முப்பதே நாட்களில் தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள டயரைக் கரைத்து, பானை போன்றுள்ள தொப்பையைக் குறைக்க வேண்டுமா? அதிலும் முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைக்க வேண்டுமா? தொப்பையைக் குறைக்க எவ்வளவு கடுமையான பயிற்சியையும் மேற்கொள்ள தயாராக உள்ளீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?

பலரும் ட்ரெட்மில் மற்றும் சைக்கிளிங் போன்ற உடற்பயிற்சிகளை செய்து வந்தால் தான் தொப்பையைக் குறைக்க முடியும் என்று நினைக்கின்றனர். ஆனால் நிபுணர்களோ, உடற்பயிற்சியுடன், ஊட்டச்சத்துமிக்க மற்றும் நல்ல சரிவிகித டயட்டை மேற்கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏனெனில் கொழுப்புக்களைக் கரைப்பதில் உணவுகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. பத்தே நாள் தான் டைம்.. அதுக்குள்ள தொப்பையை சுருக்கனும்.. எப்படி?...இப்படிச் செய்யலாம்!

எனவே தமிழ் போல்ட்ஸ்கை முப்பதே நாட்களில் தொப்பையைக் குறைத்து தட்டையான வயிற்றைப் பெற சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி ஒரே மாதத்தில் உங்கள் உடலை ஃபிட்டாக்குங்கள். நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்குவாட்ஸ்

ஸ்குவாட்ஸ்

இது அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவும் ஓர் எளிய உடற்பயிற்சி. இதனை ஜிம்மில் சென்று தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே செய்யலாம். இதற்கு படத்தில் காட்டியவாறு இரண்டு கைகளையும் நேராக நீட்டி, உட்கார்ந்து எழ வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 வீதம், 3 செட் செய்து வர வேண்டும்.

பார் உடற்பயிற்சி

பார் உடற்பயிற்சி

பார் உடற்பயிற்சிகளும் அடிவயிற்றில் சேர்ந்துள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். அதற்கு படத்தில் காட்டியவாறு ஓர் கம்பியைப் பிடித்து, கால்களை சற்று முன்பக்கமாக மடக்கி, உடலை மேலே தூக்க வேண்டும். இப்படி ஒரு செட்டிற்கு 10 என்ற வீதம் 3 செட் செய்ய வேண்டும்.

புஷ் அப்

புஷ் அப்

புஷ் அப் உடற்பயிற்சிகளும் வயிற்றில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும். எப்படியெனில் இந்த உடற்பயிற்சியை செய்யும் போது, அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும். இப்படி கொடுக்கப்படும் அழுத்தத்தால் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.

கொழுப்புக்களை கரைக்கும் உணவுகள்

கொழுப்புக்களை கரைக்கும் உணவுகள்

தொப்பையைக் குறைக்க நினைக்கும் போது, கலோரிகள் குறைவான உணவை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, புரோட்டீன் அதிகமான மற்றும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவை உட்கொண்டு வர வேண்டும். முக்கியமாக ஜங்க் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

பச்சை நிற பானங்கள்

பச்சை நிற பானங்கள்

தொப்பையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது பச்சை நிற பானங்களை குடித்து வாருங்கள். அதில் ஒரு நாளைக்கு 2 கப் க்ரீன் டீ மற்றும் காய்கறிகள், கீரைகளைக் கொண்டு ஸ்மூத்திக்களை செய்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொழுப்புக்கள் குறையும்.

மூச்சு பயிற்சிகள்

மூச்சு பயிற்சிகள்

மூச்சுப் பயிற்சிகளும் தொப்பையைக் குறைக்க உதவும். எனவே தினமும் 20 நிமிடம் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு வருவதன் மூலம், தொப்பையைக் குறைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Help Tone The Tummy In A Month

These tips to tone the tummy are simple. If these tips are followed everyday, in a months time you will see your tummy with abs. They are the best tips.