TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
வெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..! செய்முறை உள்ளே...
அளவுக்கு அதிமாகவும், தேவையற்ற உணவுகளை சாப்பிட்டதாலும் நம் உடல் எடை எகிறி விடுகிறது. ஆசைக்காக நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டு விட்டு, பிறகு உடல் எடை கூடிவிட்டதே என கவலைப்பட்டால் என்ன நியாயம். பிறகு இதனை குறைக்க படாதபாடு படுகின்றோம். சிலர் செய்கின்ற விபரீத பயிற்சிகள் அவர்களது உயிருக்கே ஆபத்தாகி விடுகிறது.
உடல் எடையை குறைக்க இது போல தவறான முறையை தவிர்த்து எளிமையான வழிகள் உள்ளன. அந்த வகையில் வெங்காயம் உங்களது குண்டான உடலை சட்டென குறைக்க உதவும். இந்த பதிவில் கூறியபடி வெங்காயத்தை நீங்கள் பயன்படுத்தினால் எளிதில் உடல் பருமனை குறைத்து விடலாம்.
குண்டாக காரணம் என்ன..?
இன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய இந்த கெட்ட கொழுப்புக்கள் மற்றும் கொலெஸ்ட்ரோல்களே. ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகுமாம். இதுதான், நீங்கள் குண்டாக இருப்பதற்கு முக்கிய காரணமாகும்.
பெரியாரின் வெங்காயம்..!
பெரியார் அடிக்கடி ஒரு வார்த்தையை மட்டும் பயன்படுத்துவார். அதுதான்,"வெங்காயம்". ஏனென்றால், வெங்காயத்தை உரித்தால் அதில் எதுவும் இருக்காது. அதேபோல தான் நாமும் ஒண்ணுமே இல்லாத செயல்களை ஊதி ஊதி பெரிதாக மாற்றுகின்றோம் என்பதை உணர்த்தவே இதனை பயன்படுத்துவார். இருப்பினும், இதில் பல்வேறு ஆரோக்கிய குறிப்புகள் உள்ளன.
உடல் எடையை குறைக்கும் வெங்காயம்..!
வெங்காயத்தை குறிப்பாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தலாம் என உடல்நல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இதில் உள்ள ஊட்டச்சத்துக்களே உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ளுமாம்.
நீர்சத்து
நார்சத்து
வைட்டமின் சி
பொட்டாசியம்
சல்பர்
போலேட்
வைட்டமின் பி9
வைட்டமின் பி6
வெங்காய சாறு...
உடல் எடையை குறைக்க இந்த வெங்காய சாறு நன்கு உதவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தாலே உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து நீங்கள் கச்சிதமான உடல் எடையை பெற்று விடுவீர்கள்.
தேவையானவை :-
வெங்காயம் 1
நீர் 3 கப்
செய்முறை :-
முதலில் வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போட வேண்டும். இதனை இப்படியே 5 நிமிடம் கொதிக்க விட்டு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும். இந்த நீரை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
மாதுளையும் வெங்காயமும்...
வெங்காயம் மற்றும் மாதுளை இவை இரண்டும் சேர்த்து உடலுக்கு அதிக நலன்களை தர கூடியது. குறிப்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்போர்களுக்கு சிறந்த மருந்தாக இது அமையும்.
தேவையனவை:-
மாதுளை சாறு 4 ஸ்பூன்
வெங்காயம் 3
ஆலிவ் எண்ணெய் 2 ஸ்பூன்
சிறிது மிளகு
உப்பு சிறிது
பார்ஸ்லி 1 ஸ்பூன்
செய்முறை :-
முதலில் கடாயில் ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி கொண்டு, நறுக்கிய வெங்காயத்தை அதனுள் போடவும். இதை சிறிது நிமிடம் வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். வேறொரு பாத்திரத்தில் மாதுளை சாறு, உப்பு, மிளகு, பார்ஸ்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, அதனுள் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
பச்சை வெங்காயம்...
வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட அப்படியே சாப்பிடுவது மிக சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள phytonutrients என்ற முக்கிய ஊட்டசத்துக்கள் நேரடியாக நமது உடலை சென்றடையும். ஆதலால், இது உடல் எடையையும் குறைத்து விடும்.
தேவையானவை :-வெங்காயம் 1
எலுமிச்சை 1/2
சிறிது ஹிமாலய உப்பு
MOST READ: விந்தணுக்கள் வெளியேறும்போது உடலில் உள்ள சத்துக்களும் சேர்ந்து வெளியேறுமா
செய்முறை :-
வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின், இந்த கலவையுடன் சிறிது உப்பை சேர்த்து கலந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை விரைவில் குறைத்து விடலாம்.
புற்றநோயிற்கும் வெங்காயம்..!
"வருமுன் காப்பதே சிறந்தது" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உங்களுக்கு வெங்காயம் உதவும். வெங்காயத்தை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் புற்றுநோய் செல்களை அழிக்கும். மேலும், இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்கள் இல்லாமல் நம்மை காக்கும்.
இதய பாதுகாப்பிற்கு...
பிளவனோட்ஸ் மற்றும் பொட்டாசியம் வெங்காயத்தில் அதிகம் உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இவை கொலெஸ்ட்ராலையும் கட்டுக்குள் வைத்து கொள்ளும். எனவே, நீங்கள் ஆரோக்கியமுடம் இருக்க வெங்காயம் சிறந்த மருந்து.
சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க...
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் எளிதாக இதனில் இருந்து தப்பிக்க வெங்காயம் உதவும். S-methylcysteine என்ற முக்கிய மூல பொருள் இதில் உள்ளதால் சர்க்கரையின் அளவை ரத்தத்தில் அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும்.
MOST READ: உலகெங்கிலும் காணப்படும் விசித்திரமான சிலைகள் - புகைப்படத் தொகுப்பு!
முடியின் நலனுக்கு...
முடியை அழகாக பராமரிப்பதில் வெங்காயம் முதன்மையான இடத்தில் உள்ளது. முடி உதிர்வு, பொடுகு தொல்லை, பேன் பிரச்சினை போன்றவற்றிற்கு வெங்காயம் முற்றிபுள்ளி வைக்கிறது. மேலும், வெள்ளை முடி இருந்தால் அதையும் இது கருமையாக மாற்றி விடுமாம்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.