இன்ஸ்டா குயின் சப்னா படேல் எப்படி 33 கிலோ எடை குறைத்து சிக்கென்று ஆனார் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடை குறைக்க முடியாமல் போவதற்கு பலரும் பலவிதமான காரணங்களை கூறுவார்கள். ஆனால், விடா முயற்சியாக அதில் கவனம் செலுத்துபவர்கள் மட்டும் தான் உடற்கட்டை நல்ல நிலைக்கு கொண்டு வருவார்கள்.

Meet Sapna Vyas Patel Who Lost 33kgs In 1 Year

ஏறத்தாழ உடற்பயிற்சி செய்வதும் ஒரு தவம் போல தான். அதை தவறாமல் தினமும் செய்ய வேண்டும். தவம் கலைந்தால் வரம் கிடைக்காது, ஜிம் செல்வது கலைந்தால் உடல் எடை குறையாது.

இதோ, இந்தியாவின் இன்ஸ்டா குயினாக திகழும் சப்னா வியாஸ் படேல் ஒரே வருடத்தில் உடல் எடை குறைத்த டயட் மற்றும் ஃபிட்னஸ் குறிப்புகள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நம்பிக்கை!

நம்பிக்கை!

83 கிலோ எடை இருந்த நான் 53 எடையை எட்டினேன். அதுவும் ஒரே வருடத்தில் 33 கிலோ எடை குறைப்பு. மேலும், சற்றே எடை கூடி இருந்த போதிலும் விரும்பியபடி மகிழ்ச்சியாக தான் இருந்தேன். ஆனால், எனது உடல் என் வயதை விட முதிர்ந்து காணப்பட்டது. இது தான் என்னை சற்று வருத்தப்பட வைத்தது.

ஒருமுறை பெயர் தெரியாத நபர் என்னை ஒரு குழந்தைக்கு தாய் என்ற பார்வையில் பார்த்த போது தான் நான் எனது உடல் எடையில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். காரணம் அப்போது எனது வயது 19. அந்த ஒரு சிறிய சம்பவம் தான் என்னை இன்று ஃபிட்னஸ்-ல் அதிக கவனம் செலுத்தும் நபராக மாற்றியுள்ளது.

ஃபிட்னஸ்!

ஃபிட்னஸ்!

சாதாரண உடைகளை ட்ரையல் ரூமில் போட்டு பார்க்க கூட நான் மிக சிரமப்படுவேன். இது மிகுந்த வேதனையை அளித்தது. இதற்கே இப்படி என்றால் என்னால் ஃபேஷன் உடைகள் அணிவது கடினம். பொருந்தவே பொருந்தாது. நான் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழ இதுவும் ஒரு காரணம்.

டயட்!

டயட்!

ஆரம்பத்தில் டயட் இருக்கிறேன் என சரியான முறையில்லாமல் குறைவான உணவு உட்கொண்டது எதுவும் பயனளிக்கவில்லை. பசி தான் அதிகரித்தது. அதன் பிறகு நிறைய ஊட்டச்சத்துக்கள், டயட், உடற்பயிற்சி பற்றி படிக்க துவங்கினேன்.

எவ்வளவு சாப்பிடுகிறேனோ, அவ்வளவு உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். இதனால், நான் வேகமாக அதிக உடல் எடை குறைக்க முடிந்தது. பிறகு மெல்ல,மெல்ல கொழுப்பை குறைப்பதிலும், உடற்கட்டை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

குறிப்பாக ஒருமணிநேரம் நடப்பது, பிறகு எடை தூக்கு பயிற்சி செய்வது நல்ல பலனை அளித்தது. எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் எடை குறைத்ததாக சப்னா கூறுகிறார்.

ரீபோக் சர்டிபிகேட்!

ரீபோக் சர்டிபிகேட்!

சப்னா படேல் ரீபோக் சர்டிஃபைடு ஃபிட்னஸ் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பலர் உடல் எடை குறைக்க ஊக்கமளித்து வருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் தன்னால் முடிந்த வரை குறிப்புகள் வழங்கி வருகிறார்.

யார் இந்த சப்னா?

யார் இந்த சப்னா?

பலருக்கும் யார் இந்த சப்னா என்ற சந்தேகம் எழும். சமீபத்தில் தேர்தலின் போது இவர் ஒரு தொகுதியில் நின்று போட்டியிடுகிறார் என்ற செய்திகள் வெளியாகின. அது புரளி என இவரே கூறினார்.

இவர் அகமதாபாத் சுகாதார அமைச்சரின் மகள். இவர் இப்போது டாக்ட்ரேட் பயின்று கொண்டிருக்கிறார் என்றும் சில தகவல்கள் அறியப்படுகின்றன. இவர் டாக்ட்ரேட் பயின்று வருவது ஊர் அறிந்த செய்தி. ஆனால், சுகாதார அமைச்சரின் மகள் என்பது ஆச்சரியமளிக்கும் தகவலாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Meet Sapna Vyas Patel Who Lost 33kgs In 1 Year

Meet Sapna Vyas Patel Who Lost 33kgs In 1 Year And Inspiring Many To Live Healthy.
Subscribe Newsletter