பாகுபலி 2-க்காக காட்டுத்தனமாக உடலை ஏற்றும் ராணாவின் டயட் & ஃபிட்னஸ்!

Posted By:
Subscribe to Boldsky

பாகுபலி இந்தியா மட்டுமின்றி, உலகின் பல பகுதிகளிலும் அடடே சொல்ல வைத்த ஒரு பிரம்மாண்ட படைப்பு. கதை என்பது ஆதிகாலம் முதல் நாம் அறிந்த அதே பழிவாங்கும் படலம் என்றாலும். உருவாக்கம் பார்ப்பவரை மீண்டும், மீண்டும் பார்க்க வேண்டும் என தூண்டியது.

இதற்கு காரணம் வெறும் செட்டுகள் மட்டுமல்ல, பிரபாஸ் மற்றும் ராணா போன்றவர்களுடைய சுய ஈடுபாடுகளும் கூட. அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர்கள் உடற்கட்டையும் ஏற்றியிருந்தனர். இதற்காக பல லட்சங்கள் செலவு செய்யப்பட்டன.

சமீபத்தில் தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் தற்போதைய பாகுபலி 2-க்கான தனது காட்டுத்தனமாக லுக்கை வெளியிட்டு ராணா அமர்களப் படுத்தியுள்ளார். சரி, இனி ராணா பின்பற்றும் டயட் மற்றும் ஃபிட்னஸ் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை 6 மணி!

காலை 6 மணி!

தினமும் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்ய துவங்கிவிடுகிறார் ராணா. வெறும் வயிற்றில் 40 நிமிடங்கள் ஏப்ஸ் (வயிறு) பகுதிகளுக்கு பயிற்சி செய்கிறார். அடுத்த 30 நிமிடங்களுக்கு புஷ்-அப்ஸ், புள்-அப்ஸ் மற்றும் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.

மாலை!

மாலை!

மாலை வேளைகளில் உடல் பகுதிகளுக்கான பயிற்சிகளில் ஈடுபடுகிறார் ராணா. மார்பு, கைகள் என சிறிய, பெரிய தசை பகுதிகளுக்கு என தனித்தனி சிறப்பு பயிற்சிகளில் இடைவேளை எடுத்துக் கொள்ளாமல் ஈடுபடுகிறார் ராணா.

உணவு பிரிவுகள்!

உணவு பிரிவுகள்!

மூன்று முறை மட்டுமே உணவு உண்ணும் பழக்கம் கொண்டிருந்த ராணா, இப்போது பாகுபலி 2-க்காக உணவு வேளைகளை 6 - 8 பிரித்து, சீரான பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஒன்றரை கோடி!

ஒன்றரை கோடி!

பெரும்பாலும் காலை உணவு வேகவைத்த முட்டையில் வெள்ளை கரு, மற்றும் ப்ரோடீன் பவுடர் தான். ராணா மற்றும் பிரபாஸ் இருவருக்காக மட்டும் ஃபிட்னஸ் கருவிகள் மற்றும் உணவிற்காக 1.5 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டிலிருந்து பல பிரத்தியோக கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

ஃபிட்னஸ் மந்த்ரா!

ஃபிட்னஸ் மந்த்ரா!

அனைவரின் உடல்வாகும் ஒரே மாதிரியானது அல்ல. அவரவர் உடல் வாகு சார்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும். எனது தோள்பட்டை இயல்பாகவே பெரியது, எனவே, அதிக எடை தூக்கினால், இன்னும் பெரியதாகும். எனவே, நான் அதை குறைத்துக் கொண்டேன்.

இதே போல தான், மற்றொருவர் செய்யும் பயற்சிகளை பார்த்து நீங்கள் செய்ய வேண்டாம். இந்த முறை உங்களுக்கு அதே பலனை அளிக்காது. உடற்பயிற்சி செய்வதை உங்க அன்றாட பழக்கத்தில் ஒன்றாக மாற்றிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diet and Fitness Plan of Rana Daggubati To Bulk Up For Baahubali 2

Diet and Fitness Plan of Rana Daggubati To Bulk Up For Baahubali 2
Please Wait while comments are loading...
Subscribe Newsletter