For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் அற்புதமான ஆரோக்கிய பானங்கள்!!!

By Maha
|

உடல் எடையைக் குறைக்க எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும் எவ்வித மாற்றமும் தெரியவில்லையா? எடையை குறைப்பதற்காக நிறைய டயட்டை பின்பற்றியுள்ளீர்களா? கவலையை விடுங்க.. உடல் எடையைக் குறைக்க பலவித டயட்டை பின்பற்றிலும் பலன் கிடைக்காவிட்டால், அதனை நினைத்து கவலைப்படாமல், டயட்டை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள். ஏனெனில் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் உடனே கரைக்க முடியாது. சில நேரங்களில் அவை கரைவதற்கு தாமதம் ஆகலாம்.

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராக இருந்தால், உங்கள் டயட்டில் ஒருசில பானங்களை சேர்த்து வாருங்கள். இங்கு அந்த பானங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை உங்கள் டயட்டில் சேர்த்து வந்தால், அவை உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை விரைவில் குறைக்க உதவும். சரி, இப்போது உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்க உதவும் பானங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர்

தண்ணீர்

உடல் எடையைக் குறைக்க ஒவ்வொரு டயட்டீஷியனும் பரிந்துரைப்பது தண்ணீர் அதிகம் குடிப்பது தான். ஏனெனில் தண்ணீர் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் வறட்சியைத் தடுத்து, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் 8 டம்ளருக்கு மேல் தண்ணீர் குடிப்பவர்களின் உடலில் கலோரிகளானது, குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவரை விட அதிக அளவில் கரைவதாக தெரியவந்துள்ளது.

கொழுப்பில்லாத பால்

கொழுப்பில்லாத பால்

கொழுப்பில்லாத பாலை அன்றாட டயட்டில் சேர்த்து வர வேண்டும். இதில் கால்சியம் அதிகம் இருப்பதால், இது கொழுப்பு செல்களை எளிதில் கலைக்க தூண்டும். இதனால் விரைவில் உடல் எடையில் சிறு மாற்றத்தையாவது காணலாம். மேலும் இதில் உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால், இது உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும்.

இளநீர்

இளநீர்

கோடையில் மட்டுமின்றி மற்ற காலங்களிலும் இளநீர் கிடைக்கும். இந்த இளநீரை எடையை குறைக்க நினைப்போர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அதனால் உடலின் எனர்ஜியும் அதிகரிக்கும். மேலும் இளநீர் நீர்ச்சத்துடனும் இருக்க வழிவகுப்பதோடு, நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடனும், பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் அடிக்கடி சாப்பிட தோன்றாது. அதுமட்டுமின்றி, இளநீர் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றும்.

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ்

காய்கறி ஜூஸ் என்று சொன்னதுமே பலருக்கு முகம் பல கோணங்களில் செல்லும். எவ்வளவு தான் காய்கறி ஜூஸ் சுவையாக இல்லாவிட்டாலும், அன்றாடம் ஏதேனும் ஒரு காய்கறியைக் கொண்டு ஜூஸ் செய்து குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, கொழுப்புக்கள் கரைத்து வெளியேற்றப்படும்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் இரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது பால் சேர்க்காமல் குடிக்கப்படுவதால், உடலில் கொழுப்புக்கள் சேர்வது குறையும். மேலும் க்ரீன் டீயை தொடர்ந்து அன்றாடம் ஒரு கப் குடித்து வந்தால், அது புற்றுநோய் வரும் வாய்ப்பை தடுப்பதோடு, முகத்தை பொலிவோடும், உடலை சிக்கென்றும் வைத்துக் கொள்ள உதவும். மேலும் ஆய்வு ஒன்றில் தினமும் 3-5 கப் க்ரீன் டீ குடித்தால், அது உடலில் உள்ள கலோரிகளை 35-43 சதவீதம் கரைக்கும் என்று தெரியவந்துள்ளது.

எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சை ஜூஸ்

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் செய்து, அதில் தேன் சேர்த்து அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகமாகி, உடல் எடையை விரைவில் குறைக்கும்.

 ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடையைக் குறைக்க உதவும் பானங்களில் மற்றொன்று தான் ஆப்பிள் சீடர் வினிகர். இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்ளும் முறை என்னவெனில், எலுமிச்சை ஜூஸில் தேனுடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரையும் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடித்து வந்தால், எடை குறையும், செரிமான பிரச்சனைகள் நீங்கும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும், அடிக்கடி பசி ஏற்படுவது குறையும்.

ப்ளாக் காபி

ப்ளாக் காபி

ப்ளாக் காபி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உண்ணும் உணவின் மூலம் அதிக அளவில் ஆற்றலைப் பெற உதவிப் புரியும். மேலும் ப்ளாக் காபியும் உடலில் உள்ள கொழுப்புக்கள் ஒன்று சேராமல் கலைத்து வெளியேற்றக்கூடியவை. அதற்கு ப்ளாக் காபியை சர்க்கரை சேர்க்காமல், வெல்லம் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் கொழுப்புக்கள் கரையும் நிகழ்வு வேகப்படுத்தப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Fat-Burning Drinks to Boost Your Weight Loss

Here are some excellent drinks that will provide a positive boost to your diet.
Story first published: Tuesday, February 3, 2015, 17:17 [IST]
Desktop Bottom Promotion