இந்த 7 காரணங்கள்தான் உங்கள் உடல் பருமனை குறைக்க விடாமல் செய்யும் என வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

Written By:
Subscribe to Boldsky

உடல் பருமன் என்பது எல்லா ஆபத்தான நோய்களுக்கு அடிப்படை காரணம் என போல்ட்ஸ்கையில் பல கட்டுரைகளில் பார்த்துவிட்டோம்.

உடல் குறைக்க இனியும் நீங்கள் முயற்சிக்காவிட்டால் காலம் முழுவதும் வருந்திக் கொண்டிருக்க வேண்டியதிருக்கும். குறிப்பாக பெண்கள் இதனை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

7 Reasons why is not working your diet plan

சரி. உடல் எடை குறைக்க முயற்சித்துவிட்டீர்கள். ஆனால் என்ன செய்தாலும் உடல் எடை குறையவில்லையே என கலவலைப்படுகிரீர்களா?

நீங்கள் அன்ற்டாம செய்யும் செயல்கள் என்ன என்பதில் தெளிவாக இருங்கள். இங்கே சொல்லப்பட்டிருக்கும் காரணங்களும் உங்கள் எடையை குறைக்க முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சரியாக சாப்பிடாமல் இருப்பது :

சரியாக சாப்பிடாமல் இருப்பது :

உங்கள் உடலுக்கு தேவையான கலோரியை தரவிடாமல் குறைவாக சாப்பிட்டால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால் உடல் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கச் செய்யும். அதோடு உடல் களைப்பு, அசதி ஆகியவை உண்டாக இதுதான் காரணம்.

 தவறான கலோரி உணவுகளை சாப்பிடுவது :

தவறான கலோரி உணவுகளை சாப்பிடுவது :

ஆரோக்கியமான காய் பழங்கள் 500 கலோரிகளை தந்தால் அவற்றை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்.

இவை கெடுதல் தராது. ஆனால் அதே 500 அளவு கலோரி உள்ள எண்ணெயில் பொரித்த உருளைக் கிழங்கு, சோடா போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது இவை உடல் பருமனை அதிகரித்துவிடும்.

ஆகவே சரியான கலோரி உணவுவகைகளை தேர்ந்தெடுங்கள்.

ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்வது :

ஒரே மாதிரியான உடற்பயிற்சி செய்வது :

நீங்கள் ஒரே மாதிரியான உடற்ப்யிற்சி செய்யும்போது உங்கள் உடல் அதற்கு பழகிவிடும். நீங்கள் அதிகமாக சாப்பிட்டாலும் உங்கள் அதிக கலோரிகளை எரிக்க பயன்படாது.

நீங்கள் சாப்பிடுவதை பொறுத்து உடற்பயிற்சிகளை மாற்றுவது வேகமாக உடல் குறைய பயனளிக்கும்.

உடற்பயிற்சி செய்வதால் அதிகம் சாப்பிடுவது :

உடற்பயிற்சி செய்வதால் அதிகம் சாப்பிடுவது :

நாம்தான் உடற்ப்யிற்சி செய்கிறோமே. அதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் கலோரி குறைந்துவிடும் என எண்ணுவது தவறு.

ஏனென்றால் எல்லா உடற்பயிற் சியினால் கலோரி முழுவதும் எரிந்துவிடாது. இப்படி நினைப்பதால்தான் அதிகம் சாப்பிட்டு உடல் பருமனை குறைக்க முடியாமல் திண்டாடுவோர் பாதி பேர் இருக்கிறார்கள்.

மற்றவற்றிலும் கவனம் :

மற்றவற்றிலும் கவனம் :

உடற்பயிற்சி செய்வது, சாப்பிடுவது இந்த இரண்டிலும் மட்டும் கவனமிருந்தால் போதாது.

சரியாக நீர் அருந்தாவிட்டாலும் கொழுப்பு செல்கள் அதிகரித்து எரிக்கப்படாமல் உடல் எடை அதிகரிக்கும். அது போல் தூக்கம் சரியாக இல்லையென்றாலும் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து உடல் எடையை கூட்டிவிடும். ஆகவே மற்ற ஒழுங்குகளிலும் கவனம் இருக்கட்டும்.

 பகலில் குறைத்து இரவில் சாப்பிடுவது :

பகலில் குறைத்து இரவில் சாப்பிடுவது :

பகலில் முழுவதும் கட்டுப்பாட்டிலிருந்து மாலை இரவு நேரங்களில் அதிகம் சாப்பிடுவது எதிர்விளைவை உண்டாக்கும். செரிமான பிரச்சனை உருவாக்கும். உடல் எடை குறைக்க உதவாது.

 உயரம், தோற்றத்திற்கு தகுந்தாற்போல் :

உயரம், தோற்றத்திற்கு தகுந்தாற்போல் :

சிலர் வேகமாக உடல் எடை குறைப்பார்கள். இதனால் அவர்களைப் போலவே நாமும் முயற்சிக்கலாம் என தவறாக எண்ணக் கூடாது.

அவரவர் உடல் வாகு, தோற்றம் உயரம் பொறுத்து உடல் எடை குறையும். நீங்கள் முதலில் உங்கள் உடலின் அமைப்பை புரிந்து அதற்கேற்றபடி பயிற்சி டயட்டை மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Reasons why is not working your diet plan

Why your body weight is not reducing by your diet plan. here the reasons.
Story first published: Wednesday, November 16, 2016, 8:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter