இந்த உடற்பயிற்சிகளை தினமும் 15 நிமிடம் செய்தால், 30 நாட்களில் தொப்பையை குறைக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருக்கு தொப்பை மிகவும் வேகமாக வந்துவிடும். ஆனால் அதனைக் கரைப்பது என்பது தான் மிகவும் கஷ்டமான ஒன்று. ஆனால் சரியான டயட்டையும், உடற்பயிற்சியையும் தினமும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பையைக் குறைக்கலாம்.

தினமும் இரவில் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால் 15 நாட்களில் தொப்பையைக் குறைக்கலாம்!

உங்களுக்கு தொப்பையைக் குறைக்க ஜிம் செல்ல நேரம் இல்லையா? அப்படியெனில் கவலையை விடுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தினமும் 10 நிமிடம் பின்பற்றி வந்தாலே தொப்பையைக் குறைக்கலாம்.

ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?

அதிலும் இந்த உடற்பயிற்சிகளை ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், ஒரே மாதத்தில் உங்கள் தொப்பையில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று பார்ப்போம்.

தினமும் இந்த ஜூஸை 2 டம்ளர் குடித்து வந்தால், தொப்பையை வேகமாக குறைக்கலாம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் உடற்பயிற்சி

முதல் உடற்பயிற்சி

முதலில் தரையில் ஒரு விரிப்பை விரித்து, அதன் மேல் குப்புறப் படுத்து, படத்தில் காட்டியவாறு முழங்கை மற்றும் கால் விரல்களை ஊன்றி, உடலை நேராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்நிலையில் 1 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி 10 நொடி இடைவெளி விட்டு, 3 செட் செய்ய வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்த உடற்பயிற்சியால் உங்கள் தோள்பட்டை மற்றும் கைகள் வலிமையடைவதோடு, வயிற்றுத் தசைகள் இறுக்கப்பட்டு, கொழுப்புக்கள் கரைக்கப்படும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், விரைவில் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கலாம்.

இரண்டாம் உடற்பயிற்சி

இரண்டாம் உடற்பயிற்சி

அடுத்ததாக தவழும் குழந்தை போன்ற நிலையில், தலையை பின்நோக்கி வளைக்க வேண்டும். இந்நிலையில் 60 நொடிகள் இருக்க வேண்டும். இந்த உடற்பயிற்சியையும் 10 நொடி இடைவெளி விட்டு 3 செட் செய்ய வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இப்பயிற்சியால் முதுகு தண்டுவடத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கும். மேலும் இப்பயிற்சியின் போது அடிவயிற்று தசைகளின் இறுக்கத்தால் கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு தொப்பை குறையும்.

மூன்றாம் பயிற்சி

மூன்றாம் பயிற்சி

மூன்றாவதாக தரையில் குப்புறப்படுத்து, படத்தில் காட்டியவாறு கைகளை ஊன்றி, பாம்பைப் போல உடலை மேலே தூக்க வேண்டும். இந்த பயிற்சியையும் 1 நிமிடம் என 2 முறை செய்ய வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இப்பயிற்சியினாலும் அடிவயிற்றில் தேங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்படும். மேலும் இப்பயிற்சியை செய்வதால் முதுகுப் பகுதி வலிமையடையும்.

நான்காம் பயிற்சி

நான்காம் பயிற்சி

படத்தில் காட்டியவாறு பக்கவாட்டுப் பகுதியில் ஒற்றைக் கையை ஊற்றி உடலைத் தாங்க வேண்டும். இப்படி 1 நிமிடம் என 2 பக்கமாக 2 முறையும், இடது பக்கமாக 2 முறையும் செய்ய வேண்டும்.

நன்மைகள்

நன்மைகள்

இந்த உடற்பயிற்சியால் உடலின் உறுதி அதிகரிப்பதோடு, தொப்பையும் வேகமாக குறையும். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வயிற்றுப் பகுதிக்கான பயிற்சியை செய்கிறோமோ, அவ்வளவு வேகமாக வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Exercises To Blast Belly Fat!

Losing weight seems to a be a very tough task. At least, we all perceive it tough as we think that losing weight involves hours of workouts and rigorous...
Subscribe Newsletter