For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பழம் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அடுத்த முறை சாப்பிடறதுக்கு முன்னாடி இத படிச்சிட்டு போங்க...

நீங்கள் பொதுவாக செய்கின்ற 5 வகையான டயட் பிழைகள் பற்றியும் அது எப்படி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது என்று விவாதிக்கப்பட்டுள்ளது.

|

உயர் கொலஸ்ட்ரால் அளவு கொண்ட மக்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் அவர்கள் உணவு பழக்கத்தை மேற்கொள்வதால் அவர்களின் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது.

5 Diet Mistakes People with High Cholesterol Make

ஆனால் இந்த முன்னேற்றத்தை காண விடாமல் சில தவறுகளை அவர்கள் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் நன்றாக சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் அறியாமை மற்றும் தவறான தகவல் மூலம் சில தவறுகளை செய்து அவர்களின் முயற்சியை கெடுத்து விடுகின்றனர்.

எவ்வளவு உணவு எடுத்துக் கொண்டாலும், எவ்வளவு மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் கொலஸ்ட்ரால் அளவு குறையாமல் இருப்பது என்பது அந்த பாதிப்பை கொண்டவர்களுக்கு ஒரு வித சலிப்பை உண்டாக்கும். மேலும் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களின் பாதிப்பை அதிகமாக்கி நிலைமையை மோசமாக்கும். ஆகவே இத்தகைய தீங்கு இழைக்கும் தவறுகள் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இதனைப் பற்றி தெரிந்து கொள்வதால் புத்திசாலித்தனமாக அதனைக் கட்டுப்படுத்தி பிரச்னையை போக்கலாம்.

MOST READ: உங்க கிட்னிய இப்படி சுத்தமா வெச்சுக்கணுமா? இந்த இலைய தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...

உணவில் செய்யும் தவறுகள்

உணவில் செய்யும் தவறுகள்

உயர் கொலஸ்ட்ரால் அல்லது ஹைப்பர் கொலஸ்ட்ராலோமேனியா பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்கள் கூறும் அறிவுரை படி நடந்து கொள்ள வேண்டும். உங்கள் உணவு பழக்கத்தில் பெரிய மாறுதலை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை வந்தாலும் அதனையும் பின்பற்ற வேண்டும். இத்தகைய உணவு மாற்றத்தால், பல சிக்கலான மற்றும் அபாயமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.

பழங்கள்

பழங்கள்

நன்றாக சாப்பிடுவது என்பது பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மட்டுமல்ல. சில குறிப்பிடத் தகுந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது என்பதால் இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

உங்கள் உணவுப் பழக்கத்தில் எதாவது தவறு இருக்கும் என்று கருதுகிறீர்களா? உங்கள் உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் உங்களுக்கு நல்ல தீர்வு வேண்டுமா? தொடர்ந்து இந்த பதிவைப் படித்து அதற்கான தீர்வைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை அளவு

சர்க்கரை அளவு

சர்க்கரை சாப்பிடுவதால், உங்கள் உடலின் கொலஸ்ட்ரால் அளவில் நேரடி பாதிப்பு எதுவும் உண்டாவதில்லை. இருப்பினும், உயர் சர்க்கரை உணவுகள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கும் உணவுகளாக இருக்கும்.

ஆனால் இத்தகைய உணவுகளை மிக அதிகம் எடுத்துக் கொள்வதால் உங்கள் எடை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. அதிக எடை அல்லது உடல் பருமன் என்பது உயர் கொலஸ்ட்ரால் பாதிப்புடன் நெருங்கிய தொடர்பு கொள்ளும் விஷயமாகும். இந்த உணவுகளில் உள்ள உயர் க்ளைகமிக் குறியீடு எண்கள் உடலின் சர்க்கரை அளவை அதிகரித்து காலப்போக்கில் தமனிகளின் சுவர்களை சேதம் செய்து விடும்.

கொலஸ்ட்ரால் உணவுகள்

கொலஸ்ட்ரால் உணவுகள்

உணவின் கொலஸ்ட்ரால் அளவில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் பெரும்பாலும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். இது பெரும்பாலும் அனைவரும் செய்யும் செயலாகும், ஆனால் இது ஒரு தவறான செயலாகும்.

கொலஸ்ட்ரால் என்பது சில குறிப்பிட்ட உணவை எடுத்துக் கொள்ளும்போது கிடைக்கும் ஒரு வித கொழுப்பாகும். ஆனால் உங்கள் கல்லீரலும் இதனை உற்பத்தி செய்கின்றது. ஆகவே இதனை சாப்பிடாமல் இருப்பதால் மட்டும் தடுக்க முடியாது. ட்ரான்ஸ் கொழுப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு போன்றவற்றின் ஆதாரத்தை தவிர்க்க வேண்டும். இதனால் உங்கள் கல்லீரலின் சுமை அதிகரிக்கலாம்.

MOST READ: பனிகாலம் ஆரம்பிச்சிடுச்சு... இப்படி பாலம் பாலமா வெடிக்கும் பாதத்துக்கு சிம்பிளா என்ன பண்ணலாம்?

கொழுப்பை அகற்றுவது

கொழுப்பை அகற்றுவது

உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் செய்யும் ஒரு தவறு இது. உங்கள் உணவில் இருக்கும் மொத்த கொழுப்பையும் நீக்குவது என்பது சரியான யோசனை இல்லை. ஆனால் இதற்கு மாற்றாக நல்ல கொழுப்பை தேர்ந்தெடுத்து உண்ணலாம்.

பொதுவாக உணவில் பல விதமான கொழுப்புகள் உண்டு. அவை, நிறைவுற்ற கொழுப்பு, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு, பல்நிறைவுறாக் கொழுப்பு (ஒமேகா 3 & 6) ஆகியவை ஆகும். இவற்றில் நிறைவுற்ற கொழுப்பை மிகக் குறைந்த அளவு எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் நல்ல கொழுப்பை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதய பாதிப்புகள்

இதய பாதிப்புகள்

நிறைவுற்ற கொழுப்பு உணவுகள் இதய நோய் பாதிப்பை அதிகரிக்கலாம். அதே சமயம், நிறைவுறாக் கொழுப்பு உணவுகள் நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கும். இதனால் உங்கள் தமனிகள் பாதுகாக்கப்படுகின்றன. நல்ல கொழுப்பு உணவின் உதாரணம் , அவகாடோ, ஆலிவ் எண்ணெய், நட்ஸ் போன்றவை.

உணவு அட்டவணை

உணவு அட்டவணை

விரைவு திருத்த உணவு அட்டவணை என்பது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவிற்கு குறுக்கு வழியில் இட்டுச் செல்லும். இந்த வழி உங்களை பல விதங்களில் கட்டுப்படுத்துகின்றன. மேலும் குறிப்பிட்ட பிரிவு ஊட்டச்சத்துகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கின்றன.

வேகமாக தீர்வுகள் கிடைக்கும் பலருக்கு அடுத்த சில வாரங்களில் அவர்கள் தீர்வில் முரண்பாடு தோன்றுவதற்கு இதுவே முக்கிய காரணம். அவர்கள் அளவில் மாற்றம் ஏற்பட்டாலும், எடை குறைந்தாலும், வழக்கமான உணவு பழக்கத்திற்கு மாறும்போது, அவர்களின் முயற்சிகள் அனைத்தும் பாழாகி விடுகின்றன. கொழுப்பின் அளவும் மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடும்.

நிரந்தர டயட்

நிரந்தர டயட்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பின்பற்றும் நல்ல டயட் முறை நிரந்தரமானதாக இருக்க வேண்டும். சில நாட்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும் டயட் வகையால், உங்கள் எடை அதிகரித்து மறுபடி கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

 ஸ்டேடின் மற்றும் பம்பரமாசு பழம்

ஸ்டேடின் மற்றும் பம்பரமாசு பழம்

உயர் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க மருத்துவர்கள் ஸ்டேடின் எடுத்துக் கொள்வதை பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் பம்பரமாசு பழத்தை எடுத்துக் கொள்வது தவறான செயல் ஆகும். மருந்து உடலில் சீராக உறிஞ்சப்படுவதை இது தடுக்கிறது. அதே சமயம், இந்த பழம், ஆரோக்கியமானது, குறைந்த கலோரி பழம், ஆனால், ஸ்டாடினுடன் சேர்த்து இதனை எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

MOST READ: மச்சத்தின் மேல் முடி முளைத்தால் என்ன அர்த்தம்னு தெரியுமா? அந்த மரண அபாயம் பத்தி தெரிஞ்சிக்கோங்க...

பரிசோதனைகள்

பரிசோதனைகள்

உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள், உங்கள் உணவு முறையில் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதால் எந்த ஒரு சிகிச்சையும் நல்ல பலன் கொடுக்கும். மேலும் இதனைத் தொடர்ந்து, வழக்கமான பரிசோதனைகள எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். இதற்குக் காரணம், உயர் கொலஸ்ட்ரால் பாதிப்பு உடலில் எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிபடுத்தாமல் உள்ளுக்குள்ளேயே பாதிப்பை உண்டாக்கிக் கொண்டு இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Diet Mistakes People with High Cholesterol Make

here we are discussing about 5 Diet Mistakes People with the causes of High Cholesterol Make.
Story first published: Wednesday, November 21, 2018, 15:08 [IST]
Desktop Bottom Promotion