For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் 15 நிமிஷம் இந்த ஆசனத்தை செஞ்சா சர்க்கரை வியாதிக்கு 'குட்-பை' சொல்லிடலாம்…

நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய மிக சுலபமான யோகாசனம் ஒன்று உள்ளது. அது தான் லெக் அப் வால் போஸ் அல்லது விபரித கரணி.

|

அனைத்து விதமான உடல் நல பிரச்சனைக்கும் தீர்வு வழங்கக்கூடிய ஒன்று யோகாசனம் என்று சொல்லும் போது நம்புங்கள். சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றியது யோகா. உடலை நிதானப்படுத்தவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவக்கூடிய வெறும் உடல் செயல்பாடு மட்டுமல்ல யோகா என்பதை முதலில் புரிந்துக் கொள்ளுங்கள். நீரிழிவு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட யோகா மிகச் சிறந்த தீர்வினை வழங்கக்கூடியது.

Do This Yoga Asana For 15-Minute Daily To Manage Symptoms Of Diabetes

அதிலும், சில யோகாசனங்கள் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுவதோடு, அதன் அறிகுறிகளில் இருந்தும் விடுபட உதவும். அந்த வகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவக்கூடிய மிக சுலபமான யோகாசனம் ஒன்று உள்ளது. அது தான் லெக் அப் வால் போஸ் அல்லது விபரித கரணி. பெயர் புரியவில்லையா? வேறு ஒன்றுமில்லை, சுவற்றின் மேல் கால்களை நேராக நீட்டியபடி படுப்பது தான். அதை பற்றி தான் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம்...

MOST READ: ஏன் இரவு நேரத்தில் மட்டும் நெஞ்செரிச்சல் அதிகமா இருக்குன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்த ஆசனத்தை எப்படி செய்வது?

இந்த ஆசனத்தை எப்படி செய்வது?

* முதலில் வலது புறமாக சுவர் இருக்கும் படி தரையில் அமர்ந்து, கால்களை நீட்டிக் கொள்ளவும்.

* இப்போது மெதுவாக, இரண்டு கால்களையும் சுவற்றின் மீது நீட்டிய படி தூக்கவும். தூக்கும் போது அப்படியே தரையில் படுத்துக் கொள்ளவும்.

* கால்கள் நேராக சுவற்றின் மீது 90 டிகிரி கோணத்திலும், உடம்பு தரையோடு தரையாகவும் இருக்க வேண்டும். கைகளை தரையின் மீது நீட்டி வைத்துக் கொள்ளவும்.

* இதே நிலையில் ஒரு 15 நிமிடங்களுக்கு இருந்தால் போதும்.

* அந்த 15 நிமிடமும் மூச்சை நன்கு இழுத்து விட மறவாதீர்கள்.

* பின்னர், கால்களை மடக்கி, மார்போடு சாய்த்து பிடித்துக் கொண்டு பழைய ஆரம்ப நிலைக்கே உருண்டு வந்து உட்கார்ந்திடவும்.

இந்த ஆசனம் நீரிழிவு நோய்க்கு எவ்வாறு உதவுகிறது?

இந்த ஆசனம் நீரிழிவு நோய்க்கு எவ்வாறு உதவுகிறது?

யோகாசனம் உடல் உறுப்புகளைத் தூண்டுவதோடு, உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டையும் அதிகரிக்கச் செய்கிறது. இதனால் நாளமில்லா அமைப்பில் சமநிலையைப் பெற்றிடவும் உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

சுவற்றின் மேல் தூக்கி வைக்கும் இந்த ஆசனம், தலைகீழ் நிலை மறுசீரமைப்பாகும். இது உங்கள் உடலை முற்றிலுமாக ஓய்வெடுக்க அனுமதிக்கிறது. மேலும், உங்கள் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்த ஹார்மோனின் அளவையும் குறைக்கிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது கடினம் என்பதற்கு அவர்களின் மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது.

பிற நன்மைகள்

பிற நன்மைகள்

இந்த ஆசனம் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உங்கள் மனநிலையை சீராக்கவும் உதவும். இந்த ஆசனத்தை நாளொன்றிற்கு வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே செய்தால், பல வழிகளில் உங்களுக்கு உதவக்கூடும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

இந்த யோகா ஆசனம் மிகவும் எளிதானது. அதுமட்டுமின்றி, எந்த வயதினரும் இந்த ஆசனத்தை செய்திட முடியும். இருப்பினும், இந்த ஆசனத்தை செய்யும் போது ஒருவர் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவற்றையும் தெரிந்து கொள்வோம்...

* உணவு உட்கொண்ட உடனே இந்த ஆசனத்தை செய்யாதீர்கள். ஏனெனில், சாப்பிட்டவுடன் இத்னை செய்யும் போது, இது செரிமான செயல்முறையை மெதுவாக்கி, மந்த நிலையை ஏற்படுத்திவிடும்.

* உங்களுக்கு ஏதேனும் காயம் இருந்தாலோ, அடிப்பட்டிருந்தாலோ இந்த யோகாசனம் செய்வதை தவிர்த்திடவும்.

* இந்த ஆசனத்தை செய்யும் போது உங்களுக்கு ஏதேனும் அசௌகரியம் அல்லது வலி ஏற்பட்டால் உடனே செய்வதை நிறுத்திட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Do This Yoga Asana For 15-Minute Daily To Manage Symptoms Of Diabetes

Do this yoga asana for 15-minute daily to manage symptoms of diabetes. Read on...
Desktop Bottom Promotion