Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
சர்க்கரை நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரி உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? இத படிங்க..
உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான உணவுகள் உதவி புரிகின்றன. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
சர்க்கரை நோய் என்பது இரத்த சர்க்கரை அளவை அதிகமாக இருக்கும் நிலை ஆகும். இந்நிலையில் போதுமான இன்சுலின் கிடைக்காததால் அல்லது இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதால், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது ஏற்படுகிறது. இன்சுலின் என்பது கணையத்தால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஆகும். மொத்தத்தில்த இன்சுலின் குறைபாட்டினால் ஏற்படுவது தான் சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய்.

தற்போது சர்க்கரை நோயால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, ஆபத்தை ஏற்படுத்திவிடும். பொதுவாக உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்கள் தான். இவற்றை ஒழுங்குபடுத்தினால், உடல் எடையை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
உடல் எடையைக் குறைப்பதற்கு ஏராளமான உணவுகள் உதவி புரிகின்றன. ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்க எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே கீழே சர்க்கரை நோயாளிகள் உடல் எடையைக் குறைக்க எந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள்
சர்க்கரை நோயாளிகள் தங்களின் உடல் எடையைக் குறைக்க பின்வரும் காய்கறிகளை தங்களின் உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடல் பருமனைக் குறைக்கலாம். அந்த காய்கறிகளாவன:
* கேரட்
* பச்சை குடைமிளகாய்
* பச்சை பட்டாணி
* தக்காளி
* சோளம்
பழங்கள்

பழங்கள்
பழங்கள் ஒருவரது உடல் எடையைக் குறைப்பதில் பெரிதும் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கீழே எடையைக் குறைக்க சர்க்கரை நோயாளிகளுக்கான பழங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
* ஆரஞ்சு
* தர்பூசணி
* ஆப்பிள்
* வாழைப்பழம்
* திராட்சை

முழு தானியங்கள்
உடல் பருமனால் அவதிப்படும் சர்க்கரை நோயாளிகள், தங்கள் உடல் எடையைக் குறைக்க பின்வரும் 3 தானியங்களை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அவையாவன:
* கோதுமை
* கைக்குத்தல் அரிசி
* ப்ரௌன் பிரட்

புரோட்டீன்
எடையை இழப்பதற்கு புரோட்டின் மிகவும் இன்றியமையாதது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் எடையைக் குறைக்க நினைத்தால், பின்வரும் புரோட்டீன் உணவுகளை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* மீன்
* முட்டைகள்
* நட்ஸ் மற்றும் வேர்க்கடலை
* கொண்டைக்கடலை

கொழுப்பு இல்லாத அல்லது கொழுப்பு குறைவான பால் பொருட்கள்
சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் பருமனைக் குறைப்பதற்கு பின்வரும் 2 பால் பொருட்களை தங்களில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* லாக்டோஸ் அல்லாத பால்
* தயிர்

பிற குறிப்புகள்...
மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளைத் தவிர, சர்க்கரை நோயாளிகள் தங்களின் உடல் எடையைக் குறைக்க பின்வரும் குறிப்புக்களையும் நினைவில் கொள்ள வேண்டும்.
* ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுக்களை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
* உணவில் உப்பை குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* சீசன் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
* ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.
* உணவில் சர்க்கரையைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* முக்கியமாக மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications