ஐந்தே நாட்களில் 3 கிலோ எடையைக் குறைக்க.. தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஜூஸ் மூலம் உடல் எடையைக் குறைப்பது. சிலர் உடல் எடையைக் குறைக்க டயட் இருக்கிறேன் என்று சரியாக சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படி இருந்தால், அவர்களின் உடல் எடை குறையும். ஆனால் அதே சமயம் அவர்களின் உடலில் உள்ள சத்துக்கள் குறைந்து, அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!

எனவே எப்போது உடல் எடையைக் குறைக்க நினைத்தாலும், தினமும் போதிய சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும்படி டயட்டை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களால் டயட் இருக்க முடியாவிட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பச்சை நிற ஜூஸை மட்டும் தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்.

உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!!

இந்த பச்சை நிற ஜூஸ் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீராக கிடைத்து, உடல் எடையும் குறையும். சரி, இப்போது அந்த ஜூஸ் எப்படி செய்வது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பார்ஸ்லி

பார்ஸ்லி

இந்த பச்சை நிற ஜூஸானது பார்ஸ்லி கொண்டு செய்யப்படுவதாகும். பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு, வைட்டமின் சி, கே மற்றும் ஈ போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.

ஜூஸ் செய்யும் முறை

ஜூஸ் செய்யும் முறை

1 கட்டு பார்ஸ்லி
1 எலுமிச்சை
1 கப் தண்ணீர்

முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

இதில் உள்ள நேயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இதனை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.

சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதை தொற்று

சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்க வேண்டுமானால், பார்ஸ்லியை உணவில் சேர்ப்பது நல்லது.

கர்ப்பிணிகள் கூடாது

கர்ப்பிணிகள் கூடாது

கர்ப்பிணிகள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பார்ஸ்லியை தவிர்ப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink This Green Miracle Juice And Reduce 3 Kg In Five Days

This green juice is used in burning calories, supplying your body with vitamins and minerals, and when you use regularly, you can have three kilos less for five days.
Story first published: Friday, October 9, 2015, 10:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter