தினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

பேரிச்சம் பழத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற நிறைய சத்துகள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக் கூடிய உணவு இது.

உடல் எடை குறைக்க விரும்புவோருக்கான மாற்று உணவுகள்!!!

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கால பிரச்சனைகள், வெள்ளை போக்கிற்கு கூட சிறந்த தீர்வளிக்க கூடியது பேரிச்சம்பழம் என கூறப்படுகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்புச்சத்தும், கால்சியமும் உடல் வலிமையை நன்கு ஊக்குவிக்கிறது.

"உறவு"க்குள் உட்புகும் முன் இதை ஒரு கை பாருங்களேன்....!

னி, தினமும் உங்கள் டயட்டில் அல்லது உணவில் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடனுக்குடன் உடல் சக்தி

உடனுக்குடன் உடல் சக்தி

க்ளுகோஸ், ஃபிரக்டோஸ், சக்ரோஸ் போன்றவை பேரிச்சம்பழத்தில் அதிகம் இருக்கின்றன. ஆகையால் தினமும் பேரிச்சம்பழம் உட்கொண்டால், உங்கள் உடல் வலிமையும், சக்தியும் பெருமளவில் அதிகரிக்கும்.

உடல் எடை அதிகரிக்கும்

உடல் எடை அதிகரிக்கும்

ஒல்லியாக இருப்பவர்கள், உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வரலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க பயன் தருகின்றன.

எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்

எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்

பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி பேரிச்சம்பழம் சாப்பிடலாம். இதில், செலினியம், காப்பர் போன்ற சத்துகளும் இருக்கின்றன, இவை எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உறுதுணையாக இருக்கின்றன.

செரிமானம் சரியாகும்

செரிமானம் சரியாகும்

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது.

சருமத்திற்கு நல்லது

சருமத்திற்கு நல்லது

பேரிச்சம்பழத்தில் நிறைய வைட்டமின் ஏ, பி போன்றவை இருக்கின்றன. இவை, சருமத்தின் தன்மையை மிருதுவாக்குகிறது, சுருக்கங்களை போக்கவும், கோடுகள் மறையவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

இரத்த சோகைக்கு தீர்வு

இரத்த சோகைக்கு தீர்வு

பேரிச்சம் பழத்தில் இருக்கும் இரும்பு, வைட்டமின் சி, பி 6 போன்றவை இரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை சீராக்க உதவுகிறது. இதனால் இரத்த சோகை பிரச்சனைக்கு நல்ல தேர்வு காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Reasons To Add Dates In Your Diet

Do you know about the Seven Reasons To Add Dates In Your Diet? Read here.
Subscribe Newsletter