நல்லா தூங்கறதுக்கும், உடல் இளைப்பதற்கும் இருக்கும் சம்பந்தம் என்னதெரியுமா?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

நல்லா தூங்குறது ஒரு வரம், அதுவும் இன்னைக்கு வேலைக்குப் போற அத்தனை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெரிய இழப்பே, நல்ல தூக்கம்தான், நானெல்லாம் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு, என்ற ஆதங்கங்களை நிறைய கேட்டிருக்கலாம். என்ன காரணம்? ஏன் நல்லாத் தூங்க முடியலே? நல்ல தூக்கத்துக்கும், உடம்பு வெயிட் போடாம ஸ்லிம்மா இருக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?

நாளெல்லாம் உழைத்து வீடு திரும்பி, இரவு உணவருந்தி விட்டு சிறிது நேரம் குடும்பத்தினருடன் பேசிப் பின் படுக்கப் போனால், அன்றைய தின அசதியிலேயே, தூக்கம் வரணுமில்லையா? ஏன் வர மாட்டேங்குது?

Why You Need To Sleep More To Eat Less?

இன்றைக்கு உள்ள நெருக்கடிகள் நிறைந்த பணிச் சூழ்நிலைகளும், வியாபார உலகின் கடும் வணிகப் போட்டிகளும்தான் இதுக்குக், காரணம். நெருக்கடியான காலக் கெடுவுக்குள் முடிக்கவேண்டிய வேலைகள் மற்றும் சேல்ஸ் டார்கெட்டை அடைய முடியா விட்டால், மன உளைச்சல்கள் தரும் வசவுகள், நீ எதற்கும் லாயக்கில்லை, என்று சம்பளத்தையோ அல்லது சலுகைகளையோ குறைப்பது, அதன் பின்னும், வேலையை தக்க வைக்க இலக்கை அடைய கடும் போராட்டம் என்ற நிலையில் இருக்கும் வேலைக்கு செல்வோர் எல்லாம், அந்த மனப் பதட்டத்திலேயே, மனதைச் செலுத்தி உறக்கத்தை இழக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூக்கம் கெட காரணம்?

தூக்கம் கெட காரணம்?

பணி நெருக்கடியில் அல்லது அதிகப்படியான வேலைப் பளுவால் நாம் அதிகம் தவற விடுவது, உணவைத் தான், நேரத்திற்கு சாப்பிட வேண்டிய உணவுகளை, இத்தகைய பாதிப்புகளால், நேரந்தவறி, அதனால் ஏற்பட்ட அதீத பசியினால், சற்றே அதிகமாக கொழுப்பு மற்றும் கார வகை மிக்க உணவுகளாக எடுத்துக் கொள்வதால் தூக்கம் குறையும்.

குளிர்ச்சியான உணவுகள் :

குளிர்ச்சியான உணவுகள் :

உணவு உண்ண வாய்ப்பில்லாத இடங்களில், பசியினால் உண்டான உடலின் அசதியை போக்க வேண்டி, கடைகளில் குளிர் பதனப் பெட்டிகளில் அடைத்து குளிர்ச்சியாக விற்கும் எனர்ஜி பானங்கள், சாக்லேட் போன்ற மிகை கலோரி சக்தி கொண்டவற்றை எடுத்துக் கொள்வது, இதனால் எல்லாம் உடல் களைப்பு தீராது, மாறாக சற்று நேரத்தில் மீண்டும் பசிக்க ஆரம்பிக்கும், இப்படியே தொடர, இவைகளை மீண்டும் பருகவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

பிறகு எப்போது வாய்ப்பு கிடைக்குதோ, அப்போதுதான் சாப்பாடு என்று, நேரந்தவறி உண்ண நேர்கையில் கிடைக்கும் புரோட்டா மற்றும் கொழுப்பு அதிகரித்த கார உணவுகளை உண்பது.

உணவிற்கு அடிமை :

உணவிற்கு அடிமை :

இத்தகைய உணவுகளால், பானங்களால் பசி குறையாது மாறாக சற்று நேரம் கழித்து மீண்டும் பசிக்கும், இரவு உணவையும் இதேபோல சாப்பிட, அதனால் பசி போனாலும், இந்த வகை உணவுகளின் தாக்கத்தால், உறக்கம் வராது, இரவில் மீண்டும் பசிக்கும், ஏதாவது சாப்பிடத் தொன்றும்,

இப்படியே உறக்கமும் கெட்டு, மிக்க கலோரி உள்ள உணவுகளை சாப்பிட்டு, அவற்றை அழிக்க வழியில்லாமல் அவை உடலிலேயே தங்கி, உடலின் தோற்றமும் கெட்டு, முகம் உடல் கை கால்கள் எல்லாம், அதிகப் படியான கொழுப்புகளினால், வீங்கும், அந்த வீக்கம் நோயின் அறிகுறிகள் என எண்ணாது, அப்படி காணப்படும் பெண்களை, நல்ல புஷ்டியான உடல் அமைப்புள்ள பெண்கள் என சிலர் எண்ணுவர், காரணமறிந்தோர் இன்றைய இளம் பருவத்தினர் உடல் நிலை கண்டு, வருந்தவே செய்வர்.

எளிமையாகச் சொன்னால், குறைவான தூக்கம், அதிகப் படியான உணவை உண்ணச் செய்து, உடலை உப்ப வைக்கும்.

தூக்கம் கெட்டா, எப்படி எடை கூடும்?

தூக்கம் கெட்டா, எப்படி எடை கூடும்?

குறைவான உறக்கம் உள்ளவர்களின், உடல் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெற்று உடல் எடை கூடுகிறது, என்பது மருத்துவவியலாளர்களின் நவீன ஆய்வின் முடிவு.

அதேபோல, அதிக நேரம் விழித்திருக்கும்போது, அதிக உணவு உண்ண, மிக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அதன் காரணமாக, உடல் எடை கூடுவதாகவும் தெரிவிக்கிறது.

நல்லா தூங்கினா என்ன ஆகும்?

நல்லா தூங்கினா என்ன ஆகும்?

மேற்கூறியவைகளுக்கு எல்லாம் மாறாக, ஒருவர் நன்கு உறங்குகிறார் என்றால் என்ன பொருள்? அவர், வேலைப் பாதிப்புகளை, தன் வீட்டிற்கு வெளியிலேயே விட்டுவிட்டு வருகிறார்.

மேலும், எத்தகைய பணிச் சூழ்நிலைகளாலும், தன்னுடைய உணவுப் பழக்கங்கள் மாறிட அனுமதிக்க மாட்டார். அவருக்குத் தெரியும், நல்ல உடல் நலனுடன் உள்ள நல்ல மன நிலையில்தான், நன்கு பணியாற்றி, இலக்கை அடைய முடியும் என்பது.

நல்லா தூங்கினா கொஞ்சமா சாப்பிடுவோம் :

நல்லா தூங்கினா கொஞ்சமா சாப்பிடுவோம் :

ஆமாம், யோசித்து பாருங்க, நல்ல ஆழமான உறக்கம், காலையில் புத்துணர்ச்சியை அளிக்கும், அதன் காரணமாக உடலுக்குத் தேவையான நல்ல உணவுகளையே, காலையில் சாப்பிடுவார்கள், மற்ற கொழுப்பு அல்லது தேவையற்ற உணவு வகைகளின் பால் ஆர்வம் இராது.

மதிய உணவையும் தீர்மானித்து வீட்டிலிருந்தோ அல்லது மெஸ்ஸிலோ சாப்பிடும்போதும், சத்தான உணவையே சாப்பிடுவார்களே ஒழிய, கிடைக்கும் உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மேலும், உடல் ஊக்க சக்தி பானங்கள் மற்றும் குளிர் பானங்களை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள்..

இது போன்ற, காரணங்களால், உடலின் ஆற்றல் சீராகி, இரவு மிதமான உணவுக்குப் பின் உறங்கச் செல்லும்போது, நல்ல ஆழ்ந்த உறக்கம் கிட்டும்.

நல்ல உறக்கத்தின் காரணமாக, உடலில் இயல்பான பசி உணர்வை சுரக்கும் அமிலங்கள் நல்ல உணவை உண்டவுடன் நின்றுவிடும்,

 தூக்கமின்மையால் வரும் விபரீதம் :

தூக்கமின்மையால் வரும் விபரீதம் :

சரியாக தூக்கம் இல்லாதவர்களின் பசியைத் தூண்டும் சுரப்பிகளின் அதீத செயல்பாட்டால், உடற்சோர்வின் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பசியால், கிடைக்கும் நேரத்திலெல்லாம் உண்டு.

இடையே குளிர் பானங்களையும் பருகி வருவார்கள். இதனால், பசியும் ஓயாது, மாறாக, இரவு உணவுக்குள் அவர்கள் பல முறை ஏதேதோ உணவுகளை உண்டு, உடலின் கலோரி அளவை அதிகரித்திருப்பார்கள், இதன் காரணமாக உண்டாகும் கொழுப்புகளின் உருவாக்கத்தால், உடல் நிச்சயம் வீங்கவே செய்யும், இதையறியாமல் உடல் பெருத்துவிட்டது என எண்ணிப் பெருமிதம் கொள்ளுவார்கள்.

நல்ல தூக்கத்தை எப்படி அடைவது?

நல்ல தூக்கத்தை எப்படி அடைவது?

உறங்கச்செல்லும்போது, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல், சிறிது நேரம் மூச்சை நன்கு உள்ளே இழுத்து விடலாம், மேலும் தினசரி உறங்கச் செல்லும் நேரத்தை, ஒரே நேரமாக பராமரித்துக்கொள்ளலாம்.

மறுநாள் விடுமுறை நாளானாலும், உறங்கும் நேரத்தை மாற்றாமல். காலையில் எழும் நேரமும், தினசரி ஒரே நேரமாக இருந்தால் நலம். சிறிது நேரம் மூச்சை நன்கு இழுத்து விட்டுக் கொண்டு, காலையில் சற்று நேரம் உடற்பயிற்சிகள் செய்வது, மனதை பிரெஷ் ஆக்கி, அன்றைய நாளை நல்ல முறையில் எதிர் கொள்ள உத்வேகம் அளிக்கும்.

ஒரு முக்கியமான விஷயம், விடுமுறை நாளானாலும், தினமும் எழுந்திருக்கும் நேரத்தில் மாற்றம் வேண்டாம், பணி நாட்களில் உள்ள அந்த சுறுசுறுப்பு, விடுமுறை தினத்தில் வீட்டிலும் இருந்தால், வீடே மகிழ்ச்சியாகவும், குழந்தைகளும், உற்சாகமாக இருப்பார்கள்தானே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why You Need To Sleep More To Eat Less?

Why You Need To Sleep More To Eat Less?
Story first published: Monday, June 19, 2017, 13:30 [IST]