For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா?

ஏரோபிக், தசைகளை வலுவாக்கும் ரோப் பயிற்சிகள் வரை, ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக செய்து, உடல் தசைகளை வலிமையாக்கி, உடல் ஆற்றலின் மூலம், செயல்களில் புத்துணர்ச்சி அடைகிறார்கள்.

By Gnaana
|

உடற்பயிற்சியின் ஆற்றலை, உடலில் நிரந்தரமாக்கும் புரோட்டின் பானங்கள்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வாக்கிங், ஜாக்கிங் போல ஆண்களும் பெண்களும் தற்காலத்தில், ஜிம்களில் உடற்பயிற்சிகள் செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது.

health

ஏரோபிக், தசைகளை வலுவாக்கும் ரோப் பயிற்சிகள் வரை, ஆண்களும் பெண்களும் சரிநிகர் சமானமாக செய்து, உடல் தசைகளை வலிமையாக்கி, உடல் ஆற்றலின் மூலம், செயல்களில் புத்துணர்ச்சி அடைகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன் ட்ரிங்க்ஸ்

புரோட்டீன் ட்ரிங்க்ஸ்

உறுதியான கை மசில்கள், வலுவான உடல், பலமிக்க தொடைகள் மற்றும் கால்களின் தசைகள் மூலம், நடையிலேயே, அவர்களின் உடல் உறுதியையும், ஆற்றலையும் நாம் அறிந்து கொள்ள முடியும். சமீபத்தில் நடந்த ஆய்வில், இதுபோன்ற ஜிம் பயிற்சிகளின் முடிவில் பயிற்சியாளர்கள் குடிக்கும் பானங்களுக்கும், உடற்பயிற்சிகளின் பலனுக்கும் நிறைய தொடர்பு இருப்பதை, ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஜிம்களில் சராசரியாக ஒரு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சி செய்பவர்களும் சரி, மிதமான ஏரோபிக் வகை பயிற்சி செய்பவர்களும் சரி, பயிற்சி முடிந்த சற்று நேரத்தில், ஏதாவது பானத்தை, தாகம் தீர்க்க, உடலுக்கு உற்சாகமளிக்கக் குடிக்கிறார்கள்.

உடற்பயிற்சி முடிந்தபின் குடிக்கும் பானங்கள்

உடற்பயிற்சி முடிந்தபின் குடிக்கும் பானங்கள்

ஜிம்களில் பொதுவாக உடற்பயிற்சி செய்த பின், எனெர்ஜி டிரிங் எனப்படும் கார்போஹைட்ரெட் பானங்கள் மற்றும் புரோட்டின் பானங்களைப் பருகுவார்கள். இதில் கார்போஹைட்ரேட் பானங்கள் என்பது ஆரஞ்சு உள்ளிட்ட பழச்சாறு முதல், சுத்திகரிக்கப்பட்ட பால் மற்றும் எனெர்ஜி பானங்கள் எனும் ஊட்டச்சத்து பானங்களாகும்.

புரோட்டின் பானங்கள் என்பது, புரோட்டின் செறிவாக உள்ள வீ புரோட்டின், சோயா புரோட்டின், பால் புரோட்டின், முட்டை ஆல்புமின் என்று பல்வேறு வகையில் இருக்கின்றன.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

அமெரிக்காவில், முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்ட சிலரை, டிரெட்மில் எனும் நடைப்பயிற்சி சாதனத்தில், ஒவ்வொருமுறையும் நாற்பத்தைந்து நிமிடங்கள் என்ற வீதத்தில், வாரத்திற்கு மூன்று முறை என்று, ஆறு வாரங்களுக்கு பயிற்சி மேற்கொள்ள வைத்தார்கள்.

பயிற்சியாளர்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு பயிற்சிக்குப் பின்னர் குடிக்க கார்போஹைட்ரேட் பானங்களும், மற்ற பிரிவுக்கு புரோட்டின் பானங்களும் வழங்கப்பட்டு, அவர்களின் உடல் தசை வளர்ச்சி மற்றும் மசில் அளவு, நவீன அல்ட்ரா சென்சிடிவ் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி முறையின் மூலம், கணக்கிடப்பட்டது.

ஆய்வு

ஆய்வு

தசைகளின் சவ்வுகள், DNA, புதிய புரோட்டின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு, சோதனை முடிவில், கார்போஹைட்ரெட் பானங்களைப் பருகியவர்களை விட, புரோட்டின் சத்து பானங்களைப் பருகியவர்களின் உடல் ஆற்றல் மற்றும் தசைகளின் உறுதி, உடற்பயிற்சிக்குப் பின்னரும் மாறாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

ஒரு மணி நேர கடும் உடற்பயிற்சிகளுக்குப் பின்னர் குடிக்கும் புரோட்டின் பானம், பயிற்சியால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக சோர்வுற்ற தசைநார்களில் ஊடுருவி, அவற்றின் சோர்வை விரைவில் நீக்குகிறது.

புரோட்டின் உணவுகள், செரிமானமாகி அவற்றின் ஆற்றல் தசைகளுக்கு செல்ல, சில மணி நேரங்களாகிவிடும். ஆனால், புரோட்டின் சத்து பானம், குடித்த சிறிது நேரத்தில் உடலில் பரவி, பாதிப்புள்ள தசைகளை சீராக்கி, உடல் சோர்வை போக்கும் ஆற்றல்மிக்கது. எனவேதான், உடற்பயிற்சிக்கு பின் குடிக்கும் பானங்களில் புரோட்டின் முதலிடம் பெறுகிறது.

கடுமையான ஜிம் பயிற்சிகளை, வெறும் வயிறுடன் மேற்கொள்ள அனுமதிக்க மாட்டார்கள். பயிற்சிக்கு முப்பது நிமிடத்திற்கு முன் எளிதில் ஜீரணிக்கக்கூடிய பழச்சாறு, வாழைப்பழம் அல்லது சிறிய ரொட்டித் துண்டை சாப்பிட்டு நீர் பருக, பயிற்சி செய்யத் தேவையான கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கும். மேலும், இதன்மூலம், பயிற்சியினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் கூடுதலாகும் என்கிறார்கள்.

உடற்பயிற்சிக்குப் பின் குடிக்கும் புரோட்டின் பானங்கள் தரும் நன்மைகள்.

கடுமையான பயிற்சிக்குப் பின்னர், உடல் சோர்வு மற்றும் தாகம் தீர்க்க, உடலுக்கு சமச்சீரான ஊட்டமளிக்க, புரோடினைத்தவிர வேறெதுவும் இல்லையென்கிறார்கள்.

உடலை எப்படி வலுவாக்குகிறது?

உடலை எப்படி வலுவாக்குகிறது?

உடல் தசைகளின் வலிமைக்கு பயிற்சிகள் அவசியம், தசைகளின் வளர்ச்சிக்கும், உறுதிக்கும் புரோடின்கள் இன்றியமையாததாகிறது. புரோட்டின் ஷேக் பானங்கள் இலகுவாக தசைகளில் ஊடுருவி, அவற்றின் வளர்ச்சிகளைத் தூண்டுகிறது.

புரோட்டின் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள முட்டை, வீ மற்றும் பால் ஷேக் போலவும் எடுத்துக்கொள்ளலாம். இவற்றில் எதை சாப்பிட்டாலும், அவை, தசைகளின் வளர்ச்சியை சீராக்கும். இதைப்போல, தயிர், பாலாடைக்கட்டி, சோயா, கடல் உணவுகள், இறைச்சி இவற்றை முறையாக கலந்தோ அல்லது சமைத்தோ, சாப்பிட்டாலும், தசைகளின் வளர்ச்சியை உறுதியாக்க முடியும்.

அமெரிக்க ஸ்டேன்ஃபோர்டு பல்கலையின் ஊட்டச்சத்து பேராசிரியரும், புரோட்டின் நிபுணருமான கெயில் பட்டர்ஃபீல்டு, தனி ஒருவருக்கான தினசரி புரோட்டின் அளவு, அவரின் உடல் எடை மற்றும் தினமும் சாப்பிடும் கலோரி அளவைப் பொறுத்து அமையும் என்கிறார்.

தினமும் ஒருவர் உட்கொள்ளவேண்டிய புரோட்டின் அளவு, அவர் உடல் எடையில் அரை சதவீத அளவில் இருக்க வேண்டும். மேலும் இந்த அளவு, தினசரி சாப்பிடும் மொத்த கலோரி அளவில், 15 % சதவீதமாக இருக்கவேண்டும். புரியவில்லையா?

எவ்வளவு கலோரிகள்

எவ்வளவு கலோரிகள்

நமக்கு ஒரு நாளைக்கு, 2௦௦௦ கலோரி அளவில், உணவு தேவைப்படுகிறது, அந்த உணவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், கார்போஹைட்ரெட் நிறைந்த சாதம், ரொட்டி, காய்கறி மற்றும் பழங்கள் என்று. ஆனாலும், மொத்த கலோரி அளவில் 15% கலோரிகள், நமக்கு புரோட்டின் உணவுகள் வழியே கிடைக்கவேண்டும். அவ்வளவுதான். புரோட்டின் உணவுகள் என்பது, நவ தானியங்கள், பாதாம் பருப்புகள், பாலாடை, தயிர், முட்டை, இறைச்சி மற்றும் கடலுணவுகள்.

ஜிம் பயிற்சிக்குப் பின்னர், தசைகள் துடிப்புடன் இருக்கும், அவற்றை அமைதியாக்கி நிலைப்படுத்த, புரோட்டின் தேவை. தற்காலத்தில் புரோட்டின் பவுடராகக் கிடைக்கிறது. பயிற்சி முடிந்தபின், சிறிது புரோட்டின் தூளை, நீரில் கலக்கி குடிக்கலாம். பால், பழச்சாறு இவற்றுடன் சேர்த்து கலக்கியும் குடிக்கலாம். இதன் மூலம், புரோட்டின் ஆற்றல் தசைகளில் ஊடுருவி, அவற்றின் ஆற்றலை மேம்படுத்தும்.

எப்படி சாப்பிடலாம்?

எப்படி சாப்பிடலாம்?

புரோட்டின் பவுடரை, ஸ்நாக் மற்றும் சாப்பாட்டிலும் கலந்து சாப்பிடலாம்.

சில நேரங்களில் பயிற்சிக்கு முன், கார்போஹைட்ரெட் உணவை கூடுதலாக சாப்பிட்டிருந்தால், அதை சீரான இடைவெளியில் செலவழிப்பதன் மூலம், புரோட்டின் ஆற்றலை சேமித்து, பயிற்சிக்கு பின்னர், தசைகளின் சோர்வை, அழுத்தத்தைப் போக்க முடியும்.

சில ஜிம் பயிற்சியாளர்கள், பயிற்சிக்கு முன்னர், புரோட்டின் மில்க் ஷேக்கை, 4 : 1 என்ற விகிதத்தில், கார்போஹைட்ரேட் - புரோட்டின் கலவையில் பருகுவது, அவசியம் என்கிறார்கள், மேலும், அதில் 3௦௦ - 4௦௦ கலோரி அளவு ஆண்களுக்கும், 2௦௦ - 3௦௦ அளவு பெண்களுக்கும் தேவை எனவும் வரையறுத்திருக்கிறார்கள்.

இதன் மூலம், பயிற்சியின்போது, கார்போஹைட்ரெட் செலவாகி, புரோட்டின் சேமிக்கப்பட்டு, அவை, தசைகளின் உருவாக்கத்தில், சிறப்பாக செயல்படும், என்கிறார்கள்.

உடல் எடைக்குறைப்பு

உடல் எடைக்குறைப்பு

அதிக எடைகொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும், வீ புரோட்டின் உணவுகளை தினசரி சாப்பாட்டில் சேர்த்தபோது, அவர்களின் அதிக எடை மற்றும் உடல் கொழுப்பு கரைந்து, உடல் எடை, சீரான அளவில் குறைவது, உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அமெரிக்கன் காலேஜ் ஆஃப் நியூட்ரிஷியன் எனும் அமைப்பின் ஆய்வு, தெரிவிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

importance of protein drinks after gym workouts

When you push through a tough workout, your muscles are constantly challenged, and their fibers begin to break down and sustain damage.
Desktop Bottom Promotion