For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் எத்தனை முறை சாப்பிடணும் தெரியுமா?

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சிறிய உணவை சாப்பிடுவது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அதிக கலோரிகளை எளிதில் சாப்பிடலாம். இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

|

நீரிழிவு நோயாளிக்கு, அவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் சவாலான பணிகளில் ஒன்றாகும். சர்க்கரை மட்டத்தில் கடுமையான வீழ்ச்சி பெரும்பாலும் வலிப்புத்தாக்கங்கள் மற்றும் நரம்பு மண்டல சேதங்களுக்கு வழிவகுக்கிறது. இத்தகைய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, அவர்கள் நாள் முழுவதும் என்ன உணவுகளை எத்தனை முறை சாப்பிடுகிறார்கள் என்று பராமரிக்க வேண்டியது அவசியம். இது உணவை சரியான ரீதியில் திட்டமிடுவதன் மூலம் மட்டுமே அடைய முடியும்.

How many meals a diabetic person must have in a day

உடல் ஒழுங்காக இயங்குவதற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் ஆற்றலையும் பெற ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு எடுத்துக்கொள்வது முக்கியமானது என்று குழந்தை பருவத்திலிருந்தே நமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீரிழிவு நோயாளிக்கு இது வரும்போது, ஒரு நாளைக்கு மூன்று பெரிய உணவு மட்டுமே போதுமானதாக இருக்காது. இக்கட்டுரையில் நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும் என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோயாளிகள் எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

நீரிழிவு நோயாளிகள் எத்தனை முறை சாப்பிட வேண்டும்?

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு நாள் முழுவதும் சிறிய இடைவெளியில் கார்போஹைட்ரேட்டுகள் இருந்தால் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாடு சிறப்பாக இருக்கும். ஒரு நேரத்தில் ஒரு பெரிய உணவை உட்கொள்வது, அவர்கள் மருந்துகளை எடுத்துக்கொண்டிருந்தாலும், அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கடுமையாக அதிகரிக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே நேரத்தில் ஒரு பெரிய அளவைக் காட்டிலும், தங்கள் கார்போஹைட்ரேட் மற்றும் குளுக்கோஸ் உட்கொள்ளலை நாள் முழுவதும் சமமாக பரப்ப வேண்டும்.

MOST READ: பழுப்பு கொழுப்பு என்றால் என்ன? அது உங்க இதயத்தை என்ன பண்ணும் தெரியுமா?

ஆய்வு என்ன சொல்கிறது?

ஆய்வு என்ன சொல்கிறது?

நீரிழிவு நோய் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் 2018 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி உணவை உட்கொள்வது மிகவும் சிறந்த வழி. நீரிழிவு நோய் அல்லது முன்கூட்டியே நீரிழிவு நோயாளிகள் என 47 பெரியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்- இரண்டு குழுக்களில், மக்கள் முன்கூட்டியே நீரிழிவு நோயாளிகளாக இருந்தனர், மூன்றாவது குழுவினருக்கு நீரிழிவு நோய் இருந்தது.

உணவு முறை திட்டம்

உணவு முறை திட்டம்

ஒவ்வொரு குழுவின் தன்னார்வலர்களும் 12 வாரங்களுக்கு ஒரு எடை பராமரிக்கும் உணவைப் பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர், அதில் அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று அல்லது ஆறு உணவை சாப்பிட வேண்டியிருந்தது. 12 வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் உணவுத் திட்டம் மாற்றப்பட்டது. 24 வாரங்களின் முடிவில், சிறிய மற்றும் அடிக்கடி உணவை சாப்பிட்ட பங்கேற்பாளர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை மிக எளிதாக நிர்வகிக்க முடிந்தது கண்டறியப்பட்டது.

சிறிய உணவை உட்கொள்வதன் நன்மை தீமைகள்

சிறிய உணவை உட்கொள்வதன் நன்மை தீமைகள்

சிறிய உணவு உங்கள் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது. இரத்த குளுக்கோஸில் பெரிய ஊசலாட்டத்தைத் தவிர்க்க இது உதவுகிறது. இது ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று வேளை மட்டுமே சாப்பிடும் நபர்களுக்கு பொதுவானது. தவிர, இது உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கிறது மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளில் ஈடுபடுவதைத் தடுக்கிறது.

MOST READ: இந்த அளவுக்கு மேல நீங்க தேன் சாப்பிட்டீங்கனா... அது உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...!

எடை குறைப்பு பயணம்

எடை குறைப்பு பயணம்

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், சிறிய உணவை சாப்பிடுவது நல்ல யோசனையாக இருக்காது. ஏனெனில் நீங்கள் அதிக கலோரிகளை எளிதில் சாப்பிடலாம். இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இறுதிகுறிப்பு

இறுதிகுறிப்பு

முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள், காய்கறிகள், கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால், மற்றும் மெலிந்த இறைச்சிகள் போன்ற ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை உண்ணுங்கள். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் உட்பட அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு தேர்வுகள் நல்லது. நீங்கள் எந்த உணவையும் தவிர்க்க வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், குறிப்பாக காலை உணவு, ஏனெனில் அன்றைய முதல் உணவு உங்கள் வளர்சிதை மாற்றத்தைத் தொடங்க உதவுகிறது. பின்னர் நீங்கள் அதிகமாக சாப்பிடுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. உங்கள் மருந்து மற்றும் உணவை அதற்கேற்ப சரிசெய்ய உங்கள் இரத்த சர்க்கரை அளவை கண்காணிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Many Meals a Diabetic Person Must Have in a Day

How many meals a diabetic person must have in a day
Desktop Bottom Promotion