Just In
- 5 hrs ago
இன்றைய ராசிப்பலன் (15.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் உணவில் அதிக கவனம் செலுத்துவது நல்லது…
- 16 hrs ago
கசகசா பாயாசம்
- 16 hrs ago
கொரோனாவின் இரண்டாவது டோஸ் ஏன் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது? யாருக்கெல்லாம் இதனால் ஆபத்து?
- 18 hrs ago
பிலவ வருடத்தில் இந்த 5 ராசிக்காரங்க நல்ல பலன்களைப் பெறப் போறாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- Automobiles
செம்ம... லாக்டவுண் அறிவித்த கையோடு உதவி தொகையையும் அறிவித்த மஹாராஷ்டிரா அரசு... ஆட்டோ டிரைவர்கள் உற்சாகம்!!
- News
கொரோனா பாதிப்பை தடுக்க ஆவி பிடிப்பது மிகவும் நல்லது.. எப்படி தெரியுமா? மருத்துவர்கள் குட்நியூஸ்
- Sports
ஈகோ போதும்.. உடனே அவரை கொண்டு வாங்க.. மூத்த வீரரை ஒதுக்கிய வார்னர்.. ஹைதராபாத்துக்குள் மோதல்?
- Finance
அவசரமா 10 லட்சம் வேண்டுமா..? இதுதான் சரியான வழி..!
- Movies
பாத்துடா செல்லம் விழுந்திட போற …ராஷி கண்ணாவை கொஞ்சும் ரசிகர்கள் !
- Education
மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம்! தேர்வு கிடையாது! மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்த உணவுகளை எல்லாம் சாப்பிடக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கணுமா?
உலகிலேயே அதிகளவில் மக்கள் அவஸ்தைப்பட்டு வரும் ஒரு பிரச்சனை தான் சர்க்கரை நோய். குறிப்பாக இந்தியாவில் ஏராளமானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவருக்கு சர்க்கரை நோய் இருந்தால், அவர்கள் தாங்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுவும் சர்க்கரை நிறைந்த உணவுகளை சாப்பிட நினைக்கவே கூடாது. அதோடு கார்போஹைட்ரேட், கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ளக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகளில் ஆரோக்கியமான சில பழங்களும் அடங்கும்.
இக்கட்டுரையில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுகள் எவையென்று தெரிந்து, உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், அந்த உணவுகளை இனிமேல் சாப்பிடாதீர்கள்.

வெள்ளை சாதம்
சர்க்கரை நோயாளிகளுக்கு முதல் எதிரியே வெள்ளை அரிசி சாதம் தான். ஆய்வுகளின் படி, வெள்ளை அரிசி சாதத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அதை உட்கொள்வதன் மூலம் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் எண்ணெயில் பொரித்த மற்றும் மைதா மாவினால் தயாரிக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். ஏனென்றால், அவைகள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். வெள்ளை அரிசிக்கு பதிலாக கைக்குத்தல் அரிசி சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்து, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைக் குறைக்கும்.

பிஸ்கட்
பிஸ்கட்டில் அதிக அளவில் கலோரிகள் இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தக்காளி சாஸ்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் மற்றொரு உணவுப் பொருள் தான் தக்காளி சாஸ். ஏனெனில் இதில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை உள்ளது. அதோடு தக்காளி சாஸில் சோடியமும் அதிகம் உள்ளது. ஆகவே தான் சர்க்கரை நோயாளிகள் எக்காரணம் கொண்டும் தக்காளி சாஸை தொடக்கூடாது என்று சொல்கிறார்கள்.

மில்க் கேக்
ஆய்வுகளின் படி, கேக் பாக்ஸ் கொண்டு செய்யப்படும் மில்க் கேக்கின் மீது ட்ரான்ஸ் கொழுப்புக்களை ஏற்படுத்தும். அதோடு மில்க் கேக்கில் ஹைட்ரோஜினேட்டட் சோயாபீன், உப்பு மற்றும் காட்டன்சீடு ஆயில் போன்றவையும் உள்ளது. ஆகவே தான் மில்க் கேக்கை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.

காபி
காபி சிலருக்கு நல்லது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. ஏனெனில் இதில் 500 கலோரிகள், 9 கிராம் கொழுப்பு மற்றும் 98 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் இப்படிப்பட்ட காபியைப் பருகும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமாகும்.

மிட்டாய்
மிட்டாயில் சர்க்கரை அதிகமாகவும், ஊட்டச்சத்து குறைவாகவும் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதன் பக்கமே போகக்கூடாது. ஒருவேளை சிறிது சாப்பிட்டாலும், அது இரத்த சர்க்கரை அளவை உச்சமடைய வைத்து நிலைமையை மோசமாக்கும்.

உலர் பழங்கள்
உலர் பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதால், அது இரத்த க்ளுக்கோஸ் அளவை உயர்த்தும். அதிலும் இதில் உள்ள சர்க்கரை மிகவும் அடர்த்தியானது. ஆகவே தான் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லதல்ல என்று சொல்கிறார்கள்.

பால்
பால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வைரஸ் தொற்றுகளில் இருந்து உடலைப் பாதுகாக்கும். ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாலை அருந்தினால், அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இன்சுலின் எதிர்ப்பை மோசமாக்கும். வேண்டுமானால், சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு குறைவான அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிக்கலாம்.

வெள்ளை பிரட்
மைதா சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அத்தகைய மைதாவால் தயாரிக்கப்படும் வெள்ளை பிரட்டை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், க்ளுக்கோஸ் அளவு கட்டுப்பாடின்றி அதிகரிக்கும். வேண்டுமானால், சர்க்கரை நோய் உள்ளவர்கள் முழு தானிய பிரட்டை சாப்பிடலாம்.

பிரெஞ்சு ப்ரைஸ்
பிரெஞ்சு ப்ரைஸ் மிகவும் சுவையானதாக இருக்கலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஆபத்தானது. ஏனெனில் பிரெஞ்சு ப்ரைஸில் 25 கிரபம் கொழுப்பு, 500 கலோரிகள் மற்றும் 63 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் இதை உட்கொண்டால் உடல் பருமன் பிரச்சனையையும் சந்திக்க நேரிடும்.

பேன் கேக்
கார்போஹைட்ரேட் அதிகமான உணவுகளுள் ஒன்றான பேன் கேக் சர்க்கரை நோயாளிகளின் நிலைமையை மோசமாக்கும். இதற்கு அதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தான் காரணம். அதோடு இது மைதாவால் தயாரிக்கப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் அறவே இப்பண்டத்தை தொடவேக் கூடாது.

பேக்கன்-கொழுப்பு இறைச்சிகள்
சர்க்கரை நோய் உள்ளவர்களை பேக்கன் மற்றும் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் நிறைந்த இதர இறைச்சிகளை சாப்பிட அனுமதிப்பதில்லை. ஏனெனில், இது சர்க்கரை நோயாளிகளின் நிலைமையை மோசமாக்குவதோடு, மாரடைப்பையும் வரவழைக்கும்.

திராட்சை
திராட்சையில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள், உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க உதவலாம். ஆனால் சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது நல்லதல்ல. இதற்கு திராட்சையில் உள்ள அதிகளவிலான க்ளுக்கோஸ் தான் காரணம்.

மாம்பழம்
பார்த்ததும் அப்படியே அள்ளி சாப்பிடத் தோன்றும் ஒரு பழம் தான் மாம்பழம். ஆனால் இதை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், அது அவர்களின் நிலைமையை மோசமாக்கும். ஏனெனில் ஒரு மாம்பழத்தில் 12.7 கிராம் சர்க்கரையும், 70 கலோரிகளும் உள்ளது. எனவே தான் சர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தை சாப்பிடக்கூடாது.

பப்பாளி
பப்பாளியில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் ஏராளமான அளவில் உள்ளது. அத்துடன் பப்பாளியில் 59 மிகி சர்க்கரை உள்ளதால், இதை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

வாழைப்பழம்
மிகவும் ருசியான வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட கலோரிகள் அதிகம் உள்ளது. அதுவும் ஒரு வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு சர்க்கரை உள்ளது. எனவே நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை சுவைக்கவே நினைக்கக்கூடாது.

தர்பூசணி
சர்க்கரை நோயாளிகளை தர்பூசணி பழத்தை சாப்பிட பரிந்துரைப்பதில்லை. இதற்கு அதில் உள்ள 72 கிராம் சர்க்கரை இருப்பது தான் காரணம். இதில் வைட்டமின்கள் அதிகம் இருந்தாலும், 5 கிராம் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு தர்பூசணி நல்லதல்ல.

ஆப்ரிகாட்
ஆப்ரிக்காட் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல என சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆப்ரிக்காட் பழத்தில் 57 மிகி சர்க்கரை உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு உடனே அதிகரித்துவிடும்.

அன்னாசி
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அன்னாசி மிகவும் ஆபத்தான உணவுப் பொருள். இந்த மஞ்சள் நிற பழத்தில் வைட்டமின் அதிகமாக இருப்பதுடன், சர்க்கரை அதிகமாகவும், 20 கிராமிற்கும் அதிகமான அளவில் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. எனவே தான் இப்பழத்தை சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறாக்ள்.

சைனீஸ் உணவுகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு மற்றொரு ஆபத்தான உணவுப் பொருள் என்றால், அது சைனீஸ் உணவுகள் தான். இதற்கு இதில் உள்ள அதிகளவிலான கார்போஹைட்ரேட், கலோரி, சோடியம் மற்றும் கொழுப்புக்கள் தான் காரணம். இப்படிப்பட்ட உணவை சர்க்கரை நோயாளிகள் சிறிது சாப்பிட்டாலும், அது இரத்த சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரித்துவிடும்.

பாஸ்ட்ரீஸ்
பாஸ்ட்ரீஸ்களில் இனிப்பின் அளவு அதிகம் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடுவது நல்லதல்ல. எனவே சர்க்கரை நோய் இருந்து, டோனட் மற்றும் பேக்கரி இனிப்புக்களை சாப்பிடும் ஆசை இருந்தால், உடனே கைவிடுங்கள்.

பழச்சாறுகள்
பழச்சாறுகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதல்ல. இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள் பழச்சாற்றினை பருகினால், அது அவர்களது நிலைமையை மோசமாக்கும். வேண்டுமானால் சர்க்கரை குறைவான பழங்களால் ஆன பழச்சாற்றினைப் பருகலாம்.

எனர்ஜி பார்கள்
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு எந்த வகையான எனர்ஜி பார்களும் நல்லதல்ல என ஆய்வுகள் கூறுகின்றனர். இதற்கு அதில் இருக்கும் அதிகளவிலான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் தான் காரணம். மேலும் இதில் 450 கலோரிகள் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்கும்.

செரில்கள்
காலை உணவாக பலர் சாப்பிடும் செரில்களில் சுவையூட்டிகள் உள்ளது. இப்படிப்பட்ட உணவை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும். வேண்டுமானால் காலையில் முழு தானிய பிரட்டை டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.

குறிப்பு
சர்க்கரை நோய் இருப்பவர்கள், மருத்துவரை அணுகி தாங்கள் எந்த மாதிரியான உணவை சாப்பிட வேண்டும் என்பதைக் கேட்டு தெரிந்து கொண்டு, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம்.