Latest Updates
-
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள்
சர்க்கரை நோய் இருப்பவர்கள் இந்த பொருட்களை தாராளமாக சாப்பிடலாமாம்... இதில் நல்லதுதான் அதிகமாம்...!
இன்று உலகம் முழுவதும் அதிகளவு மக்களை பாதித்திருக்கும் நோய் எதுவென்றால் அது சர்க்கரை நோய்தான். இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நீரிழிவு நோயுடன் வாழ்வது எளிதானது அல்ல.
அன்றாட வாழ்க்கையைச் சுற்றியுள்ள ஏராளமான கட்டுப்பாடுகள் ஒரு கட்டத்தில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது போல உணர வைக்கலாம். ஆனால், ஆரோக்கியம் முதன்மையானது என்பதை மறந்துவிடக்கூடாது. அதனுடன் ஆரோக்கியமாக வாழ அந்த வாழ்க்கை முறை மாற்றங்களை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

சர்க்கரை நோய் டயட் என்றால் எப்போதும் சலிப்பாகவும் சுவையற்றதாகவும் இருக்க வேண்டியதில்லை. உடலின் தேவைகளைப் புரிந்துகொள்வது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். இது நபருக்கு நபர் வேறுபடுகிறது மற்றும் அதன்படி செயல்பட வேண்டும். சர்க்கரை நோயாளிகள் முழு தானியங்களை சாப்பிடக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அளவாக உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழ உதவும் சில முழுதானியங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் உட்கொள்வதைத் தடுக்க கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வுகளை கவனமாக கண்காணிக்க அவர்களின் மருத்துவர்களால் அடிக்கடி ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஆனால் கார்போஹைட்ரேட்டுகளை குறைப்பது என்பது அவற்றை முற்றிலுமாக தவிர்ப்பது என்று அர்த்தமல்ல. உண்மையில், சில தானியங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய முழு தானியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பார்லி
பார்லி பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளால் தவிர்க்கப்படும் ஒன்றாகும். ஆனால் இது முற்றிலும் தவறானதாகும். பார்லியில் பீட்டா-குளுக்கன் நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.
ஓட்ஸ்
எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஓட்ஸ் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் சர்க்கரை நோயாளிகளும் இதனை சாப்பிடலாம். கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதோடு, மெக்னீசியம் மற்றும் புரதச்சத்தும் இதில் நிறைந்துள்ளது. இந்த கூறுகள் இரத்த குளுக்கோஸ் நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமராந்த்
அமராந்த் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு சத்தான தானியமாகும், இது மற்ற தானியங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த புரத உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. க்ளுட்டன் இல்லாத தானியங்களை விரும்புபவர்களுக்கு அமராந்த் ஒரு சிறந்த தேர்வாகும். இதில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன.
ராகி
ராகி மிகவும் சத்தான தினை வகைகளில் ஒன்று, இது தோற்றத்தில் கடுகைப் போன்றது. இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோய்க்கு மிகவும் பொருத்தமானது. சிறு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.
கம்பு
கம்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. நார்ச்சத்து நிறைந்ததாக இருப்பதால், இது மலச்சிக்கலை குணப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது கம்பில் அதிக இரும்புச்சத்து உள்ளது.
சோளம்
சோளத்தில் வைட்டமின் கே1 நிறைந்துள்ளது, இது இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சோளத்தில் உள்ள பயோஆக்டிவ் பினாலிக் கலவைகள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்துக்கள் எடை மேலாண்மைக்கு உதவுகின்றன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

