For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காய்கறிகள் இயற்கையாகவே உங்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்குமாம் தெரியுமா?

இந்தியாவில் வருடந்தோறும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கான பயணத்தின் மிக முக்கியமான பகுதி உணவாகும்.

|

இன்று உலகம் முழுவதும் சிறு வயதினர் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக சர்க்கரை நோய் மாறியுள்ளது. இந்தியாவில் வருடந்தோறும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கான பயணத்தின் மிக முக்கியமான பகுதி உணவாகும்.

Vegetables That Naturally Reduce Blood Sugar

எடை, மரபியல், மன அழுத்தம் மற்றும் செயல்பாடுகள் போன்ற பிற காரணிகள் இரத்த சர்க்கரையை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றன, கடுமையான மற்றும் ஆரோக்கியமான உணவைப் பின்பற்றுவது இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவும். இயற்கையாகவே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் குணம் சில காய்கறிகளுக்கு உள்ளது. இந்த பதிவில் எந்தெந்த காய்கறிகள் இயற்கையாகவே சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூசணிக்காய்

பூசணிக்காய்

ஈரான், மெக்ஸிகோ போன்ற நாடுகளில், பூசணிக்காயும் அதன் விதைகளும் நீரிழிவு நோய்க்கான பாரம்பரிய தீர்வாகப் பயன்படுத்தப்படுகின்றன. பூசணிக்காயும் அதன் விதைகளும் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால் இரத்த சர்க்கரையை சீராக்க சிறந்தவை. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பூசணி பொடிகள் மற்றும் சாறுகள் விலங்குகள் மற்றும் மனிதர்களில் இரத்த சர்க்கரை அளவை திறம்பட குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் சல்போராபேன் எனப்படும் தாவர கலவை உள்ளது, இது மெல்லும்போது அல்லது நறுக்கப்படும் போது உருவாகிறது. இந்த கலவை இரத்த சர்க்கரையை குறைக்கும் திறன் கொண்டது. ஊட்டச்சத்துக்கள் குறித்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், சல்போராபேன் நிறைந்த ப்ரோக்கோலி குறிப்பிடத்தக்க நீரிழிவு எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. இது இரத்த சர்க்கரையை குறைக்கிறது, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது.

வெண்டைக்காய்

வெண்டைக்காய்

வெண்டைக்காயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் போன்ற இரத்த சர்க்கரையை குறைக்கும் கலவைகள் நிறைந்துள்ளன. துருக்கி போன்ற நாடுகளில், வெண்டைக்காயின் விதைகள் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெண்டைக்காய் ஒரு வலுவான நீரிழிவு எதிர்ப்பு தாக்கத்தைக் கொண்ட சேர்மங்களுடன் ஏற்றப்பட்டுள்ளது மற்றும் வெற்றிகரமாக இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும்.

MOST READ: அகோரிகள் ஏன் எப்போதும் நிர்வாணமாகவும், பிணங்களுடனும் வாழ்கிறார்கள் தெரியுமா?

கீரை

கீரை

கீரையில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளன, ஒரு கப் கீரையில் 5 கிராம் புரதம் உள்ளது. கீரை கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய தாதுக்களின் வளமான மூலமாகும், இவை அனைத்தும் இரத்த அழுத்த அளவைக் குறைக்கின்றன, மேலும் இது இரத்த சர்க்கரையை குறைக்க உதவும் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். ஃபைபர், புரதம் மற்றும் தாதுக்கள் மூன்று அற்புதமான கூறுகள், அவை இன்சுலின் அளவை சமப்படுத்தவும், உடல் அதிக ஊட்டச்சத்தை உணரவும் உதவும்.

பூண்டு

பூண்டு

இரத்தத்தில் சர்க்கரையை நிர்வகிக்க பூண்டுக்கு ஆற்றல் உள்ளது. பூண்டு உட்கொள்வது இரத்த குளுக்கோஸைக் குறைக்கும் என்று அறிக்கைகள் காட்டுகின்றன, இது நீங்கள் சாப்பிடாதபோது உங்கள் இரத்த சர்க்கரை அதிகமாகும். இதேபோன்ற ஆய்வுகள் வெங்காயம் இரத்தத்தில் சர்க்கரை அளவை சாதகமாக பாதிக்கும் என்றும் கூறுகின்றன. பூண்டுக்கு கார்போஹைட்ரேட்டுகள் இல்லாததால், இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது என்பதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த இது சிறந்த உணவாகும்.

காலிஃபிளவர்

காலிஃபிளவர்

கிளைசெமிக் குறியீடு அடிப்படையில் காலிஃபிளவர் போன்ற க்ரூசிஃபெரஸ் காய்கறிகள் மிகவும் நன்மை பயக்கும். இந்த காய்கறிகள் பெரும்பாலும் இதய ஆரோக்கியத்திற்கும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளுக்கும் பெயர் பெற்றவை என்பதால் இதன் சர்க்கரை நோய் நிர்வகிக்கும் திறனை பலரும் அறிவதில்லை. இதிலிருக்கும் பைட்டோநியூட்ரியன்களின் தனித்துவமான கலவை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் உடலில் நன்கு உறிஞ்சப்படுகிறது.

MOST READ: நல்ல செய்தி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைக்கபோகிறது? ஊசியின் விலை எவ்வளவு இருக்கும்?

தேங்காய்

தேங்காய்

தேங்காய் நிறைவுற்ற கொழுப்புகளில் அதிகம் உள்ளது, ஆனால் குறைவாகப் பயன்படுத்தினால், இது உங்கள் இரத்த கசர்க்கரை அளவிற்கு பெரிய அச்சுறுத்தலாக இருக்காது. தேங்காய்கள் பல்வேறு வகையான உணவுகளில் சுவை கூட்டப் பயன்படுகின்றன. இருப்பினும், கிளைசெமிக் குறியீட்டையும் ஊட்டச்சத்து நன்மைகளையும் தீர்மானிக்க அதனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிவது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vegetables That Naturally Reduce Blood Sugar

Check out the list of vegetables that naturally reduce blood sugar
Desktop Bottom Promotion