அறுவை சிகிச்சையின்றி முழங்கால் கீல்வாத வலியைக் குறைக்கும் ஓர் புதிய சிகிச்சை!

Posted By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

நாள்பட்ட ஆர்த்ரிடிஸ் வலியால் அவஸ்தைப்படும் அதே சமயம் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு இந்த புதிய எளிய முழங்கால் சிகிச்சையின் மூலம் எளிதில் நிவாரணம் வழங்க முடியும். சமீபத்தில் தான் இந்த சிகிச்சையை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்தது. இந்த சிகிச்சையானது குளிரூட்டப்பட்ட ரேடியோ அதிர்வெண் நீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அளவில் ஒத்துழைக்காத உடலைக் கொண்டிருப்பவர்களுக்கு ஏற்றது. இந்த முழங்கால் சிகிச்சையை "கூலீ" என்றும் அழைக்கலாம். இந்த சிகிச்சையின் படி, ரேடியோ அதிர்வெண்களைப் பயன்படுத்தி, முழங்காலில் இருந்து வலிக்கான சிக்னலை மூளைக்கு அனுப்பும் நரம்பு அமைதிப்படுத்தப்படும்.

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery

முக்கியமாக கூலீ முழங்கால் கீல்வாத வலியை முற்றிலும் சரிசெய்யாது. ஆனால் வலியைக் குறைத்து, ஆர்த்ரிடிஸ் நோயாளிகளால் மற்ற செயல்பாடுகளில் அசௌகரியமின்றி ஈடுபட உதவும். இந்த சிகிச்சையின் சிறப்பு முழங்காலில் வலியை உண்டாக்கும் சிக்னலில் இடையூறை உண்டாக்கி வலியை நீக்குவது என சிகாகோவில் உள்ள ரஷ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் வலி நிபுணரான டாக்டர் அமின் சந்தீப் கூறுகிறார்.

2016 ஆம் ஆண்டு பிரபலமான கார்டிசோன் ஊசியுடன் கூலீ சிகிச்சையை ஒப்பிட்டு பார்க்கையில், ஊசியை விட கூலீ சிகிச்சை நீண்ட நாட்கள் வலியில் இருந்து விடுவிப்பது தெரிய வந்தது. கூலீ சிகிச்சையில் முழங்கால் நரம்புகள் எவ்வளவு வேகமாக மறுஉற்பத்தி செய்யப்படுகிறதோ, அதைப் பொறுத்து 6-12 மாதம் வரை வலியைக் குறைக்கும்.

குருத்தெலும்புகள் நீண்ட நாட்கள் கிழிந்து இருந்தால், அது எந்த ஒரு மூட்டு இணைப்பையும் பாதித்து முழங்கால் கீல்வாதத்தை உண்டாக்கி, மூட்டு இணைப்புக்களில் வலி, வீக்கம் போன்றவற்றை உண்டாக்கும். அமெரிக்க அகாடமியின் எலும்பறுவை மருத்துவர்கள், 2010-இல் சுமார் 10 மில்லியன் அமெரிக்கர்களுக்கு முழங்கால் கீல்வாதம் இருந்ததாக கூறுகின்றனர்.

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery

முழங்கால் கீல்வாதத்திற்கு மூன்று வகையான அணுகுமுறைகள் பரிந்துரைக்கப்படுகிறது. அவை உடல் சிகிச்சை, இபுப்ரோஃபென் மற்றும் நாப்ரோக்சென் போன்ற ஸ்டெராய்டல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஓபியாயிட் பெயின்கில்லர் ட்ரமடல்.

ஆனால் இவை எதுவுமே சிகாகோவிற்கு வெளியில் இருந்த 65 வயதான பாட்டி ஃபெலிசியா மெக்லொடானுக்கு உதவவில்லை. இந்த பாட்டியின் வலது முழங்காலில் இருந்த கடுமையான வலியால், அருகில் உள்ள கடைக்கு கூட செல்ல முடியாமல் இருந்தார்.

மேலும் அந்த பாட்டி தன் முழங்காலில் கோல்ப் பந்து அளவில் வீக்கம் இருந்ததோடு, ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவில் கடுமையான வலியால் அவதிப்பட்டதாகவும், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்ய தகுதியற்றவராக இருந்ததால், வலியில் இருந்து நிவாரணம் பெற இதர அணுகுமுறைகளை முயற்சித்தும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்று என்பிசி செய்திக்கு பேட்டி அளித்திருந்தார்.

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery

அதோடு இந்த பாட்டி இனி வாழ்நாள் முழுவதும் ஒரே இடத்தில் முடங்கிவிடுவேனோ என்று நினைத்ததாகவும் கூறினார்.

மே மாதத்தில் மெக்லொடான் கூலீ சிகிச்சையை மேற்கொண்டதில், அவரது உடனடி பலன் கிடைத்ததாம். தற்போது அந்த பாட்டிக்கு முழங்கால் கீல்வாத வலி சுத்தமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த கூலீ சிகிச்சையில் மருத்துவர்கள் சிறப்பு ஊசியின் மூலம் ரேடியோ அதிர்வெண்களை முழங்காலில் வெளியிடுகின்றனர். இந்த சிகிச்சைக்கான செலவு $2,000 முதல் $4,000 வரை ஆகும். ஏனெனில் இந்த சிகிச்சையை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஏப்ரல் மாதத்தில் தான் அங்கீகரித்ததால், இந்த சிகிச்சை குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுகிறது.

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery

இந்த சிகிச்சையினால் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது என சில ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. இந்த புதிய சிகிச்சையை நல்ல அனுபவமிக்க மற்றும் கைத்தேர்ந்த மருத்துவர்களால் மட்டுமே சரியாக செய்ய முடியும். இருப்பினும் சில நேரங்களில் தவறான நரம்புகளில் ரேடியோ அதிர்வெண்கள் கொடுக்கப்பட்டால், அது மிகுந்த அபாயத்தை உண்டாக்கும் என அமின் கூறுகிறார்.

இந்த சிகிச்சையை மேற்கொண்ட நோயாளிகள் 2 நாட்களுக்குள்ளேயே எழுந்து நடக்கக்கூடிய அளவில், குறைவான காலத்தில் நல்ல மாற்றத்தைக் காட்டும். முக்கியமாக இந்த சிகிச்சையானது நிரந்தர தீர்வை வழங்கக்கூடியது அல்ல. தேவைப்பட்டால் இதனை மீண்டும் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

English summary

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery

New treatment introduced Chicago to get rid of Arthritis pain without surgery
Story first published: Friday, June 16, 2017, 13:30 [IST]