For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா? முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் !

|

இன்றைக்கு உடல் எடை குறைப்பது என்பது பலரும் மேற்கொள்ளக்கூடிய ஓர் செயலாக இருக்கிறது. வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவு பழக்கங்களினாலும் ஒபீசிட்டி பிரச்சனையால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

டயட் இருப்பதினால் உயிர் போகக்கூடிய சூழலும் ஏற்படலாம் என்ற அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னாடி உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் தான் இப்படியான பிரச்சனை ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வெறும் உணவு முறைகளில் கொண்டு வரப்படுகிற அளவுக்கு அதிகமான மாற்றங்களால் கூட மாரடைப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

weight loss

Image Courtesy

இதில் பலியாகியிருப்பது 21 வயது மருத்துவ மாணவர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ மாணவர் :

மருத்துவ மாணவர் :

Image Courtesy

ஆந்திராவைச் சேர்ந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் வைஷ்ணவ். நேற்று இரவு வழக்கம் போல சாப்பிட்டு தூங்கச் செல்லும் போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியிருக்கிறார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார் வைஷ்ணவ்.

என்ன காரணம் :

என்ன காரணம் :

Image Courtesy

21 வயதே நிரம்பிய வைஷ்ணவ் மூன்றாமாண்டு மருத்துவம் படித்து வருகிறார். இவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று உறுதியாக எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும் வைஷ்ணவ் உடல் எடையை குறைக்க டயட் கன்ட்ரோலில் இருந்ததாகவும் அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பிற்கு அவர் கடைபிடித்த டயட் முறை கூட காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.

அதோடு வைஷ்ணவிற்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, அவரது உடலில் வேறு பிரச்சனை இல்லை என்பதையும் அவரது குடும்பத்தினர் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

ரத்த நாளங்கள் :

ரத்த நாளங்கள் :

உடல் எடையை குறைப்பது என்பது உங்களுக்கு வெளித்தோற்றத்தில் மட்டும் பிரச்சனையை ஏற்படுத்துவதல்ல உள்ளுருப்புகளையும் அது பெரிதும் பாதிக்கிறது.

இதயத்திற்கு தேவையான ரத்தத்தை கொண்டு செல்லும் முக்கியமான வேலையை ரத்த நாளங்கள் மேற்கொள்கிறது. உடல் எடையை குறைக்கிறேன் என்று நீங்கள் பின்பற்றும் டயட்டினால் இந்த ரத்த நாளங்கள் பாதிப்படையவும் வாய்ப்புண்டு.

லிப்பிட் :

லிப்பிட் :

இதனை ரத்தத்தில் இருக்கிற கொழுப்பு என்கிறார்கள். எடையை குறைப்பதால் உடலில் இருக்கிற நல்ல கொழுப்பு மற்றும் கெட்ட கொழுப்பின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும்.

உடல் எடை குறைப்பதால் உடலில் ட்ரக்லைசேரைட்ஸ் குறையும். இது எல்டிஎல் மற்றும் ஹெச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவில் மாற்றங்களை கொண்டு வரும்.

பளாட் க்ளாட் :

பளாட் க்ளாட் :

முறையான மருத்துவ ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளப்படுகிற டயட்டினால் ரத்த அழுத்தம் குறைய வாய்ப்புண்டு. டயட் என்றதும் உணவு சாப்பிடாமல் பட்டினி இருப்பது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது.

இதயத்திற்கு மூளைக்குச் செல்கிற ரத்தத்தின் அளவினையும் இது குறைத்திடும்.

தொப்பை :

தொப்பை :

தொப்பை இருப்பவர்களுக்கு இதயப்பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பீர் குடிப்பதால் வந்த தொப்பை என்று பெருமை பட்டுக்கொள்ளும் தொப்பை கூட இதில் அடக்கம். இதனால் மரணம் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.

இதைத் தவிர உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இதயத்தைச் சுற்றியும் கொழுப்பு சேர்கிறது இதுவும் பெரும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திடும்.

கண்டுபிடிக்கலாம் :

கண்டுபிடிக்கலாம் :

உங்களுக்கு இதயத்தைச் சுற்றி கொழுப்பு சேர்ந்திருக்கிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க சில அறிகுறிகள் இருக்கிறது. உங்களது இடுப்பகுதி மற்றும் தொடைப்பகுதி பெரிதாக இருக்கும்.

அதிக நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பவர்கள். உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம் ஏற்படும்.

டயட் :

டயட் :

பெரும்பாலும் இன்று கொடுக்கப்படுகிற டயட் மூன்று பிரிவுகளாக பிரித்துவிடலாம். அவை அதிக கொழுப்பு, அதிக ப்ரோட்டோன் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுப்பது. இரண்டாவதாக கொழுப்பு மற்றும் ப்ரோட்டீன் மிதமாக எடுத்துக் கொண்டு கார்போஹைட்ரேட் அதிகளவு எடுத்துக் கொள்வது.மூன்றாவது கொழுப்பு குறைவாகவும் கார்போஹைட்ரேட் அதிகமாக எடுத்துக் கொள்வது ப்ரோட்டீன் தேவையான அளவும் எடுத்துக் கொள்வது.

கொலஸ்ட்ரால் :

கொலஸ்ட்ரால் :

நீங்கள் சாப்பிடும் உணவுகளில் கலோரி குறைவாக இருக்கவேண்டும் என்று சொல்வதற்கும் வெஜிடேரியன் உணவுகளை டயட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதற்கும் முக்கிய காரணம் அதில் இருந்து நமக்கு கொலஸ்ட்ரால் குறைவாக கிடைக்கும் என்பதால் தான். அதே நேரத்தில் எனர்ஜியும் போதுமானது கிடைத்திடும்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

உடல் எடையை குறைக்க, கொழுப்பை கரைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுவது சாதரணமாக நடக்கிறது. இதுவும் மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது. குறுகிய காலத்தில் உடல் எடை குறைக்க வேண்டும் என்று எடுத்துக் கொள்ளப்படுகிற இது போன்ற மருந்துகள் பின்விளைவுகளை ஏற்படுத்துக்கூடும்.

இது இதயத்தில் வால்வுகளை சிதைக்கும்,மேலும் மாரடைப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகப்படுத்தும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

இதய ஆரோக்கியத்திற்கு கூட உடற்பயிற்சி செய்வது நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது ஆனால் அதீதமான உடற்பயிற்சி கூட மாரடைப்பிற்கு ஒர் காரணமாக அமைந்திடுகிறது. தொடர்ந்து அதிக நேரம் பயிற்சி செய்வது, அதிக வியர்வை கொட்டி உடற்பயிற்சி செய்தால் கொழுப்பு கரைகிறது என்று அர்த்தம் என்று நாமாக தவறாக நினைத்துக் கொண்டு அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதும் தவறானது.

அதே போல மாத்திரையை எடுத்துக் கொள்ளும் போதும் இந்த தவறினை பலரும் செய்வார்கள். மருத்துவர்கள் ஒரு மாதம் சாப்பிடச் சொல்லியிருந்தால் அதோடு நிறுத்திட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால் எப்படியும் உடல் எடை குறையும் தானே என்று நினைத்துக் கொண்டு மருத்துவர் சொன்ன காலத்திற்கும் அதிகமாக மருந்துகளை எடுத்துக் கொள்வதும் தவறானது.

தண்ணீர் :

தண்ணீர் :

உடல் நலம் மற்றும் உடல் எடை தொடர்பான எந்த கட்டுரை படித்தாலும் அதில் ஒரு வரியாவது தண்ணீரைப் பற்றி வராமல் இருக்காது. உங்கள் உடல் டிஹைட்ரேசன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள், போதுமான அளவு தண்ணீர் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படும். இதற்கு காரணம் தெரியுமா?

டயட் இருக்கும் போது உங்கள் உடல் விரைவில் டீஹைட்ரேசன் ஆகிட வாய்ப்புண்டு. டீ ஹைட்ரேசன் ஏற்பட்டால் இதயம் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்படும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்பட வாய்ப்புண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

21 year old Boy Died Because of weight loss diet?

21 year old Boy Died Because of weight loss diet?
Story first published: Wednesday, May 23, 2018, 12:49 [IST]
Desktop Bottom Promotion