For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னென்வோ டயட் ஃபாலோ பண்ணி இருப்பீங்க, இத பண்ணியிருக்கிங்களா? இதுதான் 2018ல பெஸ்ட் டயட்டாம்...

2018 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட்ட சிறந்த டயட்டான கீட்டோ டயட் பற்றியும் அதன் நன்மைகள் பற்றியும் இந்த கட்டுரையில் மிக விரிவாகப் பார்க்கலாம்.

|

ஒவ்வொரு வருடமும் புதுசு புதுசா உணவு வரும் போது நம் டயட் பழக்கமும் அதற்கேற்றாற் போல் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் புதிதான டயட் முறைகள் எல்லார் பார்வைக்கும் வந்து கொண்டே தான் இருக்கிறது. அப்படி பார்க்கையில் 2018 ஆம் ஆண்டு வந்த ட்ரெண்ட்டான டயட் தான் இந்த கீட்டோ டயட் போன்றவைகள். வந்த கொஞ்ச நாட்களிலேயே சமூக தளங்கள் முழுவதும் பிரபலமாகி வருகிறது. டயட் என்று போனாலே ஒரு இரண்டு நாள் ப்லோ பண்ணுவோம் அப்புறம் நம்ம ஒரு பக்கம் இருப்போம் நம்ம டயட் ஒரு பக்கம் இருக்கும்.

Keto Diet to Intermittent Fasting

இப்படித் தான் நிறைய பேர்கள் பிட்னஸ், டயட் என்று கிளம்பி விட்டு இது நமக்கெல்லா சரியா வராதுனு ஓடியே போய்டுறாங்க.. அப்புறம் அந்த பக்கம் எட்டிக் கூட பார்ப்பதில்லை. ஆனா இந்த டயட் முறைகள் அப்படி இல்லைங்க. ப்லோ பண்ண எளிமையாக இருப்பதோடு இதனால் உடல் எடை குறைந்தவர்களும் தங்களின் அனுபவத்தை நிறையவே சொல்லி இருக்காங்க. அந்தவகையில் 2018 ல் புகழ்பெற்ற டயட் முறைகள் பற்றிய ஒரு பார்வை தான் இந்த கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீட்டோ டயட்

கீட்டோ டயட்

கடந்த 2018 ல் புகழ்பெற்ற டயட் முறைகளுள் இதுவும் ஒன்று. இதற்கு ஆரோக்கியமான கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட் இல்லாத டயட் என்று பொருள். அதாவது கார்போஹைட்ரேட் குறைந்த அல்லது அல்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது ஆரோக்கியமான கொழுப்பால் சிறுதளவு மட்டுமே கீட்டோன் என்ற ஆற்றலை உருவாக்க முடியும். நீங்கள் கார்போஹைட்ரேட் இல்லாத உணவை எடுக்கும் போது குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் உற்பத்தி குறைந்து விடும். குளுக்கோஸிற்கு பதிலாக ந் உடல் கீட்டோனை உற்பத்தி செய்யும். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால் கீட்டோ டயட் ' கொழுப்பை எரிக்கும் மெஷின்' என்று சொல்லலாம். கல்லீரலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு தேவையான கீட்டோன் ஆற்றலாக மாற்றுவதே இதன் செயல். இது உடல் எடையை குறைப்பதோடு அல்சீமர், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் நாம் ஆரோக்கியமாக இருக்க இதை பின்பற்றலாம்.

இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்

இன்டர்மிட்டென்ட் பாஸ்டிங்

இது 2018 ல் புகழ்பெற்ற மற்றொரு டயட் முறை. இதில் சாப்பிடுதல், விரதம் இருத்தல் அடங்கும். இதில் கலோரிகளை எல்லாம் கணக்கிட்டு சாப்பிட வேண்டாம். வாரத்தில் இரண்டு நாள் விரதம் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று இருந்தாலே போதும். இதுவும் இதய நோய்கள், அல்சீமர் நோயிலிருந்து காக்கிறது.

மெடிடேரியன் டயட் (மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்)

மெடிடேரியன் டயட் (மத்திய தரைக்கடல் உணவுப் பழக்கம்)

இதில் நிறைய காய்கறிகள் மற்றும் ஆலிவ் ஆயில் சேர்க்கப்படுகிறது. பழங்கள், காய்கறிகள், மீன்கள் மற்றும் முழு தானியங்களை எடுத்து கொள்வது தான் இந்த டயட். ஆரோக்கியமற்ற கொழுப்புள்ள உணவுகளை இதில் அறவே தவிர்க்க வேண்டும். இந்த டயட்டில் உடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்துகள் கிடைக்கின்றன. இதய நோய்கள், டைப் 2 டயாபெட்டீஸ், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

ரா வேகன் டயட்

ரா வேகன் டயட்

இதுவும் புகழ்பெற்ற டயட் முறைகளுள் ஒன்று. பதப்படுத்தப்படாத பச்சையாக உணவுகளை எடுப்பது தான் இந்த டயட் முறை. ஏனெனில் சமைத்த உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதால் இந்த டயட் முறை பச்சையான உணவுகளை பரிந்துரைக்கிறது. எடை இழப்பு, சீரண சக்தி போன்றவற்றை மேம்படுத்துகிறது.

இதுவரை உங்களால் எந்த டயட்டையும் ப்லோ பண்ண முடியலைன்னா இந்த புதுவருடத்தில் இருந்து புதிதாய் தொடங்குங்களே. நியூ இயர் தீர்மானமாக இது இருக்கட்டும். ஆரோக்கியமாக வாழ்வது நம் கையில் உள்ளது. என்னங்க சரியா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Diets of 2018: From Keto Diet to Intermittent Fasting

here we are giving the special list of Best Diets of 2018: From Keto Diet to Intermittent Fasting.
Story first published: Wednesday, January 16, 2019, 14:44 [IST]
Desktop Bottom Promotion