தொடைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதற்கான சில டிப்ஸ்...!

Posted By:
Subscribe to Boldsky

தொப்பைக்கு அடுத்தப்படியாக பலரும் கஷ்டப்படும் ஓர் பிரச்சனை தொடைகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பது பற்றி தான். குறிப்பாக இப்பிரச்சனையால் பெண்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். ஆனால் சில ஆண்களும் இப்பிரச்சனையை சந்திக்கின்றனர்.

ஆண்களுக்கு மட்டும் ஏன் தொப்பை வருகிறது என்று தெரியுமா?

இப்படி தொடைகளில் உள்ள கொழுப்புக்களை சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குறைக்க முடியும். மேலும் கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருட்களை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், நிச்சயம் விரைவில் குறைக்கலாம்.

ஆண்களே! உங்கள் தொப்பையைக் குறைக்க இதோ அருமையான வழிகள்!!!

அதுமட்டுமின்றி குறிப்பிட்ட வைட்டமின்கள் மற்றம் புரோட்டீன்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். சரி, இப்போது தொடைகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவும் சில எளிய வழிகள் என்னவென்று பார்ப்போமா...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புரோட்டீன் உணவுகள்

புரோட்டீன் உணவுகள்

அன்றாடம் 2-3 வகையான புரோட்டீன் உணவுகளை உட்கொண்டு வாருங்கள். இதனால் அவை உடலுக்கு வேண்டிய ஆற்றலை வழங்கி, கொழுப்புக்களை விரைவில் கரைக்க உதவும்.

நீண்ட நேரம் அமர வேண்டாம்

நீண்ட நேரம் அமர வேண்டாம்

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டிருப்பதைத் தவிர்த்திடுங்கள். குறிப்பாக அலுவலகத்தில் அவ்வப்போது நடந்து கொண்டு இருங்கள். இதனால் தொடைகளில் கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.

மிளகாய்

மிளகாய்

தினமும் காரமான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். ஆய்வு ஒன்றில், காரமான உணவுகளை உட்கொண்டால், கொழுப்புக்கள் விரைவில் கரைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக மிளகாய் சேர்த்த உணவுகளை உட்கொண்டு வந்தால் தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் சீக்கிரம் கரையும்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸில், புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால் உடலின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, கொழுப்புக்கள் வேகமாக கரையும்.

நீச்சல்

நீச்சல்

நீச்சல் மேற்கொண்டால், தொடை மட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள அனைத்து கொழுப்புக்களும் குறைந்து, உடல் ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

மலை ஏறுங்கள்

மலை ஏறுங்கள்

தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, 1 வாரம் அல்லது 2 வாரத்திற்கு ஒருமுறை மலை ஏறும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் விரைவில் தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, கால்கள் வலிமையடையும்.

தண்ணீர்

தண்ணீர்

ஆரோக்கியமாக இருப்பதற்கு தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. குறிப்பாக எடையைக் குறைக்க நினைத்தால், தண்ணீரை அவசியம் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீரானது உடலின் ஆற்றலை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்க உதவும்.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களை காலையில் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட், கொழுப்புக்களை வேகமாக கரைக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் அதிக சேர்த்து வந்தால், உடலின் ஆற்றல் மேம்பட்டு, இடுப்பு, வயிறு, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, ஃபிட்டாகவும், சுறுசுறுப்புடனும் செயல்படலாம்.

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகள்

இரும்புச்சத்துள்ள உணவுகள், இரத்தத்திற்கு மட்டுமின்றி, உடலுக்கு ஆற்றல் வழங்குவதற்கும் இன்றியமையாதது. இந்த சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது, உடற்பயிற்சியை செய்வதற்கு தேவையான ஆற்றல் கிடைத்து, சீக்கிரம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

வைட்டமின் டி

வைட்டமின் டி

சூரியனிடமிருந்து பெறும் வைட்டமின் டி, கால்சியம் சத்தை உடல் உறிஞ்சுவதற்கு மட்டும் பயன்படுவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் இச்சத்து உதவி புரிகிறது.

பால்

பால்

பாலில் எலும்புகளுக்கு வேண்டிய கால்சியம் சத்து நிறைந்திருப்பதோடு, இது உடலுக்கு ஆற்றலையும் வழங்குகிறது. எனவே பாலை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதன் மூலம் தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரையும் போது, எலும்புகள் வலிமையடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Burn Your Thigh Fat Today With Home Remedies!

It is time to burn that ugly looking fat on your thighs! If your wondering how to get rid of it in a week, try out these effective home remedies.
Story first published: Saturday, September 19, 2015, 12:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter