2 மாதத்தில் 10 கிலோ எடையைக் குறைக்க உதவும் சில அற்புத பானங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையால் ஏராளமானோர் தொப்பை, உடல் பருமன் பிரச்சனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதோடு நம்மைச் சுற்றி கொழுப்புக்கள் நிறைந்த ஆரோக்கியத்தை பாழாக்கும் ஜங்க் உணவுகள் இருக்கிறது. இந்த உணவுகள் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும், அதன் சுவைக்கு அடிமையாகி பலர் அந்த மோசமான உணவுகளை அடிக்கடி சாப்பிடுகின்றனர்.

Best Belly Fat Cutter Drinks For Weight Loss

இதன் விளைவாக உடலில் ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கி, உடல் பருமன், தொப்பை மற்றும் இதர ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்பட வேண்டியிருக்கிறது. இதிலிருந்து விடுபட ஒரே வழி, ஜங்க் உணவுகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு, கொழுப்புக்களைக் கரைக்க உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க வேண்டும்.

ஒருவரது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உடற்பயிற்சி மட்டுமின்றி, குறிப்பிட்ட உணவுகள் மற்றும் பானங்கள் உதவும். இக்கட்டுரையில் தொப்பையை வேகமாக கரைக்க உதவும் சில இயற்கை பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பானம் #1

பானம் #1

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் - 1

* தேன் - 1 டீஸ்பூன்

* எலுமிச்சை - 1

* தண்ணீர் - 1 டம்ளர்

செய்முறை:

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஆப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதை இறக்கி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பின் வடிகட்டினால், பானம் தயார்!

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

* இந்த பானத்தை குளிர வைத்து, தினமும் காலை உணவின் போது குடிக்க வேண்டும்.

* இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உங்கள் எடை மற்றும் தொப்பையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

பானம் #2

பானம் #2

தேவையான பொருட்கள்:

* ஓமம் - 1 டீஸ்பூன்

* தண்ணீர் - 1 டம்ளர்

* பூண்டு - 1-2

செய்முறை:

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ஓமம் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதை வடிகட்டினால், தொப்பையைக் கரைக்கும் அற்புத பானம் தயார்!

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

* இந்த பானத்தை தினமும் ஒருமுறை குடிக்க வேண்டும்.

* அதிலும் காலை உணவிற்கு முன் குடிப்பது மிகவும் நல்லது.

* இந்த பானத்தை தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தாலே, எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

பானம் #3

பானம் #3

தேவையான பொருட்கள்:

* தண்ணீர் - 1 டம்ளர்

* க்ரீன் டீ பவுடர் -1 ஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் க்ரீன் டீ பவுடரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, பின் சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்து கலந்து கொள்ளலாம்.

* இந்த பானத்தை ஒரு காலை உணவின் போது குடிப்பது நல்லது.

* இப்படி இந்த பானத்தை ஒரு மாதம் தொடர்ந்து குடித்து வந்தால், உடல் எடை மற்றும் தொப்பையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக காணலாம்.

பானம் #4

பானம் #4

தேவையான பொருட்கள்:

* எலுமிச்சை - 1

* க்ரீன் டீ பேக் - 1

* புதினா இலைகள் - 1/4 கப்

* தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

செய்முறை:

* ஒரு கண்ணாடி பாட்டிலில் நீரை நிரப்பி, அதில் க்ரீன் டீ பேக் சேர்த்து மூடி ஃப்ரிட்ஜில் 25 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பின் அதில் உள்ள க்ரீன் டீ பேக்கை எடுத்துவிட்டு, அதனுள் புதினா மற்றும் எலுமிச்சையை துண்டுகளாக்கி சேர்த்து மூடி, மீண்டும் ஃப்ரிட்ஜில் 25 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பின்பு அதை தினமும் காலை மற்றும் மாலையில் பருக வேண்டும்.

பானம் #5

பானம் #5

தேவையான பொருட்கள்:

* ராஸ்ப்பெர்ரி - 4

* ப்ளூபெர்ரி - 4

* தண்ணீர் - 1 பெரிய டம்ளர்

செய்முறை:

செய்முறை:

* ஒரு பெரிய கண்ணாடி ஜாரில் அனைத்து பொருட்களையும் போட்டு நீரை நிரப்பி, ஃப்ரிட்ஜில் 30 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

* பின் அந்த நீரை நாள் முழுவதும் குடிக்க வேண்டும். இதனால் அந்த பழங்களில் உள்ள சத்துக்கள் முழுவதும் நீரில் இறங்கி எளிதில் தொப்பையைக் குறைக்க உதவும்.

பானம் #6

பானம் #6

தேவையான பொருட்கள்:

* ஆப்பிள் சீடர் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்

* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

* உறைய வைக்கப்பட்ட பெர்ரிப் பழங்கள் - 2 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் மற்றும் சிறிது ஐஸ் கட்டிகள்

செய்முறை:

செய்முறை:

* ஒரு அகலமான பாத்திரத்தின் அடியில் பெர்ரிப் பழங்களை வைத்து, அதன் மேல் சுவைக்கு வேண்டுமானால் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* பின் ஒரு ஸ்பூன் கொண்டு அந்த பழங்களை மசித்துக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, பின் தேவையான அளவு நீரை நிரப்பி, சிறிது ஐஸ் கட்டிகளைப் போட்டு, 1 நிமிடம் நன்கு கலந்து கொள்ளுங்கள். இப்போது பானம் தயார்.

* இதை தினமும் நாள் முழுவதும் குடிக்க உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, கொழுப்புகள் கரைந்து, தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களால் சிறப்பான பலன் கிடைக்க வேண்டுமானால், ஜங்க் உணவுகளை அறவே தொடக்கூடாது மற்றும் தினமும் தவறாமல் 45 நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் மற்றும் சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Belly Fat Cutter Drinks For Weight Loss

Fat Cutter Drink gives a boost of energy and helps lose more calories by doubling metabolic rate. Here we listed some of the best belly fat cutter drinks for weight loss. Read on...
Story first published: Thursday, December 21, 2017, 12:45 [IST]