சிக்ஸ் பேக் வைப்பதற்கு நடிகர் சூர்யா மேற்கொண்ட டயட் இதுதாங்க...

Posted By:
Subscribe to Boldsky

தமிழ் சினிமாவிலேயே சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா. சிக்ஸ் பேக் வைத்த பின் பல ரசிகைகளை அவர் கவர்ந்தார். சொல்லப்போனால் இவருக்கு ரசிகர்களை விட, ரசிகைகள் தான் அதிகம். இதற்கு அவரது சிக்ஸ் பேக்கை முதன்மையான காரணமாக சொல்லலாம்.

எப்போதும் ஃபிட்டாக இருப்பதற்கு அமீர் கான் பின்பற்றும் டயட் இது தாங்க...!

நடிகர் சூர்யா கஜினி படத்திற்காக 22 நாட்களில் 10 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார் என்றால் பாருங்கள். குறைந்த நாட்களில் இவ்வளவு எடையைக் குறைக்க ஜெனரல் மோட்டார்ஸ் டயட்டை மேற்கொண்டுள்ளார். ஜெனரல் மோட்டார் டயட்டானது ஏழு நாட்கள் பின்பற்ற வேண்டிய ஓர் டயட். சூர்யா சிக்ஸ் பேக் வைப்பதற்கு இந்த டயட்டைப் பின்பற்றி, மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளார்.

தமிழ் பிரபலங்களும்... அவர்களின் பிட்னஸ் மந்திரங்களும்....

சரி, இப்போது நடிகர் சூர்யா மேற்கொண்ட அந்த ஜெனரல் மோட்டார்ஸ் டயட் குறித்துப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் நாள்

முதல் நாள்

ஜெனரல் மோட்டார்ஸ் டயட்டின் முதல் நாளில் வாழைப்பழத்தைத் தவிர வெறும் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும். மேலும் முதல் நாளில் தர்பூசணி அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

இரண்டாம் நாள்

இரண்டாம் நாள்

இரண்டாம் நாளின் போது வேக வைத்த உருளைக்கிழங்கை காலை உணவாக உட்கொள்ள வேண்டும். மற்ற நேரங்களில் வெறும் காய்கறிகளை மட்டும் உட்கொள்ள வேண்டும்.

மூன்றாம் நாள்

மூன்றாம் நாள்

மூன்றாம் நாளில் பழங்கள், காய்கறிகள் என இரண்டையும் கலந்து உட்கொள்ள வேண்டும். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழத்தைத் தவிர்க்க வேண்டும்.

நான்காம் நாள்

நான்காம் நாள்

நான்காம் நாளில் பால் மற்றும் வாழைப்பழங்களை மட்டும் நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டும்.

ஐந்தாம் நாள்

ஐந்தாம் நாள்

சிக்கன் அல்லது மாட்டிறைச்சியை தக்காளியுடன் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அதுவும் க்ரில் செய்த சிக்கனைத் தான் உட்கொள்ள வேண்டும்.

ஆறாம் நாள்

ஆறாம் நாள்

ஆறாம் நாளில் க்ரில் செய்த சிக்கன் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு புரோட்டீனுடன், காய்கறிகளில் இருந்து இதர சத்துக்கள் கிடைக்கும்.

ஏழாம் நாள்

ஏழாம் நாள்

ஏழாம் நாளன்று கைக்குத்தல் அரிசி சாதம் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த டயட்டை தான் நடிகர் சூர்யா பின்பற்றினார். மேலும் இவர் எவ்வளவு டயட்டில் இருந்தாலும், குடிக்கும் தண்ணீரின் அளவை மட்டும் குறைக்கமாட்டாராம். எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு எளிதில் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும் என்றும் கூறுகிறார்.

சூர்யாவின் பரிந்துரை

சூர்யாவின் பரிந்துரை

நடிகர் சூர்யா, ஒவ்வொருவரின் உடலமைப்பும் வேறுபடும் என்பதால், சரியான உடற்பயிற்சியாளர் மற்றும் உணவுமுறை நிபுணரின் ஆலோசனையின் பேரில் சிக்ஸ் பேக் வைக்க முயற்சிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actor Surya's Diet Plan For Six Pack

According to Surya, the secret behind his weight loss is General Motors diet plan. But he had made a lot of changes in the diet plan in order to suit his body’s requirements.
Subscribe Newsletter