For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ‘உலக அழகி ’பட்டத்திற்காக இவ்வளவு மெனக்கெடல்களா!!! மனுஷி சில்லரின் சீக்ரெட்ஸ்....

  |

  சமீபத்தில் சீனாவின் சான்யா நகரில் நடைப்பெற்ற உலக அழகிக்கான போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். சுமார் 108 நாடுகளிலிருந்து பங்கேற்ற அழகிகளில் பல சுற்றுகளின் முடிவில் மனுஷி வென்றிருக்கிறார்.

  1966 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவிலிருந்து ரீட்டா ஃபாரியா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு டயானா ஹெட்டன்,யுக்தா முகி,ப்ரியங்கா சோப்ரா என இந்தியாவிலிருந்து உலக அழகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதோ இன்றைக்கு

  சுமார் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்தவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  மனுஷி சில்லர் :

  மனுஷி சில்லர் :

  ஹரியாணாவைச் சேர்ந்த மனுஷி சில்லரின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி இருக்கிறார்கள்.

  டெல்லியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த மனுஷி, அதன்பிறகு சோனிபட்டிலுள்ள பகத் புல் சிங் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

  இவரது டயட் சீக்ரெட் பற்றி உங்களுக்காக சில சுவாரயத் தகவல்கள்.

  விருப்பங்கள் :

  விருப்பங்கள் :

  இதய அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டும் என மருத்துவப் படிப்பைத் தேர்ந்தெடுத்த மனுஷி உலக அழகி ஆக வேண்டும் என்பதற்காக ஒரு வருட படிப்பை தற்போது நிறுத்தியிருக்கிறார்.

  இதோடு மனுஷி ஒரு தேர்ந்த குச்சிப்புடி நடனக்கலைஞராவார். இவருக்கு ஓவியத்திலும் ஆர்வமிருக்கிறது. விடுமுறை நாட்களில் பாரா க்ளைடிங்,ஸ்கூபா டைவிங்,ஃபங்கி ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது தான் இவரது பொழுதுபோக்காகவும் விருப்பமாகவும் இருந்திருக்கிறது.

  ஃபிட்னஸ் சீக்ரெட் :

  ஃபிட்னஸ் சீக்ரெட் :

  தினமும் யோகா பயிற்சி, எட்டு மணி நேரம் தூக்கம், தூங்குவதற்கு இரண்டு மணிநேரம்முன் செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது, ஒரு நாளுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதுதான் மனுஷியின் ஃபீட்னஸ் சீக்ரெட்ஸ்!

  Image Courtesy

  டயட் :

  டயட் :

  காலையில் எழுந்ததும் கொஞ்சம் எலுமிச்சைச் சாறுடன் தண்ணீர் குடிப்பார். காலைச் சிற்றுண்டியாக பழங்கள் அல்லது ஒட்ஸ் கஞ்சி சாப்பிடுவார்.

  மதிய உணவுக்கு ஒரு கப் சாதத்துடன் கேரட், பீட்ருட் போன்ற காய்கறிகள், மாலை சிற்றுண்டியாக பழச்சாறுகள், டின்னருக்கு சிக்கன்/வெஜிடபிள் சூப், கொஞ்சம் புலாவ் வகை உணவுகள்.

  Image Courtesy

  யோகா :

  யோகா :

  ஒல்லியாக உடல்வாகு இருக்க வேண்டும் என்பதைத் தாண்டி தசைகளை இறுக்கமாக்கவும், posture அழகாக வரவும் தினமும் யோகா செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதோடு யோகா உடலை வளைவுத் தன்மையுடனும், பலத்துடனும் இருக்க உதவியிருக்கிறதாம்.

  Image Courtesy

  ப்ளாங்க்ஸ் :

  ப்ளாங்க்ஸ் :

  இது ஒரு வகையிலான உடற்பயிற்சி தான். தரையில் ஒரு மேட்டை விரித்து அதன் மேல் படுத்துக் சில பயிற்சிகளை செய்வார்கள்.இது குறிப்பிட்ட சில இடங்களில் தசையை கரைப்பதற்காக, பேலன்ஸ் செய்வதற்காக இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகீறது. குறிப்பாக வயிற்றுப்பகுதிக்கு இது மிகவும் உபயோகமானதாக இருந்திடும்.

  இதுப்பற்றி மனுஷி கூறுகையில், இந்தப் பயிற்சி செய்வதனால் நம் உடலில் உள்ள ஒவ்வொரு தசைக்கும் பலனளிக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

  Image Courtesy

  பைலேட்ஸ் :

  பைலேட்ஸ் :

  இது தற்போது இருபதாம் நூற்றாண்டில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.இதனை உருவாக்கிய ஜோசம் பைலேட்ஸின் பெயரையே அப்படியே இதற்கு வைத்துவிட்டார்கள்.இதுவும் ஒருவகையிலான பேலன்சிங் பயிற்சி தான்.

  உடல் வலிமையை,நெகிழ்வுத்தன்மையை இது கூட்டும், அதோடு இது முதுகெலுமையும் சீரமைக்கும் என்பதால் இந்தப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

  Image Courtesy

  டயட்டீசியன் :

  டயட்டீசியன் :

  ப்ரத்யோகமாக மனுஷி தனக்கென்ற ஒரு டயட்டீசியனை நியமித்து கடுமையான கட்டுப்பாடுகளுடன் உணவு எடுத்துக் கொண்டிருக்கிறார். டயட்டீசியன்,நமாமி அகர்வால் மனுஷிக்கு ஒரு நாளைக்கு ஆறு வகையாக பிரித்துக் கொடுத்திருக்கிறார். எல்லா உணவிலுமே ப்ரோட்டீன் அதிகப்படியாக இருந்திருக்கிறது.

  Image Courtesy

  ஒரு நாளில்.. :

  ஒரு நாளில்.. :

  விடியற்காலை : ஒரு கிளாஸ் எலுமிச்சை கலந்த தண்ணிர்

  காலை உணவு : ஓட்ஸ் அல்லது கோதுமை ஃப்ளேக்ஸ். இவற்றுடன் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்துக் கொள்வார்.

  மதிய உணவு :

  ஒன்று அல்லது இரண்டு சப்பாத்தி.ஒரு கப் வேக வைத்த சாதம்,ஒரு கப் காய்,ரைத்தா மற்றும் சாலட் சாப்பிடுங்கிறார்.

  மாலையில் : ஏதேனும் பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்மூத்தி,வெள்ளரி, கேரட் போன்றவற்றை தயிர் கலந்து சாப்பிடுகிறார்.

  இரவு உணவு : இரவு உணவை மாலை ஏழு மணிக்கே எடுத்துக் கொண்டு விடுகிறார். சீமைத்திணை (Quinoa) எனப்படுகிற ஒரு வகையான சிறுதானியத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாலட்,அல்லது புலாவ் எடுத்துக் கொள்கிறார்.இத்துடன் ஏதேனும் ஒரு சூப் கண்டிப்பாக இடம் பிடிக்கிறது. கார்ன் அல்லது வெள்ளைச்சுண்டல் சாலட் சாப்பிடுகிறார்.

  போஸ்ட் டின்னர் : இரவு உணவுக்குப் பிறகு போஸ்ட் டின்னர் ஒன்றும் எடுத்துக் கொள்கிறார் மனுஷி அப்போது வெறும் பழங்கள் மட்டுமே.

  Image Courtesy

  உணவைத் தாண்டி :

  உணவைத் தாண்டி :

  இப்படியான மிகவும் கட்டுப்பாடான உணவுப்பழக்கத்தை தாண்டி மனுஷி கவனம் செலுத்திய விஷயங்கள் என்னென்ன தெரியுமா? மனுஷி ஒரு நாளும் காலை உணவை தவிர்க்கவே மாட்டாராம். அதே போல சர்க்கரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதில்லை, முடிந்தவரையில் சர்க்கரையை அறவே தவிர்த்துவிடுகிறார்.

  வாரத்தில் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை வொர்க் அவுட் செய்கிறார். ஒருநாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீர் வரை குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். கால் தசைகள் வலுவாக்குவதற்காக தினமும் ஸ்குவாட்ஸ் என்ற பயிற்சியை மேற்கொள்கிறார்.

  Image Courtesy

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Diet and fitness Secret of miss world Manushi chillar

  Diet and fitness Secret of miss world Manushi chillar
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more