பேலியோ டயட் நல்லதா? கெட்டதா?

Written By:
Subscribe to Boldsky

பேலியோ டயட் என்று பலமாக பரவி வருகிறது. ஆனால் அதனைப் பற்றி முறையாக தெரியாமல், தவறான முறையில் டயட் இருந்தால் அதன் பின்விளைவுகள் அபாயத்தை தரும். ஆகவெ ப்லியோ டயட் எடுப்பதற்கு முன் உங்கள் உடல் பரிசோதனை செய்தபின் எந்த மாதிரியான டயட் பின்பற்றுகிறீர்கள் அதன் விளைவுகள் என அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

5 biggest mistakes that you are doing when you follow paleo diet

பொதுவாக பேலியோ டயட்டை பின்பற்றுபவர்கள் செய்யும் தவறுகளை மருத்துவர் ப்ரூக் ஆல்பர்ட் என்பவர் கூறுகிறார் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக் செய்யப்பட்ட பேலியோ உணவுகள் :

பேக் செய்யப்பட்ட பேலியோ உணவுகள் :

இப்போது பேலியோ பேக்கேஜ் உணவுகள் வரத் தொடங்கிவிட்டன. குளுடன் ஃப்ரீ, ஆர்கானிக் என்று சொன்னாலும் அவை உடல் எடையை குறைக்காது. மாறாக பாதிப்புகளை தரும்.

பேலியோ பிஸ்கெட் என்று சொன்னாலும் அவை செய்யப்படுவது சாதரண தானிய பொருட்களால்தான். பேலியோ என்று சொல்லி சோயா, பால், , தினைகள் இல்லாத பேலியோ உணவுகள் உண்பதைக் காட்டிலும் நீங்கள் புதிதான காய்கறிகள், நட்ஸ், பெர்ரி பழங்கள் என சாப்பிடலாம்.

அதிகப்படியான புரதம் :

அதிகப்படியான புரதம் :

பேலியோ என்றாலே பெரும்பாலோனோர் இறைச்சி மட்டும் உண்ணுவது என்ற தவறான கண்ணோட்டத்தில் பின்பற்றுகிறார்கள்.

ஆனால் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் வளர்சிதை மாற்றம் சீராக இருக்க மூன்றில் 1 பங்கு மட்டுமே புரதம் இருக்க வேண்டும். அதாவது உங்கள் தசை பலத்தை கூட்ட சற்று அதிகமாக புரதத்தை எடுத்துக் கொள்ளலாமே தவிர புரதம் மட்டுமே உண்வாக சாப்பிடுதல் தவறு.

காய்கறிகள் :

காய்கறிகள் :

காய்கறிகளை பெரும்பாலோனோர் பேலியோ டயட்டின் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நீங்கள் காய்கறி மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதால் குறைந்த அளவே கலோரி பெறப்படுகிரது. அதோடு நார்சத்தும் கிடைப்பதால் தசை வலிமை அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு :

ஊட்டச்சத்து குறைபாடு :

பேலியோ டயட்டில் பால், தானியங்கள், ஆகியவை இடம் பெறாது. இதனால் கால்சியம், விட்டமின் டி மற்றும் நார்சத்து குறைபாடு உண்டாகும். உடல் எடையை குறைப்பதில் கவனம் உண்டாகும் போது நாம் மற்ற சத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் இந்த டயடை பின்பற்றும்போது எலும்பு தேய்மானம் முதல் பல குறைபாடுகள் வர வாய்ப்புண்டு.

கடுமையான விதி கொண்ட டயட் :

கடுமையான விதி கொண்ட டயட் :

முழுவதுமான உங்கள் உணவு முறையை மாற்றுவதாக இருந்தால், அகற்றப்படுவதாக இருந்தால் அல்லது நீங்கள் அலர்ஜிக்கு ஆட்படுபவராக இருந்தும் கடுமையன டயட்டை பின்பற்றுவராக இருந்தால், எந்த டயட்டாக இருந்தாலும் அது தவறான தேர்வே.

ஆகவே கடுமையான நிர்பந்தங்கள் இல்லாத டயட்டை பின்பற்றுவதே வெற்றிக்கான வழி தருமே தவிர வெறும் பிரபலம் என்பதற்காக அவற்றை பின்பற்றுவது முறையாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 biggest mistakes that you are doing when you follow paleo diet

5 biggest mistakes that you are doing when you follow paleo diet
Story first published: Thursday, March 9, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter