனதை இலகுவாக

மனதை இலகுவாக

Image Courtesy

மனதை எப்போதும் இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். கார்டிசாலின் அளவு அதிகமானால் பசி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகும். நிலையான மனநிலை அமையாது. நீரிழிவு வியாதி வருவதற்கான வாய்ப்பு உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

From 96 Kg to 46 Kg: Sara Ali Khan’s Struggle With PCOD Is Inspiring

Back in 2013, Saif Ali Khan had expressed his serious concerns over Sara Ali Khan's weight issues. He had said, "Even if she (Sara) plans to come in films she has to lose weight. From 96 Kg to now she is 46 Kg.