சீக்கிரமாக உயரமாக நீங்கள் இதை மட்டும் செய்தால் போதும்!

Written By:
Subscribe to Boldsky

பள்ளியில் என்று பார்க்கும் போது குழந்தைகளில் சற்று உயரம் குறைவாக இருப்பது நல்ல விஷயம் தான். ஏனென்றால் அவர்கள் முன் வரிசையில் அமரலாம். அவர்களுக்கு அனைத்து சான்ஸ்களும் முதலில் கிடைக்கும். நன்றாக படிக்கவும் முடியும். ஆனால் ஒரு கூட்டத்தில் என்று பார்க்கும் போது, குள்ளமாக இருப்பது பிரச்சனை தான். நீங்கள் ஹீல்ஸ் அணிய வேண்டியிருக்கும். ஹீல்ஸ் அணிவது சௌகரியமாகவும் இருக்காது.

நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்களது வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட வயதுடன் என்றுமே முடிந்து போவதில்லை. எனவே நீங்கள் எந்த வயதிலும் உயரம் கூடுவதற்கான முயற்சியை எடுக்கலாம். இந்த பகுதியில் நீங்கள் உயரமாக கடைப்பிடிக்க வேண்டிய சில ஆரோக்கிய நடைமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஆரோக்கியமான உணவு

1. ஆரோக்கியமான உணவு

உணவு என்பது அனைவருக்கும் இன்றியமையாதது தான். அதிலும் ஆரோக்கியமான காலை உணவு என்பது மிக முக்கியமானது. எனவே நீங்கள் காலை உணவை மட்டும் ஒருகாலமும் தவிர்க்க கூடாது. நீங்கள் தொடர்ச்சியாக காலை உணவை தவிர்த்து வந்தால் உங்களது வளர்ச்சி தடைபடும். அது உங்களை குட்டையாக கூட ஆக்கலாம்.

2. தவிர்ப்பது நல்லது

2. தவிர்ப்பது நல்லது

ஆல்கஹால் அருந்துவது, புகைப்பிடிப்பது, புகையிலை பயன்படுத்துவது போன்ற போதை பழக்கங்களை தவிர்க்க வேண்டும். இது உங்களது உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சக்கூடியது. நீங்கள் இதனால் குட்டையாக கூடும். அதுமட்டுமின்றி அதிகமாக காபி குடிப்பதும் கூடாது. இதுவும் உங்களது உயரத்தை பாதிக்கும்.

3. நல்ல தூக்கம்

3. நல்ல தூக்கம்

உங்களது ஹார்மோன்கள் சீராக இயங்க, உங்களுக்கு நல்ல தூக்கம் தேவைப்படுகிறது. போதுமான அளவு தூக்கம் என்பது உடலின் வளர்ச்சிக்கு மிக மிக முக்கியமானதாகும். எப்போதும் அமைதியான சத்தமில்லாத இடத்தில் தூங்குவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

4. டயட்

4. டயட்

நீங்கள் ஆரோக்கியமான டயட்டை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதில் புரோட்டின் மினரல், விட்டமின்கள், கார்போஹைட்ரைட்டுகள், தேவையான கொழுப்புகள் ஆகியவை இருக்க வேண்டும். நீங்கள் சரியான விகிதத்தில் அனைத்து சத்தான உணவுகளையும் சாப்பிட வேண்டும். பால் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்வது உங்களது ஊட்டச்சத்து பற்றாக்குறையை பூர்த்தி செய்யும்.

5. சரியான உடலமைப்பு

5. சரியான உடலமைப்பு

நீங்கள் அமரும் விதம் மற்றும் நிற்கும் விதங்கள் கூட உங்களது உயரத்தை பாதிக்கலாம். நீங்கள் சரியாக அமர்ந்தாலும், நின்றாலும் உங்களது உயரம் 6 இன்ஞ் வரை அதிகரிக்கும். எனவே எப்போது நேராக அமரவும், நிற்கவும் செய்ய வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to increase your height

How to increase your height
Story first published: Thursday, September 21, 2017, 13:07 [IST]