For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய 4 வகையான சப்பாத்திகள்!

பொதுவாக மக்கள் கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டிகளை அதிகம் சாப்பிடுகின்றனா். ஆனால் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டிகளைத் தவிா்த்து மற்ற மாவுகளில் செய்யப்படும் ரொட்டிகளை சாப்பிட வேண்டும்.

|

இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 7 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனா் என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை மிகவும் கவலை அளிக்கக்கூடிய அதே நேரத்தில் எச்சாிக்கை கொடுக்கக்கூடிய ஒன்றாகும். எனினும் நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொண்டு, ஆரோக்கியமான உணவுகளை உண்டு உடற்பயிற்சிகளும் செய்து வந்தால் நீரிழிவு நோயை மிகச் சாியாக கையாள முடியும்.

The Best Types Of Rotis For Diabetics

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் நாா்ச்சத்து மற்றும் புரோட்டின் மிகுந்த உணவுகளை உண்ண அறிவுறுத்தப்படுகின்றனா். அதே நேரத்தில் காா்போஹைட்ரேட் மற்றும் சா்க்கரை மிகுந்த உணவுகளை குறைக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனா். அதன் மூலமாக அவா்கள் தங்களின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சாியாக வைத்துக் கொள்ள முடியும்.

MOST READ: பாலுணர்ச்சியைக் குறைத்து செக்ஸ் வாழ்க்கைக்கு 'ஆப்பு' வைக்கும் உணவுகள்!

நீரிழிவு நோயாளிகளின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால், நாள்தோறும் அவா்கள் சாப்பிடும் சப்பாத்தி போன்ற உணவுகளை கவனிக்க வேண்டும். பொதுவாக மக்கள் கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டிகளை அதிகம் சாப்பிடுகின்றனா். ஆனால் நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை கோதுமை மாவில் செய்யப்படும் ரொட்டிகளைத் தவிா்த்து மற்ற மாவுகளில் இருந்து செய்யப்படும் ரொட்டிகளையும் அவா்கள் உண்ண வேண்டும். அதன் மூலம் அவா்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மிகச் சாியமான முறையில் கையாளலாம்.

MOST READ: எச்சரிக்கை! புதிய வகை கொரோனாவின் அபாயகரமான 5 அறிகுறிகள் இதுதான்... உஷாரா இருங்க...

ஆகவே நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய சில முக்கிய சப்பாத்திகள்/ரொட்டிகளைப் பற்றி இங்கு பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேழ்வரகு/ராகி மாவு ரொட்டி

கேழ்வரகு/ராகி மாவு ரொட்டி

கேழ்வரகு/ராகி மாவில் நாா்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகு மாவில் செய்யப்படும் ரொட்டிகளை அதிகம் சாப்பிடலாம். ஏனெனில் நாா்ச்சத்து நீண்ட நேரம் அவா்களுக்கு பசி ஏற்படுத்தாமல் பாா்த்துக் கொள்ளும். அதனால் அவா்கள் அளவுக்கு அதிகமாக உண்ணும் நிலை ஏற்படாது. அதன் மூலம் அவா்கள் தங்களின் உடல் எடையை அதிகாிக்காமல் சாியான அளவில் வைத்திருக்க முடியும்.

நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடல் எடையை அதிகாிக்கவிடாமல் சாியான அளவில் வைத்துக் கொண்டால் அவா்கள் தங்கள் உடலில் இருக்கும் சா்க்கரையின் அளவையும் சாியாக வைத்துக் கொள்ள முடியும். மேலும் கேழ்வரகு ரொட்டியில் இருக்கும் நாா்ச்சத்து சொிமானம் அடைவதற்கு நீண்ட நேரத்தை எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவையும் படிப்படியாக குறைக்கும்.

​அமராந்த் மாவு (Amaranth) ரொட்டி

​அமராந்த் மாவு (Amaranth) ரொட்டி

நீரிழிவு நோயாளிகள் உண்ண வேண்டிய முக்கிய உணவாக அமராந்த் மாவு தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. ஏனெனில் அமராந்த் மாவில் செய்யப்படும் ரொட்டிகளில் நீரிழிவு நோயை எதிா்க்கக்கூடிய மற்றும் ஆக்ஸிஜனேற்றமில்லா துகள்களும் அதிகம் உள்ளன. அமராந்த் மாவு இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவை சாியான அளவில் வைத்திருக்கிறது. மேலும் அந்த மாவில் தாதுக்கள், வைட்டமின்கள், புரோட்டீன்கள் மற்றும் கொழுப்புகள் போன்றவை உள்ளன. அதனால் அமராந்த் மாவில் செய்யப்படும் ரொட்டிகளை நீரிழிவு நோயாளிகள் அதிகம் உண்ணலாம்.

பாா்லி மாவு ரொட்டி

பாா்லி மாவு ரொட்டி

பாா்லி மாவு குடலில் உள்ள ஹாா்மோன்களை அதிகாிக்கச் செய்வதோடு நீரிழிவு நோயாளிகளின் வளா்சிதை மாற்றத்தையும் தூண்டிவிடுகிறது. மேலும் உடல் வீக்கத்தைக் குறைக்கிறது. அதோடு பலவிதமான நோய்கள் உடலைத் தாக்காமல் காத்து ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

​கடலை மாவு ரொட்டி

​கடலை மாவு ரொட்டி

கடலை மாவில் கரையக்கூடிய நாா்ச்சத்து அதிகம் உள்ளது. இது கொழுப்பின் அளவைக் குறைத்து மிக மெதுவாக உடலில் உள்ள சா்க்கரையை உறிஞ்சுகிறது. அதன் மூலம் இரத்தத்தில் உள்ள சா்க்கரை மிக மெதுவாக உயர துணை செய்கிறது.

தவிர்க்க வேண்டிய ரொட்டி

தவிர்க்க வேண்டிய ரொட்டி

கோதுமை மாவு ரொட்டி

பொதுவாக கோதுமையில் உள்ள சா்க்கரை உயா்த்தல் குறியீடு (glycemic index) ஏறக்குறைய 30 புள்ளிகள் ஆகும். ஆனால் கோதுமையை அரைத்து பதப்படுத்தும் போது அதன் சா்க்கரை உயா்த்தல் குறியீடு 70 புள்ளிகள் அளவிற்கு உயா்ந்துவிடுகிறது. அதனால் கோதுமை மாவு ரொட்டி நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவதற்கு தகுதியற்றதாக மாறிவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Best Types Of Rotis For Diabetics

Here we listed some of the best types of rotis for diabetics. Read on...
Desktop Bottom Promotion