For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடல் எடையைக் குறைக்க பழங்கள் எப்படி உதவி புரிகிறது?

By Maha
|

உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் முடியவில்லையா? அப்படியெனில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பழங்கள் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எப்படியெனில் பழங்களை உட்கொண்டால், அவை வயிற்றை விரைவில் நிரப்பி, மற்ற உணவுப் பொருட்களை உட்கொள்ள முடியாதவாறு செய்கிறது.

மேலும் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருப்பதால், இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்கலாம். அதிலும் அன்னாசி, தர்பூசணி, ஆப்பிள், பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை உட்கொண்டு வந்தால், அவை உடல் எடை கணிசமாக குறைய உதவி புரியும்.

சரி, இப்போது உடல் எடையைக் குறைக்க பழங்கள் எப்படி உதவி புரிகிறது என்று பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வயிற்றை விரைவில் நிரப்பும்

வயிற்றை விரைவில் நிரப்பும்

பழங்களை உட்கொண்டால், அவை வயிற்றை விரைவில் நிரப்பிவிடும். அதிலும் உணவிற்கு முன் ஒரு பௌல் பழங்களை உட்கொண்டால், உணவு உட்கொள்ளும் அளவு குறைந்துவிடும். இதனால் உடல் எடை குறையும்.

உணவின் மீது நாட்டம் குறையும்

உணவின் மீது நாட்டம் குறையும்

பழங்களை அடிக்கடி உட்கொண்டு வந்தால், கண்ட கண்ட உணவுகளின் மீது நாட்டம் குறையும். இதன் மூலம் மற்ற உணவுகளால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.

செரிமானத்தை சீராக்கும்

செரிமானத்தை சீராக்கும்

பழங்களில் உள்ள பெக்டின் செரிமானம் சீராக நடைபெற உதவி புரியும். அதிலும் பேரிக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது செரிமான பிரச்சனை ஏற்படுவதைத் தடுக்கும்.

குறைந்த கிளைசீமிக் நிறைந்த பழங்கள்

குறைந்த கிளைசீமிக் நிறைந்த பழங்கள்

குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த பழங்களை டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும் நிகழ்வு வேகமாக நடைபெறும். அப்படி குறைந்த அளவு கிளைசீமிக் இன்டெக்ஸ் நிறைந்த பழங்கள் என்றால் அது வாழைப்பழம் மற்றும் ஆப்பிள் தான்.

கிரேப் ஃபுரூட்

கிரேப் ஃபுரூட்

உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, பிரட் டோஸ்ட் செய்து, முட்டையை சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு பௌலி கிரேப் ஃபுரூட் சாப்பிட்டால், உடல் எடை குறைவது வேகமாகும். ஏனெனில் கிரேப் ஃபுரூட்டில் நீர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், அவை வயிற்றை விரைவில் நிறைத்துவிடும்.

சிவப்பு ஆப்பிள்

சிவப்பு ஆப்பிள்

ஆப்பிளில் புரோட்டீன் அதிகம் இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். எனவே உங்களுக்கு உடல எடையை விரைவில் குறைக்க நினைத்தால், ஆப்பிளை அதிகம் சாப்பிட்டு வாருங்கள்.

உலர் பழங்களை தவிர்க்காதீர்கள்

உலர் பழங்களை தவிர்க்காதீர்கள்

பழங்களைப் போலவே உலர் பழங்களும் உடல் எடையைக் குறைக்க பெரும் உதவி புரியும். அதிலும் உலர் கொடிமுந்திரி உடல் எடையைக் குறைப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சேர்த்தால், உண்ணும் உணவுகள் நன்கு செரிமானமாகி, உடலில் கொழுப்புக்கள் சேர்வது தடுக்கப்படும். அதிலும் பழங்களில் வாழைப்பழம், ராஸ்பெர்ரி மற்றும் பேரிக்காய் மிகவும் சிறந்தது.

சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்கள்

சர்க்கரைக்கு 'நோ' சொல்லுங்கள்

உணவில் சர்க்கரை சேர்ப்பது தவிர்க்க வேண்டும். அதே சமயம் பழங்களில் இயற்கை சர்க்கரை இருப்பதால், அவற்றை தவறாமல் சேர்க்க வேண்டும். ஏனெனில் உடலியக்கத்திற்கு சர்க்கரையும் மிகவும் முக்கியம். அதிலும் ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றை ஓட்ஸ் உடன் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்

நீர்ச்சத்து நிறைந்த பழங்கள்

உடல் எடையைக் குறைக்க நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிக அளவில் சேர்த்து வர வேண்டும். அதற்கு சிட்ரஸ் பழங்கள் தான் சிறந்தது. இவற்றில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதோடு, ஆரோக்கியமான கண்களுக்கும் சருமத்திற்கும் தேவையான வைட்டமின் சி வளமையாக நிறைந்துள்ளது.

சீரான ஆற்றலை வழங்கும்

சீரான ஆற்றலை வழங்கும்

எப்போதெல்லாம் உடல் சோர்வுடன் இருப்பது போல் உணர்கிறீர்களோ, அப்போது ஜூஸ்களை குடித்து வந்தால், உடலின் ஆற்றல் அதிகரித்து, சுறுசுறுப்புடன் செயல்படலாம்.

டாக்ஸின்களை வெளியேற்றும்

டாக்ஸின்களை வெளியேற்றும்

முக்கியமாக பழங்களை அதிகம் உட்கொண்டு வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். அதனால் தான் பழங்களை அதிகம் உட்கொள்பவர்கள் பொலிவோடு, ஆரோக்கியமாக இருக்கின்றனர். உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேறினால், தானாக உடல் எடையும் குறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Ways Fruits Help You Lose Weight

Fruits benefit weight loss in ways which will leave you amazed. Take a look at some of these ways in which fruits are an ideal pick to shed calories.
Desktop Bottom Promotion