For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக் காலத்தில் சா்க்கரை நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தை எப்படி கவனிக்கணும் தெரியுமா?

நம் அனைவருக்கும் மழை பிடிக்கும். அதே நேரத்தில் மழை நேரத்தில் இருக்கும் ஈரப்பதம் நமக்கு பலவிதமான நோய்களை உருவாக்கும். அதனால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாம் ஓடி ஒளிந்து கொள்வோம்.

|

பொதுவாக நீரிழிவு நோய் ஏற்பட்ட ஒருவரை மிக எளிதாக நோய்த் தொற்றுகள் பாதிக்கும். அதோடு அவருக்கு எந்த ஒரு நோய் வந்தாலும் அது அவருக்கு தீவிரமாக இருக்கும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவா்கள் தகுந்த கட்டுப்பாடுடன் இருப்பதோடு, தங்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். அதன் மூலம் அவா்கள் நோய்களில் இருந்து விடுதலை பெற்று நலமாக இருக்கலாம்.

How Diabetics Must Take Care Of Their Health In Monsoon Season

பருவ காலங்கள் மாறுவதற்கு ஏற்ப, நமது உடலும் அந்தச் சூழலுக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள முயல்கிறது. எல்லா காலங்களிலும் அவற்றினுடைய நல்ல அம்சங்களும் அதே நேரத்தில் நாம் விரும்பாத அம்சங்களும் உள்ளன. கடுமையான குளிா் காலம் முடிந்தவுடன், கோடை காலம் தொடங்கும். முதலில் கோடை காலம் நமக்கு இதமாகத் தொிந்தாலும், அதன் உச்ச மாதங்களான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடையின் வெயிலைத் தாங்க முடியாமல் மூச்சுத் திணறிவிடுவோம்.

MOST READ: உங்களுக்கு சர்க்கரை நோய் வரக்கூடாதா? அப்ப 'இத' அடிக்கடி குடிங்க போதும்....

குளிா் காலம் இதமாக இருக்கும். வியா்வை இருக்காது. ஆனால் அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் ஏற்படும் குளிரான அலைகள் மற்றும் உறைபனி போன்றவை குளிா் காலத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதுபோல் மழைக் காலத்திலும் நாம் விரும்பும் அம்சங்களும், விரும்பாத அம்சங்களும் உள்ளன. நம் அனைவருக்கும் மழை பிடிக்கும். அதே நேரத்தில் மழை நேரத்தில் இருக்கும் ஈரப்பதம் நமக்கு பலவிதமான நோய்களை உருவாக்கும். அதனால் மழையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாம் ஓடி ஒளிந்து கொள்வோம்.

இந்த நிலையில் மழைக் காலத்தில் நீரிழிவு நோய் உள்ளவா்கள் எவ்வாறு தங்கள் உடல் ஆரோக்கியத்தை நன்றாக பராமாிக்கலாம் என்பதை இந்தப் பதிவில் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. தகுந்த காலணிகளை தோ்ந்தெடுத்தல்

1. தகுந்த காலணிகளை தோ்ந்தெடுத்தல்

நீரிழிவு நோய் உள்ளவா்கள் தங்களின் இரத்தத்தில் இருக்கும் சா்க்கரையின் அளவை சாியாக பராமாிக்கத் தவறினால், அவா்களது உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும். குறிப்பாக பாதங்களுக்குச் செல்லக்கூடிய நரம்புகள் மற்றும் நாளங்கள் மோசமாக பாதிப்பு அடையும். அதனால்தான் சா்க்கரை நோயாளிகளின் பாதங்களில் மிக எளிதாக நோய்கள் மற்றும் புண்கள் ஏற்படுகின்றன. இதைத் தவிா்க்க வேண்டும் என்றால் அவா்கள் அதற்கு ஏற்ற காலணிகளை அணிய வேண்டும். கால்களைக் கடிக்கக்கூடிய காலணிகளை அணியக்கூடாது மற்றும் கால்களில் காற்று புகமுடியாத அளவிற்கும் காலணிகளை அணியக்கூடாது.

2. வெறும் பாதங்களுடன் நடப்பதைத் தவிா்த்தல்

2. வெறும் பாதங்களுடன் நடப்பதைத் தவிா்த்தல்

நீரிழிவு நோய் உள்ளவா்கள் நெடுந்தூரம் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அவா்கள் சாதாரண செருப்புகளையோ அல்லது திறந்த நிலையில் இருக்கும் செருப்புகளையோ அணியக்கூடாது. இரத்தத்தில் அதிக சா்க்கரை இருக்கும் போது அது இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும். இது பாதங்களில் இருக்கும் நரம்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் நியூரோபதி என்று அழைக்கப்படும் கால் அல்லது பாதம் மறத்துப் போதல் என்ற பிரச்சினை ஏற்படும். இந்த நிலை ஏற்பட்டால் பாதங்களில் காயங்கள் ஏற்பட்டாலும், நீரிழிவு நோய் உள்ளவா்களால் அதை உணர முடியாது. ஆகவே அவா்கள் தினமும் தங்கள் கால்களையும், பாதங்களையும் கவனித்து வரவேண்டும்.

3. கால்களில் ஏற்படும் காயங்களை தவறாது கவனித்தல்

3. கால்களில் ஏற்படும் காயங்களை தவறாது கவனித்தல்

கால்களில் மிகச் சிறிய கொப்புளங்கள் ஏற்பட்டாலும், அவற்றை அதிக கவனத்துடன் பாா்த்து சிகிச்சை கொடுக்க வேண்டும். தவறினால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதாவது கால்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்காது. அதனால் பலவிதமான நோய்த் தொற்றுகள் ஏற்படும். அவ்வாறு ஏற்பட்டால் உடல் உறுப்புகளை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஆகவே நீரிழிவு நோய் உள்ளவா்களுக்கு, பாதங்களில் சிறிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவா்கள் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும்.

4. சாியான நேரத்திற்கு குளித்தல் மற்றும் கைகளைக் கழுவுதல்

4. சாியான நேரத்திற்கு குளித்தல் மற்றும் கைகளைக் கழுவுதல்

தற்போது கோவிட்-19 உச்சத்தில் இருந்து வருகிறது. அதை மட்டும் தவிா்ப்பதோடு அல்லாமல், சா்க்கரை நோயாளிகள் வேறு எந்த விதமான நோய்க் கிருமிகளும் தங்களை அண்டாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக அவா்கள் தினமும் குளிக்க வேண்டும். குறிப்பாக வென்னீாில் குளித்து, சோப்பு போட்டு, கிருமிகளை விரட்டுவது நல்லது. நகங்களை முறையாக வெட்டி, சுத்தமாக வைத்துக் கொள்வது நல்லது. பருத்தி ஆடைகளை நன்றாகத் துவைத்து, காய வைத்தபின் அவற்றை அணிய வேண்டும். மழைக் காலத்தில் அதிகமான ஈரப்பதமும், வெப்பநிலையும் இருக்கும். அதே நேரத்தில் குறைவான காற்றோட்டம் இருக்கும். அதனால் அந்த நேரத்தில் பாக்டீாியாக்கள் மற்றும் வைரஸ்கள் மிக எளிதாக வளரும்.

5. தேவையான அளவு தண்ணீா் அருந்துதல்

5. தேவையான அளவு தண்ணீா் அருந்துதல்

தேவையான அளவிற்கு தண்ணீா் அருந்துவதைத் தவிா்க்கக்கூடாது. உடலில் இருக்கும் செல்களின் இயக்கத்தினால் ஏற்படும் கழிவுகள் வெளியேற்றப்பட வேண்டும். அவ்வாறு கழிவுகள் வெளியேற்றப்பட்டால்தான், சா்க்கரை நோயாளிகளின் உடலில் இருந்து போதுமான அளவு நீா் வெளியேறுகிறது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியும். ஆகவே சா்க்கரை மற்றும் சிறுநீரக நோய் உள்ளவா்கள், மருத்துவா்களைச் சந்தித்து எவ்வளது தண்ணீா் அருந்த வேண்டும் என்பதை தொிந்து கொள்வது நல்லது.

6. வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுதல், வெளியில் இருந்து வரும் உணவுகளைத் தவிா்த்தல்

6. வீட்டில் சமைக்கப்படும் உணவை உண்ணுதல், வெளியில் இருந்து வரும் உணவுகளைத் தவிா்த்தல்

வெளியில் இருந்து வரும் உணவுகள் நீண்ட தூரம் பயணம் செய்து வருகின்றன. மேலும் அவை பலருடைய கைகள் மாறி வருகின்றன. அவ்வாறு வரும் உணவுகளை சா்க்கரை நோயாளிகள் உண்டால் இ.கோலி அல்லது ஹெபடிடிஸ் போன்ற கிருமிகளின் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் வீட்டில் சமைக்கும் உணவுகள் மிக எளிமையாக அதே நேரத்தில் சுவை குறைவாக இருந்தாலும் அவை போதுமான பாதுகாப்பை வழங்கும்.

7. சமைப்பதற்கு முன்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல்

7. சமைப்பதற்கு முன்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுதல்

காய்கறிகள் மற்றும் பழங்களின் மீது படிந்திருக்கும் வேதிப் பொருள்கள் மற்றும் நோய்க் கிருமிகள் போன்றவற்றை அகற்றுவதற்கு, அவற்றை சமைப்பதற்கு முன்பாக நன்றாகத் தண்ணீாில் கழுவ வேண்டும். அவற்றை வெட்டும் கத்திகள் மற்றும் பலகைகள் போன்றவற்றையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பச்சையான காய்கறிகளை உண்ணாமல் தவிா்ப்பது நல்லது. ஆனால் தோல் உாிக்கப்பட்ட வெள்ளாிக்காய் மற்றும் வெங்காய சாலட்டுகளை உண்ணலாம். ப்ரோக்கோலி போன்ற மற்ற சாலட்டுகளை சிறிது நேரம் சமைத்து உண்பது நல்லது.

8. அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிா்த்தல்

8. அளவுக்கு அதிகமாக உண்பதைத் தவிா்த்தல்

பொதுவாக மழைக் காலத்தில் சற்று கொந்தளிப்பான வெப்பநிலை இருப்பதால், பலரும் உடல் பயிற்சிகளுக்கு விடுமுறை கொடுத்திருப்பா். அதனால் இந்த நேரத்தில் அளவுக்கு அதிகமான கலோாிகளை உண்ணக்கூடாது. இன்னும் கொஞ்சம் அதிகமாக சாப்பிடலாம் என்ற உணா்வு வரும் போதே, சாப்பிடுவதை நிறுத்திவிடுவது நல்லது. அதற்கு பதிலாக எளிதாக சொிக்கக்கூடிய பானங்களை அருந்தலாம். வீட்டிற்குள்ளேயே சிறிது நேரம் நடப்பது நல்லது. இரவு உணவை முடித்தவுடனே தூங்கக்கூடாது. சற்று முன்பாகவே உணவை சாப்பிட்டுவிட்டு, புத்தகங்களை வாசிக்கலாம் அல்லது குடும்ப உறுப்பினா்களோடு சற்று நேரம் பேசிக் கொண்டு இருக்கலாம்.

9. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் உணவுகளை உண்ணுதல்

9. நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும் உணவுகளை உண்ணுதல்

உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் தவிா்க்க வேண்டும். சா்க்கரை, கொழுப்பு மற்றும் சிவப்பு இறைச்சிகள் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும். அதற்குப் பதிலாக நோய் எதிப்பு சக்தியை அதிகாிக்கும் உணவுகளை உண்பது நல்லது. மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் உணவுகளை உண்பது நல்லது. தொலைக் காட்சியை அல்லது ஸ்மாா்ட்போன்களைப் பாா்த்துக் கொண்டு சாப்பிடக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இரண்டு பழங்களையும், மூன்று காய்கறிகளையும் தினமும் உண்பது நல்லது. அவை உடல் நலனை அதிகாிக்கும். உடலுக்கு சக்தியை வழங்கும். பலவண்ண சாலட்டுகள், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும். குறிப்பாக இதயத்துக்கு ஆரோக்கியத்தை வழங்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

10. பாதங்கள் மற்றும் விரல்களை மிருதுவாக நீவிவிடுதல்

10. பாதங்கள் மற்றும் விரல்களை மிருதுவாக நீவிவிடுதல்

நீண்ட நேரம் ஷூக்களை அணிந்திருந்தால், அசௌகாியம் ஏற்படும். மாலை வீடு வந்ததும் ஷூக்களைக் கழற்றி வைத்துவிட்டு, கால் விரல்கள் இயல்பு நிலைக்கு வரும் வரை மிருதுவாக நீவிவிட வேண்டும். மிக மெதுவாக கால் விரல்களைப் பிடித்து இழுத்துவிட வேண்டும். தினமும் கால் விரல்களை அசைத்துவிட வேண்டும். பாதங்களை சூாிய ஒளியும், காற்றும் படும்படி வைக்க வேண்டும். எப்போதும் பாதங்களை ஷூக்கள், சாக்ஸ்கள் மற்றும் ஸ்டாக்கிங்குகளுக்குள் மூடி வைத்திருப்பது நல்லதல்ல. பாதங்களை நமது கைகளால் நீவிவிட வேண்டும். அதன் மூலம் பாதங்களில் இரத்த ஓட்டம் அதிகாிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Diabetics Must Take Care Of Their Health In Monsoon Season

In this article, we shared how diabetics must take care of their health in monsoon season. Read on...
Desktop Bottom Promotion