மொத்த உடல் இயக்கங்களும் சீராக இருக்க இந்த 6 விஷயங்களை நீங்கள் கடைபிடிங்க!!

Posted By: Ambika Saravanan
Subscribe to Boldsky

உடல் எடை ஏறும் போது எந்த கவலையும் இல்லை. தானாக ஏறி விடும். ஆனால் அதனை குறைக்க நாம் படும் பாடு..அப்பப்பா சொல்ல முடியாது. .. அதுவும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் எடைக் குறைப்பு என்பது இன்னும் கடினம். எடை குறைப்பு மேற்கொள்ளும் போது உடலும் மனமும் சேர்ந்து அந்த இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்.

ஒட்டு மொத்த உடல் நலத்திற்கும் யோகா பயிற்சி ஏற்றது. இன்றைய கால கட்டத்தில் பலரும் யோகா பயிற்சியை மேற்கொள்கின்றனர். பல விதமான யோகாசனங்கள் இருக்கின்றன.

Things you must follow during weight loss

எல்லா வற்றையும் ஒரே நாளில் செய்வதை விட ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் செய்வது போதுமானது. ஒரே விதமான யோகாவை தினமும் செய்வதைவிட அடிக்கடி வேறு வேறு யோகாசங்களை மேற்கொள்வது நல்லது.

யோகாசனம் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் . உடலில் கொழுப்பு சேராமல் இருக்கும். மொத்த உடலின் அமைப்பையும் சீராக்க உதவும் சில வழிமுறைகளை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடை பயிற்சி:

நடை பயிற்சி:

ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் காலையில் அல்லது மாலையில் நடை பயிற்சி செய்ய வேண்டும். இந்த பயிற்சிக்கு எந்த ஒரு இலக்கணமும் கிடையாது. உணவுக்கு முன் அல்லது பின், காலை அல்லது மாலை, என்று நமது வசதிக்கு ஏற்ப இந்த நடை பயிற்சியை மேற்கொள்ளலாம். விதிகள் ஏதும் இல்லை என்பதால் விளைவுகளில் எந்த குறையும் இருக்காது. நடை பயிற்சியால் தசைகள் நல்ல பலம் பெறும் .

 அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்:

அடிக்கடி உண்பதை தவிர்த்திடுங்கள்:

அடிக்கடி உண்பதால் நாம் உண்ணும் உணவின் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கலாம். காலை உணவை சிறிய அளவு எடுத்து கொள்ளுங்கள். மதிய உணவை இஷ்டம் போல் உண்ணுங்கள்.

நண்பகல் நேரத்தில் உண்ணுவதை வழக்கமாக கொள்ளுங்கள். சூரியன் உச்சியில் இருக்கும் நேரம் ஜீரண சக்தி அதிகமாக இருக்கும். அதிக அளவு உணவை மதிய வேளையில் எடுத்துக் கொள்ளலாம்.

மாலை 3-5 மணிக்கு சாலட் அல்லது பழங்கள் சாப்பிடலாம். இரவு உணவை மிகவும் எளிமையாக முடித்து கொள்ளுங்கள். இரவில் சாப்பிடாமல் இருப்பதும் எடை குறைப்பிற்கு நல்லது தான்.

எடை குறைப்பு மாத்திரைகள்:

எடை குறைப்பு மாத்திரைகள்:

இன்று சந்தைகளில் எடை குறைப்பிற்கான மாத்திரைகள் விற்கப்படுகின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம். இயற்கையான முறையில் எடை குறைப்பு செய்வது எந்த பக்க விளைவுகளும் இல்லாத நல்ல பலனை தரும்.

மசாஜ்:

மசாஜ்:

எண்ணெய் மசாஜ் நல்ல பலனை தரும். திருமணம் ஆனவர் என்றால், உங்கள் துணைவரை மசாஜ் செய்ய சொல்லலாம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவை மசாஜிற்கு சிறந்ததாகும். எடை அதிகரித்துள்ள பாகங்களில் இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்து வந்தால் சில நாட்களில் நிச்சயம் எடை குறையும்.

ஆரோக்கியமான செரிமான பாதை:

ஆரோக்கியமான செரிமான பாதை:

உங்கள் வாயில் இருந்து குடல் வரை செல்லும் செரிமான பாதையை தூய்மையாக வைத்து கொள்வது அவசியம். குடல் எவ்வளவு தூய்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு குடலின் இயக்கமும் வேகமாக இருக்கும். இந்த விகிதம் சரியாக இருக்கும் வரை தேவையற்ற கொழுப்புகள் உடலில் தங்க நேரிடாது.

பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!

பின்பற்ற வேண்டிய விஷயங்கள்!!

கார்போஹைடிரேட் அதிகம் உள்ள அரிசி உணவை தவிர்க்க வேண்டாம். புழுங்கல் அரிசிக்கு பதிலாக, கை குத்தல் அரிசி அல்லது பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம்.

முட்டை கோஸ் , காலிப்ளவர் , சுரைக்காய் ஆகியவற்றை உங்கள் தினசரி உணவாக்குங்கள்.

வயிற்றில் தங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க மஞ்சள் உதவுகிறது. ஆகையால் தினம் உங்கள் உணவில் 1 ஸ்பூன் மஞ்சளை சேருங்கள்.

கரு மிளகு எடையை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

கொழுப்பை எரிக்க சீரகம் உதவும். இதனால் எடை குறைகிறது.

இஞ்சி டீயை தினமும் பருகுங்கள்.

செரிமான மண்டலத்திற்கும் பாதைக்கும் கடினத்தை கொடுக்க கூடிய உணவுகளாகிய, சிப்ஸ், கார்போனேட்டட் பானங்கள், மைதா உணவுகள் போன்றவற்றை தவிர்த்து மேலே கூறிய பயிற்சிகளை மேற்கொண்டால் எடை குறைப்பு என்பது சாத்தியமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things you must follow during weight loss

Things you must follow during weight loss
Story first published: Monday, September 18, 2017, 11:12 [IST]