For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கட்டுமஸ்தான உடலுக்கு நீங்கள் சாப்பிட வேண்டிய 7 ஊட்டச்சத்துக்கள் இவைதான்

இந்த காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அதிக எடை மற்றும் தொப்பையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகுசில இளைஞர்கள் மட்டுமே உடலை கட்டுக்கோப்பாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்துள்ளனர்.

|

இந்த காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் அதிக எடை மற்றும் தொப்பையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெகுசில இளைஞர்கள் மட்டுமே உடலை கட்டுக்கோப்பாகவும், கட்டுமஸ்தாகவும் வைத்துள்ளனர். உடலை இரும்பு போல உறுதியாகவும், சரியான வடிவத்திலும் வைத்திருக்க ஆரோக்கியமான உணவும், அளவான உடற்பயிற்சியும் அவசியம். இங்குதான் இளைஞர்களுக்கு பிரச்சினை தொடங்குகிறது.

7 essential nutrients your body needs to build strong muscle

தவறான வழிகாட்டுதல்களாலும், அதீத ஆர்வத்தாலும் ஆரோக்கியமென நினைத்து பல தவறான உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். இது அவர்கள் விரும்பும் உடலமைப்பை பெறுவதை தடுப்பதோடு, அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இந்த பதிவில் கட்டுமஸ்தான உடலை பெற சாப்பிட வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் சி

வைட்டமின் சி

மிகவும் சக்திவாய்ந்த இந்த ஆன்டி ஆக்சிடன்ட் உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது, மேலும் உடற்பயிற்சி மூலம் ஏற்படும் அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாக்கவும் இது பயன்படுகிறது. ஊட்டச்சத்து நிபுணர்களின் மதிப்பீட்டின்படி வைட்டமின் சி அதிகம் எடுத்துக்கொள்வது உடல் உறுப்புகளின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது மேலும் இது உடலை கட்டுகோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

தசைகள் மற்றும் மூளைக்கு இடையே தொடர்பினை உறுதிசெய்வது வைட்டமின் பி12 தான். இறகு தசை வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது. எடை குறைப்பு செயல்முறைகளில் வைட்டமின் பி12 தவிர்க்க முடியாத இடத்தை கொண்டுள்ளது. இது ஆற்றலை அதிகரிப்பதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது.

மக்னீசியம்

மக்னீசியம்

இது தசைகள், மென்மையான திசுக்கள் மற்றும் உடலில் உள்ள அமிலங்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். தசைகளை வலுப்படுத்துவதிலும், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலும் மக்னீசியம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் சோர்வு மற்றும் தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவுகிறது.

அதிமதுர சாறு

அதிமதுர சாறு

கொழுப்பு பிரச்சினை உள்ளவர்கள் ஒரு மாதம் தொடர்ந்து அதிமதுர சாறை உணவில் சேர்த்துக்கொண்டால் அவர்கள் உடலில் உள்ள LDL கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் வெளியேற்றப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறது. அதிமதுரம் நமது உடலில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோனின் அளவை சீராக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அட்ரினல் சுரப்பியின் அழுத்தத்தை குறைக்கிறது, இதனால் உங்கள் உடற்பயிற்சியின் செயல்திறன் அதிகரிக்கிறது.

MOST READ: தாம்பத்ய உறவில் திருப்தியில்லை... பெண்கள் ஓபன் டாக் - முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

நமது உடலுக்கு அத்தியாவசியாமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று இரும்புச்சத்து. நம் உடலில் உள்ள பெரும்பாலான இரும்புகள் நம் இரத்த சிவப்பணுக்களில் உள்ளன. இரத்த சிவப்பு அணுக்கள்தான் நமது நுரையீரலில் இருந்து உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்களில் இருந்து நம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவது இரும்புச்சத்துதான். மேலும் பல்வேறு பாகங்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் சிக்னல்களை அனுப்பவும், நரம்பு தூண்டுதலின் பரிமாற்றத்திற்கும் உதவுவது இரும்புச்சத்துதான். எனவே போதிய இரும்புச்சத்தை எடுத்துக்கொள்வதில் உறுதியாய் இருங்கள்.

குளுகோமைன்

குளுகோமைன்

குளுகோமைன் என்பது எடை குறைப்பிற்கு உதவும் ஒரு நார்ச்சத்து ஆகும். உடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதன் மூலம் இதனை செய்கிறது. இது கலோரிகள் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கிறது. குளுகோமைன் உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது, இதனால் உங்கள் பசி கட்டுப்படுத்தப்படுகிறது. குளுகோமைன் துரித உணவுகளால் குவியும் கலோரிகளின் அளவை குறைக்கிறது.

கால்சியம்

கால்சியம்

இது வலுவான எலும்புகள் மற்றும் பற்களின் வலிமைக்கு மட்டுமல்ல தசைகளின் வலிமைக்கும், வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அவசியமானது. ஆய்வுகளின் படி கால்சியத்தின் அளவு உடலில் குறையும்போது கால்சிரால் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கிறது. இது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும். எனவே போதுமான அளவு கால்சியம் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

MOST READ: நீங்கள் வீட்டில் செய்யும் இந்த எளிய சட்னிகள் உங்கள் உயிரை எப்படி பாதுகாக்கிறது தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 essential nutrients your body needs to build strong muscle

If you want to build strong muscle you need to pay attention to your body’s requirement of essential nutrients and vitamins.
Desktop Bottom Promotion