உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத ஆயுர்வேத வழி!

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வு காண பல வழிகள் இருந்தாலும், பலரும் இயற்கை வழிகளைத் தான் நாடுகிறோம். இந்தியாவில் உள்ள ஓர் இயற்கை மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். ஆயுர்வேத மருத்துவ முறையின் மூலம் எப்பேற்பட்ட உடல்நல பிரச்சனைக்கும் தீர்வு காணலாம்.

Ayurvedic Spinach Remedy For Quick Weight Loss

இப்போது இக்கட்டுரையில் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத ஆயுர்வேத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பானத்தை உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்கள் குடித்து வந்தால், வேகமாக உடல் எடையைக் குறைத்து சிக்கென்று மாறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி சாறு - 1 டேபிள் ஸ்பூன்

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மெட்டபாலிச அளவை மேம்படுத்தி, வேகமாக உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியில் உள்ள சக்தி வாய்ந்த நொதிகள், உடலில் உள்ள செல்களால் கொழுப்புக்களை உறிஞ்ச முடியாமல் செய்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.

தயாரிக்கும் முறை:

தயாரிக்கும் முறை:

பசலைக்கீரை ஜூஸ் உடன், இஞ்சி சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் இந்த பானத்தை தினமும் காலை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி 2 மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

குறிப்பு

குறிப்பு

உடல் பருமனைக் குறைக்க எந்த ஒரு வழியைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அதனுடன் அன்றாடம் 45 நிமிடம் உடற்பயிற்சியை செய்வதோடு, கலோரிகள் நிறைந்த உணவுகள் உண்பதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ayurvedic Spinach Remedy For Quick Weight Loss

Find out how the combination of spinach and ginger can aid a quick weight loss, here.
Subscribe Newsletter