சும்மா உட்கார்ந்திருக்கும் போது இந்த உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறைந்துவிடும்!

Posted By:
Subscribe to Boldsky

அமெரிக்கர்களுக்கு அடுத்தப்படியாக பெரிய தொப்பையை இந்தியர்கள் தான் கொண்டுள்ளனர். தொப்பை வர ஆரம்பிக்கும் போதே, அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டால், பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம்.

தொப்பை வருவதற்கு முதன்மையான காரணம் உடலுழைப்பு இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது தான். இதனால் உண்ணும் உணவுகள் செரிக்காமல், அப்படியே அடிவயிற்றில் தங்கி, தொப்பையை உருவாக்குகின்றன.

Chair Exercises That Will Reduce Your Belly Fat While You Sit

தொப்பையைக் குறைப்பதற்கு மருத்துவரிடம் சென்றால் அவர் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மாத்திரைகளைத் தான் பரிந்துரைப்பார். ஆனால் அப்படி கண்டபடி பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக ஓர் எளிய வழியை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நேரமில்லாமை

நேரமில்லாமை

பணம் சம்பாதிப்பதற்காக ஓடியாடி வேலை செய்வதால், பலருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரமில்லாமல் போகிறது. இப்படி உடல் எந்த ஒரு வேலையுமின்றி, ஆடாமல் அசையாமல் இருந்தால், தொப்பை பெருக ஆரம்பிக்கும்.

உட்கார்ந்தவாறான பணி

உட்கார்ந்தவாறான பணி

நிறைய பேருக்கு பல மணிநேரம் உட்கார்ந்தவாறே அலுவலகப் பணி உள்ளது. அதுவும் குறைந்தது 8 மணிநேரம் உட்கார்ந்து கொண்டே தான் பணி இருக்கும். அந்த 8 மணிநேரமும் வேலையிலேயே அனைவரும் மூழ்கி இருக்கப் போவதில்லை. சிறிது இடைவேளை கிடைக்கும். அப்போது வெட்டியாக உட்கார்ந்து கதைப் பேசாமல், உட்கார்ந்தவாறான உடற்பயிற்சியை செய்யுங்கள்.

புள்ளிவிவரம்

புள்ளிவிவரம்

சமீபத்திய புள்ளிவிவரத்தில் சராசரி அமெரிக்கர்கள் தினமும் 4 மணிநேரம் ப்ரீயாக இருப்பதாகவும், இந்நேரங்களை டிவி பார்க்கவும், வெட்டியாக உட்கார்ந்து கொண்டே இருக்கவும், சமூக வலைத்தளங்களைப் பார்க்கவும் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

கடுமையான விளைவுகள்

கடுமையான விளைவுகள்

இப்படி உபயோகமாக நேரத்தை செலவழிக்காமல் இருந்தால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் தான் உடல் பருமனால் அவஸ்தைப்படுபவர்களில் அமெரிக்கர்கள் இந்தியர்களுக்கு முன் உள்ளனர்.

ஃபிட்னஸ் பயிற்சியாளர் பரிந்துரை

ஃபிட்னஸ் பயிற்சியாளரான டெனிஸ் ஆஸ்டின், ஓய்வின்றி வேலைப் பார்ப்போருக்காக உட்கார்ந்தவாறே வேலை செய்வோருக்காக ஒருசில உடற்பயிற்சிகளைப் பரிந்துரைத்துள்ளார். அதை இந்த வீடியோவில் பார்த்து முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு

குறிப்பு

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், ஆரோக்கியமான மற்றும் சரிவிகித டயட்டைப் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Chair Exercises That Will Reduce Your Belly Fat While You Sit

Here are some chair exercise that will reduce your belly fat while you sit. Read on to know more...
Story first published: Thursday, November 3, 2016, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter