For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை கிடுகிடுவென அதிகரிக்கச் செய்யும் 5 பானங்கள்

நோஞ்சான் போல தோற்றமளிக்க யாரும் விரும்புவதில்லை. பார்க்க கெத்தாக இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு.

|

நோஞ்சான் போல தோற்றமளிக்க யாரும் விரும்புவதில்லை. பார்க்க கெத்தாக இருக்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு. உடல் எடையை கூட்டுவதற்கு பல முயற்சிகளை செய்கிறோம். அதில் முக்கியமானது புரதம் என்னும் புரோட்டீன் சத்து நிறைந்த துணை உணவுகள்.

health

புரோட்டீன் ஷேக்குகள் உடல் எடையை கூட்டுவதற்கு உதவுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. பல வகை புரோட்டீன் ஷேக்குகள் எப்படி செயல்படுகின்றன; நல்ல பலன் பெறுவதற்கு அவற்றை எப்படி தயாரிக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வே புரோட்டீன் ஷேக்

வே புரோட்டீன் ஷேக்

புரத மாவு என்னும் புரோட்டீன் பவுடர், உடல் எடையை கூட்டுவதில் கொழுப்பு போல செயல்படுவதில்லை. மாறாக, தசைகளின் அடர்த்தியை, எடையை அதிகரிக்கிறது. தசைகளின் அடர்த்தியை அதிகரிப்பதற்கு 'வே புரோட்டீன்' நல்ல துணை உணவாகும். 'வே புரோட்டீன்' வெனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெரி மற்றும் பைனாப்பிள் என்று பல சுவைகளில் கிடைக்கிறது.

'வே' வேகமாக செரித்து, சாப்பிட்டவுடன் தசைகளை அடைகிறது. தசைகளில் அதிக இரத்த ஓட்டத்தை தூண்டும் சிறு பெப்டைடுகள் இதில் உள்ளன. இது ஆண்டிஆக்ஸிடண்டாகவும் செயல்படுகிறது.

250 மி.லி அளவு சூடான அல்லது குளிர்ந்த பால் அல்லது நீரோடு இரண்டு டீஸ்பூன் 'வே புரோட்டீன்' பவுடரை கலந்தால் அருமையான புரோட்டீன் ஷேக் ரெடி. உடற்பயிற்சி செய்த பின்னர் இதை பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

கேஸூ புரோட்டீன் ஷேக்

கேஸூ புரோட்டீன் ஷேக்

முன்பு பார்த்த 'வே புரோட்டீன்' போன்றே கேஸூ புரோட்டீனும் தசைகளில் புரத தயாரிப்பை தூண்டுகிறது. இதையும் உடற்பயிற்சி செய்த பின்னரே சாப்பிட வேண்டும். கேஸூ புரோட்டீனில் அமினோ அமிலங்கள் சமச்சீரான அளவில் உள்ளன. இது மெதுவாக செரிக்கக்கூடிய என்றபோதிலும், படுப்பதற்கு முன்பு இதை எடுத்துக்கொண்டால், உடலுக்கு கெடுதியை விளைவிக்கும் 'கட்டாபாலிஸம்' என்னும் கேடான சிதைமாற்றம் நடைபெறாமல் தடுக்கும்.

ஏனைய புரோட்டீன் துணை உணவுகளைப் போன்றே இதுவும் பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது. 'வே' 'கேஸூ' ஆகிய இரு புரோட்டீன்களையும் ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து, 250 மி.லி சூடான அல்லது குளிர்ந்த, பால் அல்லது நீரில் கலந்து, உடற்பயிற்சியை முடித்தபின்னர் பருகினால் நல்ல பலன் இருப்பதாக இது குறித்த ஆய்வுகள் கூறுகின்றன.

கிரியாட்டின் புரோட்டீன் ஷேக்

கிரியாட்டின் புரோட்டீன் ஷேக்

ஆர்ஜினைன், மெத்தியானைன், கிளைஸின் ஆகிய அமினோ அமிலங்கள் கிரியாட்டின் புரோட்டீனில் உள்ளன. கிரியாட்டின் புரோட்டீன் ஷேக்கை துணை உணவாக கொள்ளும்போது, உடல் எடை 2.25 கிலோ முதல் 4.5 கிலோ வரை அதிகரிக்கிறது என்று பல்வேறு சமயங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதை எடுத்துக்கொள்பவர்கள் ஆற்றல் அதிகரிப்பதையும், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடிவதாகவும் உணர்வர். வளர்ச்சியை தூண்டக்கூடிய, இன்சுலினை அதிகரிக்கக்கூடிய ஐஜிஎஃப்-1 என்ற காரணி அளவு உயர்வதற்கு கிரியாட்டின் புரோட்டீன் இன்றியமையாததாகும்.

கிரியாட்டின் புரோட்டீனை, கார்னஸைன் புரோட்டீனோடு கலந்து, அதாவது இரண்டிலும் ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து, 250 மி.லி. சூடான அல்லது குளிர்ந்த பால் அல்லது நீரோடு கலந்து எடுத்துக்கொள்வது சிறப்பான பலனை தரும்.

பிராஞ்ச்டு செயின் அமினோ அமில ஷேக்

பிராஞ்ச்டு செயின் அமினோ அமில ஷேக்

ஐஸோலூஸின், லூஸின் மற்றும் வாலின் ஆகிய அமினோ அமிலங்களே பெரும்பாலும் பிசிஏஏஎஸ் அல்லது பிராஞ்ச்டு செயின் அமினோ அமிலங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. திசுக்களை இணைக்கக்கூடிய புரதப்பொருளை உருவாக்குதல், சேதமுற்ற தசை திசுக்களை குணமாக்குதல் ஆகியவற்றுக்கு இவை உதவுகின்றன. இவற்றுள் லூஸின், தசை அடர்த்தி எடை கூடுவதற்கு உதவுகிறது. இவை மூன்றுமே நல்ல ஆற்றலை தருகின்றன; தசை வளர்ச்சியை தூண்டுகின்றன; தசை திசுக்களை குணமாக்குகின்றன. பிராஞ்ச்டு செயின் அமினோ அமிலங்கள், டெஸ்டோஸ்டீரானை தடுக்கக்கூடிய, தசைகளை கெடுதி செய்யக்கூடிய கோர்டிசால் என்னும் ஹார்மோனின் அளவை குறைக்கிறது.

மற்றவற்றை போன்றே இதிலும் இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து, சூடான அல்லது குளிர்ந்த பால் அல்லது நீரில் கலந்து பருகலாம்.

பீட்டா அலனைன் அல்லது கார்னஸைன் ஷேக்

பீட்டா அலனைன் அல்லது கார்னஸைன் ஷேக்

பீட்டா அலனைன் ஹிஸ்டிடைனுடன் இணைந்து கார்னஸைனை உருவாக்குவது சிறப்பம்சமாகும். கார்னஸைனின் அளவு அதிகமாகும்போது, நீண்ட நேரம் சோர்வு அணுகாமல் இருக்க முடியும். கார்னஸைன், தசைகளின் நார்த்தன்மையை அதிகரிப்பதால், விரைவில் சோர்வடைவது தவிர்க்கப்படுகிறது.

பீட்டா அலனைன் அல்லது கிரியாட்டின் புரதங்களை தனித்தனியே எடுத்துக்கொள்வதைக் காட்டிலும், இரண்டையும் சேர்த்து உட்கொண்டால் தசைகளின் அடர்த்தி, எடை நன்கு கூடும். பீட்டா அலனைன் துணை உணவு பல்வேறு சுவைகளில் கிடைக்கிறது.

பீட்டா அலனைன் மற்றும் கிரியாட்டின் புரோட்டீனை பவுடரை ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு டீஸ்பூன் எடுத்து, 250 மி.லி. சூடான அல்லது குளிர்ந்த பால் அல்லது நீரில் கலந்து பருகலாம். புரோட்டீன் ஷேக் பருகுங்க; மசில்ஸ் மாஸை கூட்டுங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Best Protein Shakes For Weight Gain

5 Best Protein Shakes For Weight Gain
Story first published: Saturday, April 28, 2018, 10:00 [IST]
Desktop Bottom Promotion