30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொள்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky
30 நாட்களில் இந்த ஜூஸ் டயட்டால் ஏற்படும் நன்மைகள்- வீடியோ

மிகவும் ஆரோக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் ஜூஸ் குடிப்பது. உணவுகளை உண்பதனால் மட்டுமின்றி, ஒருசில ஜூஸ்களைக் குடிப்பதாலும் உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆனால் வெறும் ஜூஸை மட்டும் 30 நாட்கள் தொடர்ச்சியாக குடித்தால் என்ன நடக்கும்? இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு என்ன நன்மை விளையும்? 30 நாட்களும் வெறும் ஜூஸ் மட்டும் குடித்தால் போதுமா? வேறு எந்த உணவுகளையும் உண்ணத் தேவையில்லையா? என்ற உங்களது அனைத்து கேள்விகளுக்கும் விடையை இக்கட்டுரையில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக 30 நாள் ஜூஸ் டயட் என்பது மிகவும் பிரபலமான டயட். அதுவும் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான டயட். இந்த ஜூஸ் டயட்டை மேற்கொண்டால், திட உணவுகள், சர்க்கரை, இறைச்சிகளான மீன், முட்டை, கோழி, ஆடு என்று எதையுமே உட்கொள்ளக்கூடாது. வேண்டுமானால் ஜூஸ்களில் சுவைக்காக தேனை சேர்த்துக் கொள்ளலாம்.

Most Desired Health Benefits of 30 Day Juice Fast

ஆனால் ஜூஸ் டயட்டை ஒருவர் மேற்கொள்ள ஆரம்பிக்கும் முன், அந்த ஜூஸ் டயட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்ன, பக்கவிளைவுகள் என்ன என்பது குறித்து முன்பே தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். சிலருக்கு ஜூஸ் டயட்டினால் உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் அல்லது குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகலாம். எனவே இந்த ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

சரி, இங்கு 30 நாள் ஜூஸ் டயட்டினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும், இந்த டயட்டை மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்களும் கொடுக்கப்பட்டுள்ளன, அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை குறைய உதவும்

எடை குறைய உதவும்

30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் பெரும்பாலானோருக்கு முதல் 7 நாட்களிலேயே 10 பவுண்ட் எடை குறைய வாய்ப்புள்ளது. சொல்லப்போனால், சட்டென்று குறுகிய காலத்திலேயே உடல் எடையைக் குறைப்பது என்பது ஆரோக்கியமான வழி அல்ல. மேலும் இவ்வாறு குறைத்தால், மீண்டும் உடல் எடை அதிகரிக்கக்கூடும். எனவே எப்போதுமே உடல் எடையைக் குறைக்க நினைத்தால், மெதுவாக குறைக்க ஆரம்பியுங்கள்.

முக்கியமாக 30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொண்ட பின், அன்றாடம் உட்கொள்ளும் உணவிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். தினமும் ஆரோக்கியமான டயட்டைத் தான் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், உடல் பருமன் சட்டென்று அதிகரித்துவிடும். மேலும் ஜூஸ் டயட்டை மேற்கொள்வது ஆரோக்கியமானது தான். அதுவும் 3 நாள் முதல் 1 வாரம் வரை பின்பற்றுவது என்பது பாதுகாப்பானது.

தொடர்ச்சி...

தொடர்ச்சி...

ஒருவர் நீண்ட நாட்கள் ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, உடலில் இருந்து கொழுப்புக்கள் கரைவதற்கு பதிலாக, தசைகள் குறைய ஆரம்பிக்கும். சொல்லப்போனால் ஜூஸ் டயட்டை மேற்கொண்டால், நீரிழப்பு மற்றும் தசை இழப்பினால் தான் உடல் எடை குறையும். தசைகளானது புரோட்டீனில் இருந்து பெறப்படும் அத்தியாவசிய அமினோ அமிலங்களால் உருவானது. இத்தகைய புரோட்டீன் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூலம் மிகவும் குறைவான அளவிலேயே கிடைக்கும். எனவே புரோட்டீன் நிறைந்த பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரிக்க விரும்பினால், அவகேடோ பழத்தைக் கொண்டு செய்து குடியுங்கள்.

மொத்தத்தில், உடல் எடை வேகமாக குறைய வேண்டும் என்று விரும்பினால், 30 நாள் ஜூஸ் டயட்டை தான் சிறந்த வழி.

உடல் சுத்தமாகும்

உடல் சுத்தமாகும்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலைத் தாக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் மற்றும் இதர டாக்ஸின்களை எதிர்த்துப் போராடி நல்ல பாதுகாப்பளிக்கும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள உடலை சுத்தம் செய்யும் பண்புகள், உடலினுள் உள்ள நச்சுப் பொருட்களை பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வழியில் வெளியேற்றும்.

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

உடலின் ஆற்றல் அதிகரிக்கும்

உடலின் ஒவ்வொரு உறுப்புக்களின் மூலை முடுக்குகளில் இருந்தும் நச்சுக்கள் முற்றிலும் வெளியேறிய பின், உள்ளுறுப்புக்கள் புதியது போன்று உணர ஆரம்பிக்கும். உடலினுள் உள்ள செல்கள் நன்கு ஊட்டம் பெற்று சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். இதனால் உடலில் ஆற்றல் நீடித்து, நீண்ட நேரம் நன்கு சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

நாள்பட்ட நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்

நாள்பட்ட நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்

பல வருடங்களாக மேற்கொண்ட மோசமான டயட் மற்றும் வாழ்க்கை முறையினால் ஏற்பட்ட நாள்பட்ட நோய்கள், 30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது, உள்ளுறுப்புக்களில் உள்ள பிரச்சனைகள் குணமாகி, புதிது போன்று செயல்பட ஆரம்பித்து, நாள்பட்ட நோய்களின் அறிகுறிகள் மறைய ஆரம்பிக்கும்.

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்

நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்

30 நாட்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிப்பதால், உடலுக்கு போதுமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நொதிகள் கிடைத்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமை மேம்பட்டு, உடலைத் தாக்கும் நோய்களின் தாக்குதலும் குறைந்து, உடல் நோயின்றி ஆரோக்கியமாக இருக்கும்.

பொலிவான மற்றும் பிரகாசமான முகம்

பொலிவான மற்றும் பிரகாசமான முகம்

எப்போது ஒருவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் செயல்படுகிறதோ, அப்போது உடலால் ஊட்டச்சத்துக்களை முறையாக உறிஞ்ச முடியும். இதன் விளைவாக உடலினுள் உள்ள செல்கள் நன்கு ஊட்டம் பெற்று, தானாக சருமத்தின் அழகு மேம்பட்டு, பிரகாசமாக காட்சியளிக்கலாம்.

நீர் உடம்பு குறையும்

நீர் உடம்பு குறையும்

நற்பதமான பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், உடலில் நீர் தேக்கத்தை உண்டாக்கும் அதிகப்படியான சோடியத்தின் அளவைக் குறைத்து வெளியேற்றும். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேறுவதோடு, உடல் எடையும் 30 நாள் ஜூஸ் டயட்டை ஆரம்பித்த சில நாட்களிலேயே குறைந்து இருப்பதை நன்கு காணலாம்.

இப்போது 30 நாள் ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டியவைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

#1

#1

எவ்வளவு தான் 30 நாள் ஜூஸ் டயட் ஆரோக்கியமானதாக இருந்தாலும், இந்த டயட்டை ஒருவர் மேற்கொள்ளும் முன், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது நல்லது. ஏனெனில் உங்கள் உடல் இந்த ஜூஸ் டயட்டிற்கு ஏற்றது தானா என்பது உங்கள் மருத்துவருக்கே தெரியும். இதனால் தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய அவசியமிருக்காது.

#2

#2

பல்வேறு வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். முடிந்த அளவு பச்சை காய்கறிகளைக் கொண்டு அதிகமாக ஜூஸ் தயாரித்துக் குடியுங்கள்.

#3

#3

இஞ்சி, எலுமிச்சை போன்றவற்றின் சாற்றினை, குடிக்கும் ஜூஸ்களுடன் சேர்த்துக் கொள்ளலாம். சில காய்கறிகளை ஜூஸ் போட்டு குடித்தால் நன்றாக இருக்காது. அப்போது அவற்றுடன் இஞ்சி அல்லமு எலுமிச்சை சாற்றினை சேர்த்து தேன் கலந்து குடியுங்கள்.

#4

#4

ஜூஸை எப்போதுமே தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். அதைவிட்டு காலையில் தயாரித்து வைத்து, மதிய வேளையில் குடிப்பது போன்ற பழக்கத்தைக் கைவிட வேண்டும். இதனால் அந்த ஜூஸில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய்விடும். அதேப் போல் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பழ ஜூஸ்களை வாங்கிக் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

#5

#5

ஜூஸ் டயட்டை மேற்கொள்ளும் போது தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று பலர் நினைக்கலாம். ஆனால் இது தவறான எண்ணம். என்ன இருந்தாலும், ஒரு நாளைக்கு குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டியது கட்டாயம்.

#6

#6

30 நாள் ஜூஸ் டயட்டை முடித்த பின், மெதுவாக திட உணவுகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். உங்கள் உடலானது திரவ உணவுகளை உட்கொள்ள பழகி இருப்பதால், எடுத்ததும் அதிகமாக திட உணவுகளை சாப்பிட வேண்டாம். முக்கியமாக செரிமானமாவதற்கு தாமதமாகும் பிட்சா, பர்கர், பிரட் போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Most Desired Health Benefits of 30 Day Juice Fast

Here are some of the most desired health benefits of 30 day juice fast. Read on to know more...
Story first published: Thursday, March 15, 2018, 11:30 [IST]