For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே வாரத்தில் தொப்பையை குறைக்க, இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்...

|

"இந்த பிறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது" என்ற பாடல் வரியை ரசிக்காதவர் யவரும் இல்லை. சாப்பாடு பிரியர்களுக்கு வகை வகையான உணவு என்றதுமே நாக்கில் எச்சில் ஊற தொடங்கி விடும். உணவை பெரும்பாலும் இவர்கள் காதலித்தே உண்கின்றனர் எனலாம். ஆனால், கட்டுக்கடங்காத அளவில் உணவை சாப்பிட்டு விட்டு உடல் பருமன் கூடி விட்டதே என அவதிப்படுவோருக்கு இங்கு ஏராளம். இதனால், முதலில் பரிசாக நமக்கு கிடைப்பது "தொப்பை"தான். இதனை அரிய பொக்கிஷமாக பெற்று விட்டு நாம் படாதபாடு படுவோம்.

7 Day Flat belly diet And The Easiest Weight Loss Tips

இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் நாம் முயற்சி செய்தலும், தோல்வியிலே முடிந்து விடும். இதற்கு ஒரு எளிமையான தீர்வை இந்த பதிவு தருகிறது. ஒரே வாரத்தில் இங்கு கூறும் உணவு முறையை கடைபிடித்தால் உங்கள் தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும். அந்த 7 நாள் டயட்டை பற்றி இனி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த 7 நாட்கள்..!

அந்த 7 நாட்கள்..!

7 நாளில் தொப்பையை குறைக்க முடியும் என்பது உண்மைதானா..? என்ற சந்தேகம் உங்களில் பலருக்கு இருக்கும். ஆனால், இந்த 7 நாள் டயட் பிளான் தொப்பையை குறைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. மருத்துவ ரீதியாக இந்த 7 நாள் டயட் பிளான் நிரூபணம் ஆகியுள்ளது. ஆதலால், இது முற்றிலும் உண்மையே.

நாள் #1

நாள் #1

காலை உணவு: வெள்ளை கருவை கொண்டு தயாரிக்கப்பட்ட 3 ஆம்லெட், மிளவு தூவி இருக்க வேண்டும். 1 கப் முளைக்கீரை

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: 100கிராம் சிவப்பு மிளகாய் பயன்படுத்தி தயாரித்த சிக்கன்

மதிய உணவு: கோழியின் மார்பு பகுதியை வறுத்து சாப்பிடவும். பீன்ஸ், கீரைகள், 1/4 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்த சாலட்

மாலை ஸ்னாக்: 1/4 வெள்ளரிக்காயுடன் வான்கோழி மார்பு கறி 100 கிராம் சமைத்து சாப்பிடவும்.

இரவு உணவு: 100 கிராம் வறுத்த சிக்கன், வேக வைத்த ப்ரோக்கோலி

நாள் #2

நாள் #2

காலை உணவு: கோழியின் சுட்ட மார்பு பகுதி, 1 கப் காலே கீரை சாப்பிடவும்

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: 100 கிராம் வான்கோழி மார்பு, மிளகு தூவி இருக்கவும்.

மதிய உணவு: 1 வறுத்த மீன், ஆலிவ் எண்ணெய் 1/2 ஸ்பூன் சேர்த்த கீரை சாலட்

மாலை ஸ்நாக்: 100கிராம் வான்கோழி மார்பு கறி, 75கிராம் வேக வைத்த ப்ரோக்கோலி.

இரவு உணவு: வறுத்த ஆட்டிறைச்சி, வேக வைத்த முளைக்கீரை மற்றும் ப்ரோக்கோலி

நாள் #3

நாள் #3

காலை உணவு: சல்மான் மீன் 100 கிராம், முளைக்கீரை 1 கப்

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: 100 கிராம் வான்கோழி மார்பு, மிளகு தூவலுடன்

மதிய உணவு: கோழியின் மார்பு பகுதியை வறுத்து சாப்பிடவும். இதில் 1/4 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொள்ளவும்

மாலை ஸ்நாக்: 100 கிராம் வான்கோழி கறி, 1/4 அவகோடா பழம்

இரவு உணவு: வறுத்த ஆட்டி இறைச்சி, வேக வைத்த முளைக்கீரை மற்றும் ப்ரோக்கோலி

MOST READ: ஜப்பானியர்கள் நீண்ட ஆயுளுடனும், கச்சிதமான எடையுடனும் இருக்க காரணம் என்னனு தெரியுமா..?

நாள் #4

நாள் #4

காலை உணவு: ஒரு முழு முட்டை மற்றும் 2 முட்டையின் வெள்ளை கருவை சமைத்து சாப்பிடவும். காலை உணவுடன் தக்காளி, பச்சை பட்டாணியும் சேர்த்து கொள்ளவும்.

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: 1/4 வெள்ளரிக்காயுடன் சேர்த்த 100 கிராம் வான்கோழி கறி

மதிய உணவு: கீரை சாலட், தக்காளி, முளைக்கீரை, 1/2 ஸ்பூன் அழிவே எண்ணெய் சேர்த்த சாலட்

மாலை ஸ்நாக்: 100 கிராம் கோழியின் மார்பு, 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பச்சை கீரை

இரவு உணவு: 100கிராம் கோழியின் மார்பு கறி, வேக வைத்த ப்ரோக்கோலி

நாள் #5

நாள் #5

காலை உணவு: 200 கிராம் வான்கோழி மார்பு பகுதி, 1/4 அவகேடோ, 1/4 வெள்ளரிக்காய்

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: வேகவைத்த முட்டை 2, மிளகு சேர்த்து கொள்ளவும்.

மதிய உணவு: 150கிராம் வறுத்த இறால், தக்காளி, பச்சை கீரைகள், 1/2 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்த சாலட்

மாலை ஸ்நாக்: 100கிராம் வான்கோழி மார்பு பகுதி, 5 பாதம்

இரவு உணவு: 100கிராம் கோழியின் மார்பு கறி, வேக வைத்த ப்ரோக்கோலி

நாள் #6

நாள் #6

காலை உணவு: வறுத்த கோழி 1

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: வறுத்த மீன் 1, மிளகு சேர்த்து கொள்ளவும்

மதிய உணவு: 100 கிராம் சிக்கன், தக்காளி சேர்த்து கொள்ளவும்.

மாலை ஸ்நாக்: 150 கிராம் வான்கோழி கறி, வேக வைத்த ப்ரோக்கோலி, ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடவும்.

இரவு உணவு:150 கிராம் ஆட்டிறைச்சி, வேக வைத்த பச்சை பட்டாணி மற்றும் ப்ரோக்கோலி

நாள் #7

நாள் #7

காலை உணவு: 3 முட்டை ஆம்லெட், வறுத்த தக்காளியுடன் வேக வைத்த முளைக்கீரையை சேர்த்து சமைத்து சாப்பிடவும்

காலை மற்றும் மதிய உணவிற்கு நடுவில்: 100 கிராம் வான்கோழி, பிரேசில் நட்ஸ் 5

மதிய உணவு: 150 கிராம் கோழியின் மார்பு கறி, வேக வைத்த அஸ்பாரகஸ் மற்றும் கீரை சாலட்

மாலை ஸ்னாக்: 1/4 கப் வெள்ளரிக்காய் சேர்த்த 100 கிராம் வான்கோழி கறி

இரவு உணவு: வறுத்த சதையற்ற வைத்து மார்பு கறி, வேக வைத்த ப்ரோகோலியுடன்

MOST READ: எமன் உங்களை நெருங்கிவிட்டார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

முக்கிய குறிப்பு...

முக்கிய குறிப்பு...

இந்த 7 நாள் டயட்டை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். இதில் கூறப்பட்டுள்ள ஒன்றை கூட மறவாமல் இருக்க வேண்டும். இல்லையேல் தொப்பை குறையாது. இந்த எளிய பிளானை செய்து வந்தாலே உங்கள் தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விடும்.

மேலும் இவற்றை நினைவில் கொள்க...!

மேலும் இவற்றை நினைவில் கொள்க...!

-குளிர் பானங்கள் குடிப்பதை கட்டாயம் இந்த 7 நாட்களில் தவிர்க்க வேண்டும்.

- உப்பை அதிகமாக உங்களின் சமையலில் சேர்த்து கொள்ள கூடாது

- பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இந்த 7 நாள் டயட்டில் உபயோகிக்க கூடாது.

- இரவு சாப்பிட்ட பிறவு எந்த நொறுக்கி தீனியையும் சாப்பிட கூடாது.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Day Flat belly diet And The Easiest Weight Loss Tips

These tips are very useful to get flat belly.
Desktop Bottom Promotion