இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்!

Posted By:
Subscribe to Boldsky

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் முயற்சியில் இறங்கும் போது, பலரும் அடிவயிறு, தொடை, பிட்டம் மற்றும் கைகளில் உள்ள கொழுப்பைத் தான் குறைக்க முயல்வார்கள். நிறைய மக்கள் இடுப்புப் பகுதியிலும் கொழுப்பு தேங்கியுள்ளதை மறந்திருப்பார்கள்.

கொழுப்புக்கள் அடிவயிற்றிற்கு அடுத்தப்படியாக இடுப்புப் பகுதியில் தான் அதிகம் தேங்கும். மேலும் அது தான் ஒருவரின் உடல் வடிவமைப்பை மாற்றி அசிங்கமாக வெளிக்காட்டுவதும் கூட. ஆகவே கொழுப்பைக் குறைக்க முயலும் போது, இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பையும் கரைக்க உதவும் உடற்பயிற்சிகளை செய்து வாருங்கள்.

இங்கு இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பை நீக்க உதவும் சில எளிய உடற்பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புஷ்-அப்

புஷ்-அப்

பலரும் புஷ்-அப் கைகளுக்கு ஓர் நல்ல வடிவமைப்பைக் கொடுக்க மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் புஷ்-அப் செய்வதால், இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்புக்களும் தான் கரையும். ஆகவே உங்கள் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைப்பதற்கு தினமும் தவறாமல் புஷ்-அப் செய்யுங்கள்.

சைடு புஷ்-அப்

சைடு புஷ்-அப்

படத்தில் காட்டியவாறு சைடு புஷ்-அப் செய்வதன் மூலமும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம். அதுவும் இடது பக்கம் 30-45 நொடிகள் இருக்க வேண்டும். பின் தேப் போல் வலது பக்கம் 30-45 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி 3 செட் செய்ய வேண்டும்.

ஃபிட்னஸ் பந்து பயிற்சி

ஃபிட்னஸ் பந்து பயிற்சி

அடுத்ததாக ஃபிட்னஸ் பந்து பயிற்சி இடுப்பில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்க உதவும். அதற்கு படத்தில் காட்டியவாறு ஃபிட்னஸ் பந்தின் மையப்பகுதியில் மார்பு பகுதி இருக்குமாறு சாய்ந்து, கைகள் பக்கவாட்டில் நீட்டி, குனிந்து மார்பு பகுதியை மேலே தூக்கவும். இப்படி 12 முறை என இரண்டு செட் செய்ய வேண்டும்.

டம்பெல் லஞ்சஸ்

டம்பெல் லஞ்சஸ்

இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்க படத்தில் காட்டியவாறு டம்பெல் லஞ்சஸ் செய்ய வேண்டும். மேலும் இந்த பயிற்சிக்கு 5-7 கிலோ எடையுள்ள டம்பெல்ஸைப் பயன்படுத்த வேண்டும். இப்படி ஒரு காலில் 10 எண்ணிக்கையும், மற்றொரு காலில் 10 எண்ணிக்கையும் என 2 செட் செய்ய வேண்டும்.

பக்கவாட்டில் டம்பெல் தூக்குதல்

பக்கவாட்டில் டம்பெல் தூக்குதல்

படத்தில் காட்டியவாறு இரண்டு கைகளிலும் டம்பெல்ஸை தூக்கி வைத்து, கால்களை இடுப்பளவிற்கு விரித்து, முழங்காலை 45 டிகிரி இருக்குமாறு சற்று மடக்கி, பின் டம்பெல்ஸை தோள்பட்டையளவிற்கு உயர்த்தி, பின் கீழே கொண்டு வர வேண்டும். இப்படி 12 எண்ணிக்கையில் 2 செட் செய்ய வேண்டும். இதனாலும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.

யோகா நிலை

யோகா நிலை

படத்தில் காட்டியவாறான யோகா நிலையில் 15-30 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் 3 செட் செய்து வந்தால், இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பு கரைக்கப்படும்.

கார்டியோ பயிற்சிகள்

கார்டியோ பயிற்சிகள்

கார்டியோ பயிற்சிகளான வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் போன்றவற்றை தினமும் 30 நிமிடம் செய்து வருவதன் மூலம், இடுப்பு பகுதியில் மட்டுமின்றி, உடலின் அனைத்து பகுதியிலும் உள்ள கொழுப்பைக் கரைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Exercises That Help To Remove Back Fat

Here are some simple exercise that help remove back fat. Read on to know more...
Story first published: Tuesday, June 7, 2016, 15:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter