Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
அடிவயிற்று கொழுப்பு மற்றும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைக்க இந்த ஆயுர்வேத பானங்கள் போதும்..!
உடல் இடையை குறைக்க பல வகையான முயற்சிகளை எடுத்து தோற்று விட்டீர்களா..? ஏராளமான மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் செய்து பார்த்து சோர்வடைந்து விட்டீர்களா..? இனி இது போன்ற நிலையை முற்றிலுமாக தவிர்க்கவே ஆயர்வேத மருத்துவம் இருக்கிறது. அதிலும் இதில் சொல்லப்படும் ஒரு சில முக்கிய பானங்கள் ஒருவரின் உடல் பருமனை ஒரே மாதத்தில் குறைக்க கூடியதாம். இந்த பானங்களை தொடர்ந்து குடித்து வந்தாலே போதும்.

உடல் பருமன், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் செட்டென குறைந்துவிடம். இந்த ஆயுர்வேத பானங்கள் உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு உதவும் என ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்கின்றனர். அவை என்னென்ன பானங்கள் என்பதையம், எவ்வாறு தயாரித்து குடிப்பது என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.

கெட்ட கொழுப்புகளே காரணம்..!
இன்று உடல் பருமனால் பாதிக்கப்படும் பெரும்பாலானோரின் முக்கிய காரணமாக இருப்பது, உடலில் சேர கூடிய இந்த கெட்ட கொழுப்புக்களே. ஒருவரின் உடலில் LDL எனப்படும் கெட்ட கொழுப்புகள் அதிகமாகி விட்டால் உடல் எடை அபரிமிதமாக ஏறி கொண்டே போகுமாம். எனவே, இவற்றை உடனே கரைக்க கூடிய ஆயர்வேத வழி முறைகளை பின்பற்றினாலே நல்ல பலன் கிடைக்கும்.

தொப்பையின் கொழுப்பை செட்டென குறைக்க
தொப்பை, பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் உரித்தான ஒன்றாகும். இனி உங்களை பிறர் கேலி செய்வதில் இருந்து இந்த பானம் காக்கும்.
தேவையானவை :-
மாதுளை 1/2 கப்
கிரேப்புரூட் 1/2 கப்
தேன் 1 ஸ்பூன்
ஒரு சிட்டிகை உப்பு

செய்முறை :-
முதலில் மாதுளை மற்றும் கிரேப்புரூட் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி, அந்த சாற்றுடன் தேன் மற்றும் உப்பு கலந்து குடித்து வரவும். தொப்பையை குறைக்க உதவும் பானங்களில் இது மிக சிறந்தது. மேலும், இது அடி வயிற்றில் கொழுப்புகள் சேராமலும் பார்த்து கொள்ளும்.

ஆளி விதை காஃபி தெரியுமா..?
உடல் எடையை குறைக்க உதவும் ஆயர்வேத முறையில் இந்த பானமும் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது. முதலில் சூடான நீரில் 1 ஸ்பூன் காபியை கலந்து கொள்ளவும். அடுத்து அதனுடன் 1 ஸ்பூன் ஆளி விதை மற்றும் டார்க் சோகோலட் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வடிகட்டி குடிக்கவும். தினமும் காலையில் இந்த காபியை குடித்து வந்தால் ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்.

வெந்தயமும் வெள்ளரியும்..!
வெந்தயம் பொதுவாகவே நல்ல மருந்தாக செயல்படும். உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்து கொள்ள இந்த வெந்தயம் அருமையாக உதவும். அதே போன்று வெள்ளரிகாயும் உடலின் உள்ள கெட்ட கொழுப்புக்களை விரட்டி அடித்து விடும்.
இந்த பானத்தை செய்ய தேவையானவை...
வெந்தயம் 2 ஸ்பூன்
வெள்ளரிக்காய் 1/2 கப்
உப்பு சிறிது
நீர்

செய்முறை :-
இரவு முழுவதும் வெந்தயத்தை 1/2 கப் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் காலையில் இவற்றுடன் வெள்ளரிக்காயை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு வடிகட்டி கொண்டு, சிறிது உப்பு சேர்த்து குடித்து வரவும். இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை தரும்.

இளநீர் மற்றும் அண்ணாச்சி பானம்...
செரிமான கோளாறை முற்றிலுமாக குணப்படுத்துவதில் இந்த பானம் முதல் இடத்தில் உள்ளது. இவை ரத்தம் உறைவதை தடுத்து, சீரான உடல் எடையை தருகிறது. இந்த பானத்தை தயாரிக்க...
தேவையானவை :-
இளநீர் 1 கப்
அண்ணாச்சி 1/2 கப்
கருஞ்சீரக விதைகள் 1/2 ஸ்பூன்
சிறிது உப்பு

செய்முறை :-
முதலில் அண்ணாச்சி பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் இளநீர், கருஞ்சீரகம் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். இறுதியாக சிறிது உப்பை சேர்த்து தொடர்ந்து குடித்து வாருங்கள். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் நீங்கி உடல் பருமன் குறைந்து விடும்.

கொழுப்பை முற்றிலுமாக கரைக்க...
அடி வயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உடலில் தேவைக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புக்களை குறைக்க இந்த ஆயுர்வேத பானம் பயன்படும். அதற்கு முதலில் 1 கப் தக்காளியை நன்கு அரைத்து கொள்ளவும். பிறகு அவற்றை வடிகட்டி கொண்டு 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வரவும். இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். மேலும், கொழுப்பை சட்டென கரைக்குமாம்.

பப்பாளியும் இலவங்கமும் எப்படி..?
ரத்தத்தில் உள்ள கொலஸ்டரோலை குறைக்க இந்த அற்புத பானம் நன்கு வேலை செய்யும். அத்துடன் சர்க்கரையின் அளவை சமமான அளவில் உடலில் வைத்து கொள்ள இந்த பானம் பயன்படும்.
தேவையானவை :-
பப்பாளி 1 கப்
இலவங்க பொடி 1/2 ஸ்பூன்
சிறிது உப்பு
நீர்

செய்முறை :-
முதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து இதனை வடிகட்டி கொண்டு, உப்பு மற்றும் இலவங்க பொடியை சேர்த்து நன்கு கலந்து குடித்து வரலாம். இந்த பானத்தை தொடர்ந்து குடித்து வருவதால் உடல் எடை எளிதாக குறைத்து விட முடியுமாம்.

கோதுமை புல்லும் திராட்சை ரசமும்...!
கோதுமை புல்லில் பல்வேறு மகத்துவங்கள் ஒளித்துள்ளன. இதனை இந்த பானத்துடன் சேர்த்து குடித்து வந்தால் உடல் எடையை ஒரே மாதத்தில் குறைந்து விடும்.
தேவையானவை :-
திராட்சை 1/2 கப்
கோதுமை புல் 1 கப்
உப்பு

செய்முறை :-
முதலில் கோதுமை புல்லை நன்றாக நறுக்கி கொண்டு அரைக்கவும். பிறகு இவற்றுடன் திராட்சை சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு, வடிகட்டி கொள்ளவும். தேவைக்கு சிறிது நீரும் சேர்த்து கொள்ளலாம். இறுதியாக உப்பை சேர்த்து குடிக்கலாம். இந்த பானம் கொழுப்பு, மற்றும் கெட்ட கொலஸ்ட்ரோலை முற்றிலுமாக கரைத்து விடும்.

கிரீன் டீ உடலின் கொழுப்பை அருமையாக கரைக்க கூடிய வழி இந்த கிரீன் டீயில் உள்ளது. அதற்கு முதலில் கிரீன் டீ இலைகள் மற்றும் புதினாவை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும். சுவைக்கு சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.
உடலின் கொழுப்பை அருமையாக கரைக்க கூடிய வழி இந்த கிரீன் டீயில் உள்ளது. அதற்கு முதலில் கிரீன் டீ இலைகள் மற்றும் புதினாவை நீரில் கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க வேண்டும். சுவைக்கு சிறிது தேனும் சேர்த்து கொள்ளலாம்.

எலுமிச்சை டீ
நீரை நன்றாக கொதிக்க விட்டு, பிறகு அவற்றில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு குடித்து வரலாம். இந்த ஆயுர்வேத பானம் அற்புதமான தீர்வை நமக்கு தரும். மேலும், உடலில் உள்ள கொழுப்புகளையும் இவை முற்றிலுமாக கரைக்க கூடிய ஆற்றல் பெற்றது.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.



Click it and Unblock the Notifications











